அழகான மனைவி, அன்பான கணவன், அமைந்தாலே பேரின்பமே..
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
மனிதப் பிறவி என்பது மகத்தானது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்து நல்ல வேலைக்கு சென்றபின் பெண் பார்த்து கல்யாணம்செய்து வைக்கின்றனர். அப்படி பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணங்களிலும் முறிவுகள் வருகின்றனவே ஏன்? ...காதல் திருமணத்தில்தான் பல எதிர்ப்புகள் வரும்.. பிறகு சரியாகும். ஆனால் தற்கால நாகரிக உலகில் பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணங்களில் இந்த முறிவுக்குகாரணம் என்ன? .... இதற்கு அவர்கள் சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் இதுபோன்ற முறிவுகள் நடக்கவே நடக்காது.விட்டுக்கொடுத்து வாழப்பழக வேண்டும்.
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
இவற்றையெல்லாம் மீறி ஒரு சில தம்பதியினர் திருமணம் நடந்ததில் இருந்து தற்போது வரை எவ்வளவு ஊடல்கள், வந்தாலும் பிரியாமல் அன்பு செலுத்தி வாழ்ந்து வருகின்றனர். அந்த அன்பு மட்டும் எப்படி வருகிறது? வி்ட்டுக்கொடுத்து , ஈகோ இல்லாமல், பார்க்காமல் வாழக்கற்றுக்கொண்டால் எல்லா நாட்களும் நமக்கு இனிமையான நாட்கள்தான்... இதனை செய்வார்கள் பிற ஊடல் தம்பதியினர்...வாழ்வது ஒரு முறை ...வளரட்டும் நம் தலைமுறை ...வாழ்க்கைன்னா கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்... அதனை மனப்பக்குவத்தோடு ஒன்று சேர்ந்து எதிர்த்து போராடி ஜெயிக்கும் தம்பதியினரிடம் அன்பு அளவற்றுதான்இருக்கிறது... இதனை யாரும் மறுக்க முடியாது.
தன் தந்தை வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் தன் கணவன் வீட்டில் வசதி் இல்லாமல் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் அப்பா வீட்டு படி ஏறக்கூடாது என்ற மனோபாவத்தில் வைராக்யத்தோடு உழைத்து முன்னேறிய குடும்பங்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன....
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் நல்ல மனைவிக்கு நல்ல கணவனும் நல்ல கணவனுக்கு நல்ல மனைவியும் அமைவது என்பது பெரிய விஷயமுங்க..ஆரம்பத்தில் இருவருக்குள் புரிதல் இல்லாவிட்டாலும் போகப் போக தெரியும் என்பது போல் பின்னர் பல நாட்களுக்கு பின் அவர்களிடையே ஏற்படும் அந்நியோன்யம் அவர்கள் வாழ்க்கை முழுவதும் நீடிக்கிறது.
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
இக்கால கணவன் மனைவியரிடையே இதுபோல் உள்ளதா? என நம்மால் அறுதியிட்டு சொல்வது கடினம். காரணம் அப்படி இருந்தால் ஏங்க... ஒரே வருஷத்தில் விவாகரத்து நோட்டீஸ் வருது..அந்த காலத்தில் கணவனும், மனைவியும் இருவரும் படிக்காவிட்டாலும் பாசத்தினால் ஒன்றுபட்டு இருந்தனர். விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதுவும் வைராக்யமான வாழ்க்கை வாழ்ந்தனர் அக்காலத்தில் என்று கூட சொல்லலாம். தாம் பெற்ற பிள்ளைகளிடம் கூட கையை நீட்டகூடாது என மன வைராக்யத்தில் எந்த பிள்ளைகளின் வீட்டிலும் வசிக்காமல் தன்னந்தனியாக வயதான காலத்திலும் வாழ்ந்து விட்டு சென்றனர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனை நாம் குறை சொல்லிவிட முடியாது. ஆத்மார்த்தமான அன்புன்னா அதுதாங்க... கணவன் இறந்த உடனே ஒரு சில மனைவிகள் அதிர்ச்சியில் இறந்து போவதும் இன்றும் பல இடங்களில் நடக்கிறது. அதேபோல் மனைவி இறந்த பின் கணவன் இறப்பதும் நடக்கிறது. அதுதாங்க உண்மையான அன்பு...
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
ஆனால் இன்று நடப்பது என்ன? உங்களுக்கெல்லாம் சொல்லவே தேவையில்லை... நாம் போலி அன்பை பற்றி பேசவே இல்லீங்க.. உண்மையான ஆத்மார்த்தமான கணவன் மனைவி அன்புக்கான வாசகங்கள் இதோ ...படிங்க... மற்ற எதையும் நினைச்சு குழப்பிக்காதீங்கோ...
உயிரே... நீ எனக்கு உறவாக கிடைத்த உறவு அல்ல எனக்கு வரமாக கிடைத்த உயிர்...
சண்டை பாசம் கோபம் அழுகை புன்னகை இதில் எது என்றாலும் சம்மதம் அது உனக்காக என்றால்..
எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக் கொண்ட மிகப்பெரிய உறவு நீ...
தொலைத்தால் கிடைக்கும் பொருள் அல்ல எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் உன் அன்பு.!
கனவுகளோடு காத்திருக்கும் என் விழிகளுக்கு எப்போது விருந்தளிக்கும் உன் விழிகள்...
நினைத்து கூட பார்க்கவில்லை நீ கிடைப்பாய் என்று.. கிடைத்தவுடன் நினைத்து கொண்டேன் நானும் அதிர்ஷ்டசாலி என்று..
என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்...
சண்டை இட்ட அடுத்த நொடி வந்து மன்னிப்பு கேட்பதை விட மார்பில் சாய்ந்து கோபமா ? என்று கேட்கும் துணை தானே வாழ்வின் பேரானந்தம்.
நான் உனக்கு எப்படினு தெரியல, ஆனா நீ எனக்கு உயிர்...
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
கணவன் மனைவி நீயா..? நானா..? என வாழ்க்கை நடத்துவதைவிட நீயும்..! நானும்..! என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்..
ஒரு நல்ல கணவரின் அன்பு என்பது ஆயிரம் தாய்களின் அன்பிற்கு நிகர்...!
தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..
மனைவியை எங்கும் விட்டுக்கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள், இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே.....
மனைவி வாழும் இரண்டாவது கருவறை கணவன் இதயம் தான்..
எப்போது ஒரு பெண் அன்பான கணவனை பெறுகிறாளோ அப்போது அவள் தன்னை அதிர்ஷ்டசாலியாக உணருகிறாள்.
எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன், விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்குமளவிற்கு ஓர் ஆண்...
பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல, தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும் நடந்ததெல்லாம் சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்..
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவிதான் ஓர் பெண்ணுக்கு கணவன் தான் அதற்கு இணை வேறேதும் இல்லை விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழவைக்க முடியும் கணவன் மனைவி எனும் உறவும் இதைப்போல தான்..
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது ஆண்மை இல்லை.. இறுதி வரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே உண்மையான ஆண்மை.
கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போது, அவர்கள் சிறந்த தம்பதியாகிறார்கள்..
நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரியும் உன்னை தவிர...
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது.....
நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ.
என் வாழ்க்கையிலே உன்ன விட யார் மேலையும் இவ்ளோ பாசம் வச்சதே இல்லடா புருஷா..
அன்பு நிறைந்த உள்ளம் தான் அதிகம் சண்டை போடும். பிரிவதற்கு அல்ல.. பிரிய கூடாது என்பதற்காக...
உன்னிடம் சண்டை போடும் இந்த இதயத்தை விட்டு விடாதே..! என்னைவிட உன்னை யாரும் நேசித்து விட முடியாது..!
எந்த உறவாக இருந்தாலும் சின்ன சுயநலம் கலந்து இருக்கும்..! சுயநலம் இல்லாமல் நம்மை காக்கும் ஓர் உறவு..! கணவன் மட்டுமே..!!!
என் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை .... நீ என்னை திருமணம் செய்தால்தான் என் வாழ்வு சொர்க்கமாக்கப்படுகிறது !!
தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும், ஒரு பெண் முதலில் பார்க்க விரும்புவது தன் முதல் குழந்தையாகிய அவள் கணவனையே....
நீ என்னை உறவாகத் தான் நினைக்கிறாய்.. நான் உன்னை என் உயிராகவே நினைக்கிறேன்.. உயிர் இன்றி உடல் வாழுமா சொல்?
ஆண் எதிர்பார்ப்பது தன்மீது அன்பாயிருக்கும் மனைவியை.. பெண் எதிர்பார்ப்பது தன்மீது மட்டும் அன்பாயிருக்கும் கணவனை...
நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே
இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் எனக்கு நீ தான் உனக்கு நான் தான்...
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்க சொன்னேன் வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு முறை நினைக்கிறேன் என்று..
ஒரு கணவன் தன் மனைவிக்கு விலை உயர்ந்ததாக எதையாச்சும் கொடுக்க நினைத்தால் தினமும் மனைவிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அன்பா ஆதரவா அரவணைப்பா பேசுங்கள் அத விட உங்க மனைவி எதையும் எதிர் பாக்கமாட்டாங்க... உங்கள தாண்டி எதையும் யோசிக்ககூட மாட்டாங்க...
Husband Love Quotes in Tamil
Husband Love Quotes in Tamil
உரிமையை தந்து விட்டு அன்பை வெளிப்படுத்த மாட்டான் ஆண். ஆனால் சின்ன சின்ன விஷயங்களிலும் அன்பை எதிர்பார்ப்பவள் பெண்..
சண்டை வந்தா சமாதானம் பண்ணலாம் ஆனால். சமாதானம் பண்ணவே சண்டையிடும் என்னவன் அழகு...
உன் மீதான என் அன்பு ஒரு குழந்தை தன் தாய் மீது வைத்திருக்கும் அன்பைப் போன்றது.. அதற்கு உன்னைத் தவிர வேறொன்றும் தெரியாதுடா...
நேசிக்கும் பெண்ணை அழ விடாமல் பார்த்துக்கொள்ளும் ஆண்கிடைப்பது மீண்டும் ஒரு தாய் கிடைப்பது போன்றது...
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu