kambu in tamil: இத்துனூண்டு கம்பு தானியத்தில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கோங்க

kambu in tamil: இத்துனூண்டு கம்பு தானியத்தில் இத்தனை நன்மைகளா?  தெரிஞ்சுக்கோங்க
X
கம்பு நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதனை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என பல்வேறு வகையிலும் சாப்பிடலாம்

கம்பு திணை தானிய வகைகளுள் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து பயிரிடப்பட்ட மிகப் பழமையான பயிராகும். மேலும் இது உலகின் அதிக அளவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் ஆறாவது மிக முக்கியமான தானியமாகும். கம்பு தானியங்கள் சிறியதாகவும் வட்ட வடிவிலும், மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.

அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்களாக இருக்கின்றன. இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று தான் “கம்பு”. இந்த கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பு உணவாக உட்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.


கம்பில் இருக்கும் சத்துக்கள்:

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அவல் என ஏதேனும் ஒரு வழியில் உணவில் சேரத்துகொள்வது அவசியம்.

ஊட்டச்சத்துக்கள்:

100 கிராம் கம்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

  • கால்சியம் சத்து – 42 கிராம்.
  • இரும்புச் சத்து – 11 முதல் 12 மி. கிராம்.
  • வைட்டமின் B 11 – 0.38 மி. கிராம்
  • ரைபோபிளேவின் – 0.21 மி. கிராம்
  • நயாசின் சத்து – 2.8 மி. கிராம்

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.


கம்பு பயன்கள்

உடல் பலம்

கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவாகும். இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்கும்.

நீரிழிவு

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்லது இந்த கம்பு.

நோய் எதிர்ப்பு

சிறுதானியமான கம்புவில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பு உணவை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.


நார்சத்து

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும். உடல் எடை குறைப்பு பசி அதிகம் எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடலில் கட்டுப்பாடில்லாமல் எடை கூடிவிடுகிறது. இவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச்செய்து, இவர்களின் உடல் எடையை குறைக்கும்.

குடல் புற்று

கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இளமை தோற்றம் கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.


தாய்ப்பால் சுரப்பு

குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு ஒரு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும் அல்லது நின்றுவிடும். இந்த தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.

ரத்த கொதிப்பு

கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.


முடிகொட்டுதல்

இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தலைமுடி கொட்டுதல் ஆகும். முடி நன்கு தழைத்து வளர “கெராட்டீன்” எனும் புரதம் அவசியம். இது கம்பு உணவில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும்.

உடல் சூடு

தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.

எச்சரிக்கை

கம்பு சரியாக சமைக்கப் படாவிட்டால் அதில் உள்ள ஆக்சலேட்டு எனும் பொருள் சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப் படுகிறது.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்