Kadi jokes in tamil for students: வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.. கடி ஜோக்ஸ்

Kadi jokes in tamil for students: பொதுவாக அனைவருக்குமே காமெடி மிகவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நகைச்சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் சில கடி ஜோக்ஸ் பார்க்கலாம் வாங்க.
தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?
செலவாகும்
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி
அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டைப் பூச்சி
கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது?
முஸ்ஹரூம்
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
தொப்பை…
நோயாளி: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்…டாக்டர்…?
டாக்டர்: 5 லட்ச ரூபாய் ஆகும்ங்க…!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?
ஆசிரியர்: எந்த ஆங்கில வார்த்தை நீளமானது?
மாணவன்: Smile – தான்.
ஆசிரியர்: இரண்டு Sகளுக்கு இடையே Mile இருக்கே!
என்னதான் பெரிய திருப்பி வீரனா இருந்தாலும்,
வெயில்அடிச்சா, அடிக்க முடியாது.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்.
ஆனா ஓடுற பஸ்ஸுக்கு முன்னாடி
நிக்கமுடியாது.
கொலுசு போட்டா வரும்.
ஆனா,சத்தம் போட்ட கொலுசு சத்தம் வருமா!
IJKL க்கு எனிமி யாரு?
MN தான்-/
OP ரேசனுக்குப்போனா?
Qல தான் நிக்கும்…
RSக்கு தலை வலிச்சா?
குடிக்கும்…
UVWXYக்கு பறக்கனும்னா?
Zல போகும்.
இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு
உரியவும் முடியாது.
பல்லு.. நாக்கை பார்த்து சொல்லுச்சாம்: நாங்க 32 பேரும் சேர்ந்து ஒரு தடவை இறுக்கி அழுத்தினால் நீ காலி..
நாக்கு.. சிரிச்சிகிட்டே சொல்லுச்சாம்: நான் தனி ஆளு தான். ஆனா ஒரு வார்த்தை மாத்தி பேசுனா நீங்க 32 பேரும் காலி..
பக்கத்து வீட்டுக்காரன் காய்ச்சல்ல இருக்கானு பாக்க போனேன்
என்னய்யா உடம்பு இப்படி கொதிக்கிதுன்னு ??? கேட்டா
நெருப்புடா.. கபாலிடா.. ங்குறான்
சாவுடானு சொல்லிட்டு வந்துட்டேன்..!
மனைவி: ஏங்க நான் வரும்போது மட்டும் ஏன் கண்ணாடி போடுறிங்க
கணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் போட்டுக்க சொன்னாரு..!
வேடந்தாங்களுக்கு பறவை எங்கிருந்து வருகின்றன?
விடை: முட்டைல இருந்துதான்
கல்யாண வீட்டுக்கு ஏன் மாட்டையும் கன்றுக்குட்டியையும் கூட்டிட்டு வரமாட்றாங்க?
விடை: ஏன்னா கல்யாணம் ஒரு ஆயிரம் காலத்து பயிர், மாடும் கன்றுக்குட்டியும் அத மேஞ்சிடும்
இரண்டு பேர் ஒரு Hotel-க்கு போய் ஆலுக்கு நாலு நாலு இட்லி order பன்றாங்க இந்த இட்லிய சாப்பிட்டதும் Food poison ஆகிடுச்சு ஏன்?
விடை: ஏன்னா அது நாலு நாள் இட்லி
ஒரு பையன் அவனோட 500 ரூபாய் நோட்டையும், 2000 ரூபாய் நோட்டையும் சாக்கடையில போட்டுடான் first எதை எடுப்பான்?
விடை: அவன் First வாந்தி எடுப்பான்.
ரோட்டுல போற நிறைய பேர் ஒருத்தர் கிட்டமட்டும் அடிக்கடி Time கேக்குறாங்க ஏன்?
விடை: ஏன்னா அவரு Watchman
பொண்டாட்டிய விட பொண்டாட்டி புடவைதான் ரொம்ப மரியாதை தருது!!! எப்படி?
பீரோ திறந்தா உடனேயே கால்ல விழுது!!!
புயல் அடிக்கும்போது ஒருத்தவன் அழுக்கு சட்டையை கைல வச்சிக்கிட்டு நின்னானா… ஏன்?
அப்போ தான் புயல் கரைய கடக்கும்.
நோயாளி: டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்…!
மருத்துவர்: அப்படியா..? சும்மாவா இருந்தீங்க….?
நோயாளி: இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்…!
டாக்டர்: நம்ம ஹாஸ்பிடல் விளம்பரத்திற்கு நல்ல பஞ்ச் டைலாக் சொல்லு ?
நர்ஸ்: கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு போங்க… பணம் எங்களுக்கு… பொணம் உங்களுக்கு…
நோயாளி – என்ன டாக்டர் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடியே மூக்குல பஞ்ச வைகிறீங்க?
டாக்டர் – எப்படியும் ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்றம் வைக்க போறோம் அத எப்ப வச்சா என்ன?
தண்ணீர்-அ “தண்ணி” னு சொல்லலாம்
பன்னீர்-அ “பன்னி” னு சொல்ல முடியுமா?
பஸ்-அ பின்னால தள்ளினா என்ன ஆகும்?
பின் வளஞ்சிடும்.
ஆசிரியர் – நா இன்னும் ஒரு வருஷதுல ரிடைர் ஆக போறேன்
(பையன் அழுகிறான்)
ஆசிரியர் – அழுவாதபா நா இன்னும் ஒரு வருஷம் இருப்பேன்
பையன் – நா அழுவுரதே அதுக்கு தான் சார்
பையன்: தரகரே! பொண்ணு கருப்பா இருந்தாலும், சிவப்பா இருந்தாலும் பரவாயில்லை…
ஆனா பொண்ணு கண்டிப்பா ஸ்மார்ட் போன் வச்சிருக்கணும்..
தரகர்: ஏன் சார்?
பையன்: ஏனா ஸ்மார்ட் போன் வச்சிருக்க பொண்ணு தான் குனிஞ்ச தலை நிமிராம போகும்..
பெண்: ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்.
பெண்: என் அஞ்சு வயது பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.
கஸ்டமர் கேர்: ஐயோ பாவம் அப்படினா உடனே டாக்டர்கிட்ட கூட்டிடு போங்க மேடம்.
பெண்: இல்லை அந்த சிம்ல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி அவன் பேசும் போது காசு போகுமா சார்?
கஸ்டமர் கேர்: ????
Wife: ஏங்க சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன் எனக்கு எவ்ளோ சம்பளம் கொடுப்பீங்க?
Husband: உனக்கு எதுக்குடா சம்பளம் நீ சமைக்க ஆரமிச்சிட்டாலே என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu