வாழ நினைத்தால் .... வாழலாம்.... வழியா இல்லை பூமியில்..... கண்ணதாசன்

Kannadasan Quotes in Tamil

Kannadasan Quotes in Tamil-கண்ணதாசன் 1927 ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ந்தேதி பிறந்தார். புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்
கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

அரசவைக் கவிஞர்
அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்ததுஅண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.பின்னர் தமிழ் தேசிய கட்சியில் இருந்தார். தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர் 1981 ம் ஆண்டு அக்டோபர் 14 ந்தேதி மறைந்தார்.
கண்ணதாசனின் அர்த்தமுள்ள பொன்மொழிகள்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
உனது ஆற்றல் உண்மையிலேயே ஆற்றலாக இருக்க வேண்டுமானால் உண்மை உனக்கு உதவ வேண்டும்
ஒரு பொழுதில் துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும் இருளிலும் வழி தெரியும் இயக்கம் ஏனடா தம்பி தூக்கம் கொள்ளடா
மேடு இருந்தால் பள்ளம் உண்டு பார்த்து செல்லடா நல்ல மேன்மை உள்ள மனிதருடன் உறவு கொள்ளடா
கர்மத்தை செய்ய முடியாதவனும் தர்மத்தை காக்க முடியாதவனும் வாழ்வதில் அர்த்தமில்லை
முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினாள் உன் மீதே குற்றம் சாட்டிப்பழகு
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
எதுவுமே இல்லை என்று சொல்பவன் சோம்பேறி உண்மைகளைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சி இல்லாதவன் தேடாதவர்களுக்கு தெய்வம் தெரியாது
நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு பயப்படுவதில்லை அர்த்தமில்லை

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் எப்படியாவது வந்துதானே தீர வேண்டும்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அதிகாரவர்க்கத்தின் கையில் கொடுத்தால் அது கேலிக்கூத்தாக்கி விடும்
தலைவர்கள் புரிந்து கொள்ளும் முன்னே வரம்பு மீறிப் புகழாதீர்கள் அந்த பின்பு எங்களை வேண்டி வந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்காதது வெட்கப்பட வேண்டிய செய்தியை தவிர வருத்தப்பட வேண்டியதில்லை
ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றாதே அதை எந்த பெண்ணிடமும் ரகசியத்தை சொல்லாதே
திருடனாக இருந்த வால்மீகி ராமாயணம் எழுதும் கவிஞன் ஆகி விடவில்லையா குற்றவாளிகள் உற்பத்தி செய்யப் படுகிறார்கள் அவர்கள் தாங்களாகவே உருவாவதில்லை
நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞனடா
நம் வாழ்க்கையை நாமே நடத்தி செல்ல கடவுள் 4000 வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்
எல்லோருமே ஏழைகளாக இருந்தாலும் ஏழை என்ற அடிப்படையில் கூட ஒற்றுமை இல்லாத பூமி அல்லவா இது
காதலுக்கு ஜாதி இல்லை உண்மைதான் ஆனால் நீதி உண்டு
மலரைப் பார் கொடியைப் பார் வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே அதை பார்க்க முயன்றால் நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது
ஒற்றுமை வலிமை என்பதை அறிந்தால் ஊர்கள் துலங்குமடா ஒவ்வொரு கணமும் உழைத்திட வந்தால் ஏழ்மை நீங்குமடா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளம் நிலைக்காது
உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக் கொள் 10 பேருக்கு உதவுகிறது என்று வைத்துக் கொண்டால் எந்த பத்து பேரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதோ அவர்களுக்கு உதவு
நாடு என்பது நாளும் கலந்தது நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்
ஒருவரிடம் உண்மையிலேயே திறமை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும் ஆனால் அவரிடம் பணி இருக்கிறதா என்பதையே முதலில் சோதிக்க வேண்டும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
எழுபது வயதில் எதை நீங்கள் நேசிப்பீர்கள் அமைதி அமைதி அமைதி அதை இருபது வயதிலேயே நேசிக்கத் தொடங்கினால் ஓரளவு வந்து விடும்
யாராவது உங்களை அவமானப்படுத்தினால் ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்க
நண்பன் தீயவன் என்றால் விலகிவிடு நல்லவன் என்றால் நம்பிவிடும் விலகி அவனை நம்பத் தொடங்காதே நம்பியவனை விலக தொடங்காதே.
உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம் உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம் உன் நல்ல காது நாசமாக வேண்டாம்
எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இரண்டும் ஒன்று சேராது
பாவமே செய்வது என்றாலும் பகிரங்கமாக செய்துவிடு தண்டனையும் அப்பொழுது முடிந்துவிடும்
திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவன் என்று கருதாதே
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
உன்னதமான திறமை முதன்முதலில் ஜொலித்து ஆரம்பிக்கும் இடம் பணிவு
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
உன் அந்தரங்கங்களை யாரிடத்தும் பகிர்ந்து கொள்ளாதே
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
யாரையோ ஊரையோ காப்பாற்ற வேண்டுமானால் பொய் பேசு இல்லையேல் பொய்யே பேசாதே
நான் என்று பேசியவர்கள் எல்லோருமே தலைகுப்புற விழுந்து இருக்கிறார்கள்
காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்
நம்முடைய நாட்டில் எல்லோருமே நல்ல நடிகர்கள் இதில் ஏன் சிலருக்கு மட்டும் பட்டம் கொடுக்கிறார்கள்
தத்துவஞானிகள் தான் தரணியின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள்
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும் எந்த விமர்சனத்தையும் தூக்கி எறிய வேண்டும்
விசுவாசம் என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இருப்பதில் பொருள் இல்லை மறுபக்கத்திலும் அது இருந்தாக வேண்டும்
எந்த விஷயமும் புரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசம்
நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு தீமை செய்தவனை மறந்து விடு
எதிரி எப்போதும் எதிரிதான் நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்
இரக்கமில்லாத அவனிடம் பணம் போய் சேர்கிறது பணம் இல்லாதவனை இரக்கம் பிடித்தாட்டுகிறது
வெற்றியினால் ஆணவம் கொண்டவன் தோல்வியை அருகே அழைக்கிறான்
பணத்தை மதிக்கும் தலைவனை நீ மதிக்காதே
பாட்டு பாடி பறந்து போகும் பறவை ஜாதியை உன்னை பார்த்தும் கூட திருந்தலையே மனித நீதியே
எதை சிந்திக்கிறாய் என்பதில் அல்ல எப்படி சிந்திக்கிறாய் என்பதில் தான் புதிய கருத்துக்கள் வெளிவருகிறது
வெற்றி பெற்றவர்களே தோல்விக்காக காத்திருங்கள் தோல்வி பெற்றவர்களே வெற்றிக்காக காத்திருங்கள்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
விதி என்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடல் உண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே
அவன் மடையன் இவன் மடையன் என்று பேசாதே மடையனை மட்டும் அடையாளம் கண்டு கொள்பவனே புத்திசாலி என்று மக்கள் நினைக்க மாட்டார்கள்
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
அன்பு என்பது ஒரு வழிப்பாதை அல்ல, கொடுக்கலாம் வாங்க கூடாது என்பதற்கு
துன்பங்களை தூசுகள் ஆக்கிவிட வேண்டும் அப்போது விசாலமான இதயம் பிறக்கும் வெளிச்சம் மிகுந்த உலகம் தோன்றும் அழகு மிகுந்த வாழ்வு அமையும்

கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்றப் பட்டாலும் பிறரை ஏமாற்றாதே உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய் தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது
கீதையை தேவ நீதியாக நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மனித நீதியாக உன் கண் முன்னால் தெரியும்
நீ நல்ல தொழிலாளியாக இருந்தால் மோசமான முதலாளி கூட உன்னிடம் அன்பு காட்டுகிறான் கருணை காட்டுகிறான்
விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் உன் காலடி சுவடுகளில் ஜாக்கிரதையாக இரு அதன் பெயரை பகவத் கீதை கூறும் சுதர்மம்
நல்ல நேர்மையிலும் தன் வியர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா
நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும
இன்பம் வந்தாலும் கேலி செய்கிறார்கள் துன்பம் வந்தாலும் கேலி செய்கிறார்கள்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்
மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
சந்தர்ப்பம் கிடைப்பதால் திறமையற்றவன் உயர்ந்து விடுவதும் உண்டு அது கிடைக்காததால் திறமை உள்ளவன் இடம் தெரியாமல் போவதும் உண்டு
விளைந்து வரும் உள்மனதின் விருப்பங்களை துறந்தவன் தன்னில் தானாகி தனக்குள்ளே மகிழ்ச்சி பெற்றால் அப்போது அவன் நிலையான புத்தி உடையவன் என்று அழைக்கப்படுகிறார்
எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுப்பாய் எதை வெறுக்கிறாய் அதை ஒரு கட்டத்தில் விரும்புவாய் ஆசனத்தில் உட்கார்ந்தாலும் தரையில் உட்கார்ந்தாலும் இரண்டும் அவன் கொடுத்ததே.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu