கையேந்தி பவன் கெட்டி கார சட்னி- எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

கையேந்தி பவன் கெட்டி கார சட்னி- எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
X

Kayendi Pawan Kara Chutney- கையேந்தி பவன் கெட்டி காரச்சட்னி (கோப்பு படம்)

Kayendi Pawan Kara Chutney- கையேந்தி பவன் கெட்டி கார சட்னியை எப்படி செய்றதுன்னு பாருங்க.. இட்லிக்கு செம டேஸ்ட்டா இருக்கும்...!

Kayendi Pawan Kara Chutney- காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்றதுன்னு தெரியலையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காரமாகவும், புளிப்பாகவும் சட்னி சாப்பிட பிடிக்குமா? அப்படியானால் கையேந்தி பவன் கெட்டி கார சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னி கையேந்தி பவன் கடையில் மிகவும் பிரபலமான சட்னி. இந்த சட்னியை இட்லியுடன் சாப்பிட்டால், சும்மா அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்வது ரொம்பவும் ஈஸி.

உங்களுக்கு கையேந்தி பவன் கெட்டி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.


தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் - 6

* பூண்டு - 10 பல்

* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* புளி - ஒரு துண்டு

* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளி சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.


* பிறகு தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

* தக்காளி வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டு, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிக்க எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கையேந்தி பவன் கெட்டி கார சட்னி தயார்.

Tags

Next Story
ai in future agriculture