உங்கள் வாகனம் மீது காவல் துறை வழக்கு உள்ளதா? தெரிந்துகொள்ள இதை படிங்க..
தமிழக காவல் துறையில் பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைனில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் காவல் நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. மேலும் அதன் நிலையை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் கைது செய்யப்பட்டவரின் விபரம், எஐஆர் மற்றும் சிஎஸ்ஆர் நிலை குறித்தும் ஆன்லைனிலேயே அறிந்துகொள்ளலாம்.
அதேபோல் வாகனங்களின் மீது பதியப்படும் வழக்குகள் பற்றியும் ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளும் வசதியையும் கொண்டுவந்துள்ளது.
ஒரு வண்டியின் மீது போலீஸ் வழக்கு உள்ளதா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது?
அந்த வாகனத்தின் மீது போக்குவரத்து விதிமீறலால் அபராதம் தொகை (Traffic challan) கட்டாமல் உள்ளது பற்றி அறிந்து கொள்வது எப்படி?
நீங்கள் வாங்கும் வாகனத்தின் மீது வழக்கு உள்ளது என்பதை பற்றி அறிய..
முதலில் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/CitizenVehicleHome?46
நீங்கள் வாங்கிய வண்டியின் பதிவெண் (Register Number) அல்லது சேஸ் எண் (Chassis Number) அல்லது இன்ஞின் எண் (Engine Number) கொடுத்து Security code கொடுத்து Submit செய்ய வேண்டும்.
நீங்கள் வாங்கும் வாகனத்தின் விதிக்கப்பட்ட அபராதம் ஏதேனும் கட்டாமல் இருந்தால் அதனை சரி பார்ப்பது
லிங்க்கை கிளிக்ந: https://echallan.parivahan.gov.in/index/accused-challan செய்து விட்டு பதிவெண் (Register Number) மற்றும் சேஸ் எண் (Chassis Number) கடைசி 5 நெம்பரை கொடுத்து CAPTCHA-யை கொடுத்து விட்டு Get detail கிளிக் செய்ய வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu