கேரளா ஸ்பெஷல் அவல் லட்டு செய்வது எப்படி?
Kerala Special aval Lattu Recipe- கேரளா ஸ்பெஷல் அவல் லட்டு ரெசிப்பி ( கோப்பு படம்)
Kerala Special aval Lattu Recipe- கிருஷ்ண ஜெயந்தியின் போது தயாரிப்படும் பிரபலமான இனிப்பு பலகாரம் போஹா லட்டு. கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரம் ஆவார். கிருஷ்ணருக்கு போஹா மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணரின் பிறந்தநாளாக கொண்டாடப்படும் கிருஷண ஜெயந்தி அன்று பலரும் இந்த போஹா லட்டு எனும் அவல் லட்டுவை தயாரிக்கின்றனர்.
இந்த போஹா லட்டு தயாரிப்பதற்கு நீங்கள் சிவப்பு அவல், வெள்ளை அவல் எதையும் பயன்படுத்தலாம். சிவப்பு அவலின் சுவை மட்டுமே சற்று வித்தியாசமாக தெரியும். பூஜையில் படையலிட்டு வழிபட்ட பிறகு போஹா லட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிமாறப்படுகிறது. இந்த அவல் லட்டு மிகவும் எளிதில் தயாரிக்கூடிய இனிப்பாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தின்பண்டமாகவும் இதை வழங்கலாம். சுப நிகழ்வுகளில் இந்த அவல் லட்டுவை ருசி பார்ப்பதற்கான ரெசிபி தரப்பட்டுள்ளது.
அவல் லட்டு செய்யத் தேவையானவை
வெள்ளை அவல்
வெல்லம்
நெய்
நல்லெண்ணெய்
ஏலக்காய்
தேங்காய் துருவல்
முந்திரி
உலர்திராட்சை
அவல் லட்டு செய்முறை
அவல் லட்டு செய்வதற்கு முதலில் அரை மூடி தேங்காயை துருவிக் கொள்ளவும்.
பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 250 கிராம் வெள்ளை அவல் போட்டு வறுக்கவும். சிலர் எண்ணெய் ஊற்றாமல் கூட வறுப்பார்கள்.
அவலின் நிறம் மாறி கொஞ்சம் மொறுமொறுப்பாக வறுபட்டவுடன் அடுப்பை அணைக்கவும்
அவல் வறுத்த பேனிலேயே மீண்டும் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலை வறுக்கவும்.
மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவல் கருகாமல் பழுப்பு நிறத்திற்கு மாறும்படி வறுக்கவும்.
இதனிடையே கடாயில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு 50 கிராம் முந்திரி மற்றும் 50 கிராம் உலர்திராட்சை போட்டு பொன்னிறத்திற்கு வறுக்கவும்.
அடுத்ததாக 400 கிராம் பவுடர் வெல்லம் மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை அம்மியில் ஆட்டவும்.
இதே போல 6-7 ஏலக்காயை பொடியாக்கவும். அடுத்ததாக வறுத்த அவுலை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு பொடிதாக அரைக்கவும்.
வெல்லம் - தேங்காய் துருவல் கலவை, ஏலக்காய் தூள், பொடியாக அரைத்த அவுல், நெய்-ல் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.
உங்களுக்கு பிடித்தமான சைஸில் உருண்டை பிடிக்கவும். நாம் பயன்படுத்திய வெல்லத்தின் அளவு மிகச்சரியாக இருக்கும். கூடுதல் இனிப்பு சேர்க்க தேவையில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu