தலைக்கு மேல பிரச்னையா? உங்களுக்கான உடனடி தீர்வு இதோ..

Fast Hair Growth Tips in Tamil
X

Fast Hair Growth Tips in Tamil

Fast Hair Growth Tips in Tamil-கேரளப் பெண்களைப் போல உங்களுடைய முடி கருகருவென அடர்த்தியாக நீண்டு வளர சிம்பிள் டிப்ஸ்.

Fast Hair Growth Tips in Tamil-நாம் சந்திக்கும் முடிப்பிரச்னையில் முக்கியமானது முடி உதிர்தல், பொடுகு போன்றவை. இவை எல்லாமே பொதுவானது, எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சனை உண்டாகிறது. இந்த முடி பிரச்சனைகளுக்கு இராசயன ரீதியான தீர்வை விட செல்லாமல் ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலனளிக்கும்.

அதிகமான நீண்ட கூந்தலுக்கு கேரள பெண்களை உதாரணமாக கூறுவார்கள். கேரள பெண்களின் நீண்ட கருகருவென அடர்த்தியாக வளர்ந்திருக்கும் கூந்தலை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கும்.

இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முடி கருகருவென அடர்த்தியாக கேரளப் பெண்களைப் போல நீண்டு வளரும். அது என்ன பொருட்கள்? அது எப்படி தயாரிப்பது?

பொதுவாக முடி கொட்டுவதற்கு நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும், நம் உணவு முறை மாற்றமே மிக முக்கிய காரணம். பாரம்பரிய உணவு முறையிலிருந்து மாற ஆரம்பித்தது முதல் முடி கொட்டும் பிரச்சனையும் அதிகரித்து வந்தது. அதனுடன் சேர்ந்து காற்றில் கலந்திருக்கும் மாசு மேலும் முடி உதிர்வைத் அதிகரிக்க செய்கிறது. இதற்கு சக்தி வாய்ந்த மூலிகைப் பொருள் நம் கூந்தல் வேர்க்கால்களுக்கு தேவை, அதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நாம் எல்லோரும் அறிந்த இரண்டு பொருட்களை வைத்தே இதனை நாம் சாதித்து காட்ட முடியும். அது என்ன தெரியுமா?

முதல் பொருள் கருஞ்சீரகம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் புரோட்டீன், விட்டமின் ஏ, பி, சி, இ, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து வேர்களை தூண்டி விட செய்யும். கருஞ்சீரகத்தை கொண்டு செய்யப்படும் எண்ணெய்கள் மேற்கத்திய நாடுகளில் முடி வளர்ச்சிக்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெந்தயத்தில் இருக்கும் புரோட்டீன், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம் ஆகிய மூலப் பொருட்கள் முடி உதிர்வை தடுத்து வேகமாக அடர்த்தியாக வளர செய்யும்.

இந்த ரெண்டு பொருட்களுடன் இந்த இரண்டு எண்ணைகளை சேர்த்து பயன்படுத்தினால் நிச்சயம் 100% நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மூன்று பங்கு தேங்காய் எண்ணெயுடன், ஒரு பங்கு விளக்கெண்ணெய் சேர்த்து அடுப்பில் லேசாக சூடேற்ற வேண்டும். அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் தலா 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொதிக்க விடுங்கள். லேசாக நுரை போல பொங்கி வரும், அந்த நுரை அடங்கும்வரை கிளறி விட்டு கொண்டே இருங்கள்.

அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு, நன்கு ஆற விடுங்கள்.

ஐந்து மணி நேரம் இந்த இரண்டு பொருள்களும் ஊற வேண்டும். எண்ணெய் ஆறி சீரகம் மற்றும் வெந்தயம் நன்கு ஊறி இருக்கும். அதன் பிறகு எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை கொண்டு வாரம் மூன்று முறை வேர் கால்களுக்கு மசாஜ் செய்து விட வேண்டும். இந்த எண்ணெய் இரவு நேரங்களில் தலைக்கு மசாஜ் செய்து விட்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளித்து விடலாம். அல்லது வாரம் மூன்று முறை லேசாக முடியின் வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.

இப்படி தொடர்ந்து மூன்று மாதம் செய்து வந்தால், உங்கள் இழந்த முடி மீண்டும் வளர்ச்சி அடையும். கொட்டிய இடத்தில் இருந்து மீண்டும் புதிய முடி முளைக்க துவங்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!