முயற்சிப்பவனுக்கு முழங்காலே சமுத்திரம் ஊக்கப்படுத்தும் வாசகங்களை படிங்க....

முயற்சிப்பவனுக்கு முழங்காலே சமுத்திரம்  ஊக்கப்படுத்தும் வாசகங்களை படிங்க....
X
Inspirational Motivational Quotes in Tamil-வாழ்க்கை என்பது கரடு முரடானது. ஒவ்வொருபிரச்னைகளையும் எதிர்நோக்க வேண்டும். பிரச்னைகளைக் கண்டு ஓடிவிடக்கூடாது.

Inspirational Motivational Quotes in Tamil



வாழ்க்கையில் முயற்சி இல்லாவிட்டால் முன்னேற்றம் இருக்காது. முடங்கிபோனால் முதிர்ச்சிதான் அடைய முடியும். எனவே எப்போதும் புத்துணர்ச்சியோடு வாழ்க்கையினை எதிர்கொள்ளுங்கள்..

நாள்தோறும் காலை எழுந்தது முதல் உங்கள் மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டீர்களானால்எந்த சூழ்நிலையும் உங்களை சோம்பலாக்காது. இதற்காக ஒரு சில மன பயிற்சிகளை காலை நேரத்தில் ஒவ்வொருவரும் செய்யலாம்.

முயற்சிக்கும்போது முன்னேற்றத்திற்கு பல தடைகள் வரலாம். தடைகள் வந்துவிட்டதே என எண்ணி பின்னுக்கு வந்தீர்களானால் அவ்வளவுதான். எதிர்த்து நின்று போராடுங்கள்.. தடைகள் அனைத்தும் தகர்ந்துவிடும். வேண்டுமென்றே உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட ஒரு க்ரூப் உலா வரும். அதனை கண்டுகொள்ளாமல் உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றியை நோக்கி இருக்கட்டும்... நிச்சயம் வெற்றி பெறும்.

எப்படி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வீரர்கள் எதனையும் நினைக்கமாட்டார்கள். அவர்களின் மனது பூரா பந்தின் மேல்தான்இருக்கும்.அது பேட்டிங் ஆக இருந்தாலும் சரி பீல்டிங்காக இருந்தாலும் சரி அவர்களுடைய இலக்கு நோக்கம் அனைத்திற்குமே அந்த பந்துதான் மையப்புள்ளியாக இருக்கும்.

அதுபோல் நம் முயற்சி வெற்றியடையும் வரை எதையும் மனதில் நினைக்காதீர்கள். நிச்சயம் வெற்றி நம்பக்கந்தான்...


Inspirational Motivational Quotes in Tamil



நம்மைஊக்கப்படுத்த பல வாசகங்கள்...இதோ....

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதேஉனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் நம்பிக்கை என்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்றுகவலை கொள்ளாதேகனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையைவிதைத்துவிடுமகிழ்ச்சி தானாகவே மலரும்...

நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்வலிகளும் பழகிப்போகும்...

அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

பல முறை முயற்சித்தும்உனக்கு தோல்வி என்றால்உன் இலக்கு தவறுசரியான இலக்கை தேர்ந்தெடு..

வேதனைகளை ஜெயித்துவிட்டால்அதுவே ஒரு சாதனைதான்... உன்னால் முடியும்என்று நம்பு...முயற்சிக்கும் அனைத்திலும்வெற்றியே...

எந்த சூழ்நிலையையும்எதிர்த்து நிற்கலாம்தன்னம்பிக்கையும் துணிச்சலும்இருந்தால்......

எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்...

முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததைமுடிக்கும் வரை...

புகழை மறந்தாலும்நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறைநீ அவமானப்படாமல் காப்பாற்றும்

தன்னம்பிக்கை இருக்கும்அளவுக்கு முயற்சியும்இருந்தால் தான் வெற்றிசாத்தியம்...

எண்ணங்களிலுள்ள தாழ்வுமனப்பான்மையால் திறமைக்குதடை போடாதீர்கள்....

முடியும் என்ற சொல்லேமந்திரமாய்....( நம்பிக்கை )

தனியே நின்றாலும்தன் மானத்தோடு...சுமையான பயணமும் சுகமாக....(நம்பிக்கை)

எதிரி இல்லைஎன்றால்நீ இன்னும்இலக்கை நோக்கிபயனிக்கவில்லைஎன்று அர்த்தம்

நம்பிக்கையின் திறவுகோல்தன்ன(ந)ம்பிக்கையே

மனதில் உறுதியிருந்தால்வாழ்க்கையும்உயரும் கோபுரமாக...

முயற்சி தோல்வியில்முடிந்தாலும்செய்த பயிற்சியின்மதிப்பு குறையாது

உன்னையே நீ நம்புஓர் நாள் உயர்வு நிச்சயம்...!


வியர்வை துளியைஅதிகப்படுத்துவெற்றி வந்தடையும்வெகு விரைவில்(உழைப்பே - உயர்வு)

முடியாதுஎன எதையும்விட்டு விடாதே...! முயன்றுபார்நிச்சயம்முடியும்...

வயதை பின்னுக்கு தள்ளிவைராக்கியத்தோடு ழும்வயதானவர்கள் ஒவ்வொருவீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!

விடாமுயற்சிஎன்ற ஒற்றை நூல்சரியாக இருந்தால்வெற்றி எனும் பட்டம் நம் வசமே

வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறது நம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது

தோற்றுக் கொண்டேஇருந்தாலும் கவலைப்படாதேநிச்சயம் ஒரு நாள்வெற்றி பெறுவாய்மனதில் உறுதியைமட்டும் வைகனவுகள் நனவாகும்காலம் வரும்

திறமையும் நம்பிக்கையும்இருந்தால்கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்

எப்போதும்நம் மனதில்உச்சரிக்க வேண்டியவாக்கியம் என்னால் முடியும்

வாழ்க்கையில் தகுதிஉள்ளவனைக் காட்டிலும்தன்னம்பிக்கை உள்ளவனேவெற்றி பெறுகிறான்

தடைகள்ஆயிரம் வந்தால் என்னஅடியெடுத்து வைத்துமுன்னேறி விடுவாழ்க்கை வசப்படும்

நம் நிலை கண்டுகைகொட்டி சிரித்தவர்களைகை தட்டி பாராட்ட வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை

நம்மைநாமேசெதுக்கிக்கொள்ளஉதவும் உளி இலக்கு தன்னம்பிக்கைவிடாமுயற்சி

எட்ட முடியாதவானம் கூட உயரமில்லைநீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின்முன்னால்

நேரத்தை வீணாக்காதேஉன்னால் முடியும்சாதித்து கொண்டே இரு வாழ்வில்

உன்னை நீயேயாருடனும் ஒப்பிடாதேஉன் சிறப்புஎது என்பதை நீயே உணராத பட்சத்தில்மற்றவர்கள் அறிவதுஎன்பது எப்படி சாத்தியம் ஆகும்

என்னால் முடியும்என்ற நம்பிக்கை கொண்டமனிதன் யாவரும் அடுத்தவர்களின் உதவியைநாடுவதில்லை

பாதைகளில் தடைகள்இருந்தால்அதை தகர்த்து விட்டு தான்செல்ல வேண்டும் என்றில்லைதவிர்த்து விட்டும் செல்லலாம்எறும்பை போல பிரச்சினைகள்நம்மை செதுக்கவருவதாக நினைத்துஎதிர் கொள்ளுங்கள்

சிதைந்து போகாதீர்கள்

உனது நேற்றையதோல்விக்கானகாரணங்களை கண்டறிந்தால்மட்டுமேவெற்றியை நோக்கி பயணம்செல்கையில் வரும் தடைகளைஉடைத்தெறிய முடியும்

ஓய்வில்லாமல் உழைப்பதால்தான் கடிகாரம்உயர்ந்த இடத்தைஅடைந்ததுநாமும் உயர வேண்டும்என்று தன்னம்பிக்கை கொண்டுஉழைத்தால்நிச்சயமாக உயரலாம்

எதிர்காலம் என்பதுமுக்காலத்தில்ஒரு காலம் மட்டுமல்லநம்மை ஏளனமாக பேசும் சிலருக்குநம்மை நிரூபித்துக் காட்டஇறைவன் கொடுத்த பொற்காலம்

நம்மால் முடியவில்லை என்றால்அதனை சவாலாகஎடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்குஅதிக மதிப்புண்டு

ஒன்றை மட்டும்நினைவில் கொள்ளுங்கள்நீங்கள் தான் சிறந்தவர் என்று உங்களை நம்புங்கள்எத்தகை கடினமான இலக்குகளை

சுலபமாக எட்டிவிடலாம் விரிக்காத வரைசிறகுகள் பாரம்தான்விரித்துப் பார்த்தால் வானம் கூட தொடுதூரம்தான்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை