கால்சியம் அதிகம் கிடைக்கணுமா? ஜூஜுபி, இந்த பழத்தை சாப்பிடுங்க
Ber Fruit in Tamil
Ber Fruit in Tamil
இயற்கையின் கொடையான பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. அவற்றில் சுலபமாக கிடைக்கும் பழங்கள் மலிவு விலையில் கிடைப்பதால், அதன் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை. இதில் ஒன்று தான் இலந்தைப்பழம்.
கிராமங்களில் வயல்வெளி மற்றும் காலியிடங்களில் தானாக வளரக்கூடியவை. இலந்தையில் நாட்டு இலந்தை, காட்டு இலந்தை என இரு வகை உண்டு. இதில் நாட்டு இலந்தை வேர், இலை, பழம் என அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. வறட்சியான பகுதிகளிலும் தானாகவே வளரும் இலந்தை மரத்திற்கு உரம் கூட தேவையில்லை. சிறிது மழை போதும். அதனால் தான் சிறிய பேரிட்சை என்றும் அழைக்கப்படுகிறது இந்த இலந்தைப்பழம். இந்த பலத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் கூறுவார்கள்
ஜூஜுபி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் தாயகம் சீனா. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது.
இலந்தையில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இலந்தையில் 74% கலோரி, 17 % மாவுப் பொருள், 0.8 % புரதம் மற்றும் தாது உப்புகள் உண்டு. இரும்புசத்தும் நிறைந்துள்ள இலந்தைப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டது.
உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். எலும்புகள் மட்டுமல்ல, பற்களும் உறுதிபெறும்.
இலந்தை சாப்பிட இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து, ரத்த ஓட்டம் சீராகும்.
பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாகும். பித்தம் அதிகமானால், ரத்தம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படும். எனவே, பித்தத்தை நீக்கும் இலந்தையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலைப்பட்டு, ரத்தம் சுத்தமாகும், பித்தம் தொடர்பான வியாதிகளும் வராது.
பயணம் செய்யும்போது அலர்ஜி ஏற்படுகிறதா? கவலையே வேண்டாம். இலந்தை பழத்தை சாப்பிட்டால், வாந்தியும், தலைச்சுற்றலும் ஓடிப்போகும். உடல்வலியை போக்கும் திறன் கொண்டது இலந்தைப்பழம். அதிலும் 40 வயதைத் தாண்டியவர்கள் தொடர்ந்து இலந்தைப்பழத்தை உண்டு வந்தால், அவர்களுக்கு உடல்வலி போய், தெம்பு வரும்.
பசியின்மையால் அவதிப்படுபவர்களும், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களும் தொடர்ந்து இலந்தையை உண்டால், செரிமான சக்தி அதிகரித்து பிரச்சனைகள் நீங்கும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடிய இலந்தைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள், புரதம், தாது உப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது. பற்களும் உறுதிபெறும். கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
பெரும்பாலும் 40 வயதைத் தாண்டிய சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும் இந்த உடல்வலியைப் போக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து, அதில் இலந்தைப்பழம், நாட்டு சர்க்கரை, பெருங்காயம், உப்பு சேர்ந்து கொட்டை அதிகம் உடையாதவாறு நன்றாக இடித்து சாப்பிட்டு பாருங்க. அதன் சுவையே தனி
இதையே வில்லை போல தட்டி ஒருநாள் வெளியில் காய வைத்து உலர்ந்ததும் சாப்பிட சுவையாக இருக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu