தற்கால வாழ்க்கைமுறையில் நேர்மை அரிதாகி வருகிறதா?

தற்கால வாழ்க்கைமுறையில் நேர்மை அரிதாகி வருகிறதா?
X
Future Lifestyle News -எப்போதும் நான், எனது மற்றும் எனக்கு என்று தான் பார்க்கின்றனரே தவிர, யாரும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை

Future Lifestyle News - சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய செய்தி, நமது வாழ்க்கை முறை எவ்வாறு மாறி வருகிறது என கவலை கொள்ள செய்தது. வறுமையிலும் நேர்மை என ஔவையார் கூறியது ஏட்டினில் மட்டுமே உள்ளதா என எண்ணத் தோன்றியது.

விஷயம் இதுதான், நண்பர் விமான நிலையம் செல்வதற்காக தூரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு வாடகை வண்டி புக் செய்துள்ளார்.

நியாயமான கண்ணியமான நபராகத் தோன்றிய ஓட்டுநர், வேறு பாதையை தேர்ந்தெடுத்து சென்றுள்ளார். ஏன் இந்த பாதையில் செல்கிறீர்கள் என கேட்டதற்கு, வழக்கமான பாதை நெரிசல் உள்ளதால், சரியான நேரத்தில் சென்றடைவதற்காக செல்வதாக கூறியுள்ளார். அதற்கு இன்னும் பணம் அதிகமாகுமே என கேட்டதற்கு ஆமாம் என ஓட்டுநர் கூறியுள்ளார். இதன் காரணமாக வழக்கமான கட்டணத்தை விட இரட்டிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது. ஓட்டுநர் நேர்மையாக இருந்தால், பயணத்தைத் தொடங்கும் முன்பே விளக்கியிருப்பார் என கூறி வருத்தப்பட்டார்

இவர்கள் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுநர்களும் பயணிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, வெறும் இரண்டு கி.மீ.க்கு ரூ.100, கட்டணம் வசூலிக்கின்றனர். பெரும்பாலான ஆட்டோக்களில் செயல்பாட்டு மீட்டர் இல்லை, மேலும் மீட்டர் கட்டணத்தை மட்டும் இயக்கி வசூலிப்பது மிகவும் அரிது.

அடுத்த ஏமாற்றப்படும் இடம், டூ வீலர் ஒர்க் ஷாப். சர்வீசின் போது வாகனத்தில் உள்ள பெட்ரோல் கிட்டத்தட்ட முழுமையாக தீர்ந்துவிடும். கேட்டால், வாகனத்தின் பாகங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டது என்ற ஒரே பதில் வரும்.

ஒரு சில பெட்ரோல் பம்புகளிலும் நாம் கூறும் அளவை ஒருபோதும் நிரப்புவதில்லை.

காய்கறி விற்பனையாளர்கள், விலையை உயர்த்தி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், கேள்வி கேட்கும் போது, ​​போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் மளிகைக்கடைகளில் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டது. இத்தனைக்கும், ஏற்கனவே கடையில் இருந்த பொருள்கள் தான். ஆனால், போக்குவரத்து செலவு, கம்பெனி விலையேற்றி விட்டது என கூறி அதிக விலைக்கு விற்றனர். நமக்கும் அப்போது அது அத்தியாவசியம் என்பதால், மறுபேச்சு பேசாமல் வாங்கி சென்றோம்.

இது புத்திசாலித்தனமான வணிக உத்திகள், மிகவும் திறமையாக சந்தைப்படுத்தப்படுகிறது.

உணவகங்களில், குறிப்பாக பீக் ஹவர்ஸில் பார்சல் கவுண்டர்களில் ஒருவர் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருப்பதால், உங்கள் பார்சல் ஆர்டர் செய்தது போல் இருக்காது.

பிளம்பர்கள் அவசரகால சூழ்நிலைகளை சுரண்டுபவர்கள். உடைந்த குழாயை மாற்ற, ஒருவர் கேட்கும் கூலியை கொடுத்தே ஆக செலுத்த வேண்டும். சிலிண்டர் டெலிவரி பாய் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் காரணம் காட்டி அதிக பணம் கேட்கிறார்.

என்ன ஒரு வித்தியாசம், பெரிய வணிக நிறுவனங்கள் தங்கள் பிராண்டின் பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். ​​​​சிறிய அளவில் உள்ள இவர்கள் தங்கள் பங்குக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் கொள்ளையடிக்கிறார்கள்.

எப்போதும் நான், எனது மற்றும் எனக்கு என்று தான் பார்க்கின்றனரே தவிர, யாரும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அப்படியே அவர்கள் அக்கறை காட்டினால், அது மிகவும் அரிது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare