வாழ்க்கைக்கு வழிகாட்டும் காமராஜர் பொன்மொழிகள்.

Kamarajar Tamil Quotes
X

Kamarajar Tamil Quotes

Kamarajar Tamil Quotes-மக்கள் மனம் கவர்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் பொன்மொழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Kamarajar Tamil Quotes

பெருந்தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்போம். எளிமையின் சிகரமான இவர் இந்திய பிரதமரையே உருவாக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்தார். அதனாலேயே அவரை கிங் மேக்கர் என அழைத்தனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தூணாக நின்றவர் காமராஜர். தமிழகத்தில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் காமராஜர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் பெருமையுடன் அழைத்தனர்.

மக்கள் மனம் கவர்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் "காமராஜர் பொன்மொழிகள்".

பணம் இருந்தால் தான் மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்கு தேவையில்லை

ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.

பிறர் உழைப்பைத் தன் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.


படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சட்டமும், விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!

அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது.

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.

கலப்பு மணம், சமபந்தி உணவு இவைகளால் சாதி அழியாது. மனிதனின் மனம் புரட்சிகரமான மறுதலைப் பெற்றால்தான் சாதி ஒழியும்.

நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்.

எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்!

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.

உன் பிள்ளை ஊனமாய்ப் பிறந்தால் மட்டுமே சொத்து சேர்த்துவை.

சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக்காதே!

பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.

அளவுக்கு அதிகமாகப் பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ அதே போல் குறைவாகப் பேசுவதும் தீமையே.

எந்தவிதமான அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்படவேண்டும். பொறுப்பு உணர்ச்சி இல்லாத அதிகாரம் நிலைக்காது.

ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும். லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும்.

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்


அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும், கல்மனம் கொண்டவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!