மனைவியரே.... உங்க கணவனின் அன்பு பற்றி அழகான வரிகளை படிச்சுதான் பாருங்க...

Kanavan Manaivi Anbu
X

Kanavan Manaivi Anbu

Kanavan Manaivi Anbu-கணவன் மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அதிலும் அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. அழகான தமிழில் கணவனின் அன்பு பற்றி சில வரிகள்.

Kanavan Manaivi Anbu

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். ஆனால் அர்த்தம் என்ன? உயிருடன் இருக்கும் வரை கணவனும் மனைவியும் அன்பு பிசகாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என சொல்லாமல் பெரியவர்கள் சொன்னது போல் உள்ளதே.

ஆம்... கல்யாணம் என்ற பந்தத்தினால் கிடைப்பதுதான் கணவன்-மனைவி என்ற அந்தஸ்து. இதில் இருவரும் ஒரு குழந்தை பிறக்கும் வரை அன்பு அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.காரணம் இவருக்கு அவர் குழந்தை அவருக்கு இவர் குழந்தை. ஆனால்இந்த இரண்டுகுழந்தைகளுக்கு மத்தியில் ஒரு குழந்தை உருவான பின் இவர்களின் அன்பில் மாற்றம் இருக்க கூடாது. ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் அன்பு குறைந்துவிடுகிறது. இதனால்தான் பிரச்னைகளே ஆரம்பமாகிறது.

கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து போய்விட்டால் அவர்கள் இருவருக்கும் எந்த வித பிரச்னையுமே இல்லை. ஆனால் ஈகோ பிரச்னையால் பல கணவன், மனைவிகள் வாழ்க்கையில் பிரியும் நிலை ஏற்படுகிறது. வாழ்வது ஒரு முறை வளரட்டும் தலை முறை என எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் டேக்இட் ஈஸி என சென்றால் எல்லோருடைய வாழ்க்கையிலு்மி சந்தோஷம் நிலைத்து நிற்குங்க....

அது சரி கணவனின் அன்பு பற்றி அற்புதமான வரிகள் ஒரு சில அழகு தமிழில் பார்க்கலாமே.,,,,,

*அன்போ அரவணைப்போ ஆறுதலோ, யாவும் உன்னிடம்இருந்தே எதிர்பார்க்கிறேன்...

*இளமையில் மனைவியின் காவலன் கணவன், முதுமையில் கணவனின் ஊன்றுகோல் மனைவி

தாங்கிப் பிடிக்க துணை இருந்தால் தள்ளாடும் முதுமையும் இளமையே..

*என் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை கடன்காரனாக இருந்துவிடக்கூடாது என நினைப்பவள்தான் உண்மையான மனைவி.

*கோபப்பட்டாலும் ...திட்டினாலும்.. ஏன் அடித்தாலும் கூட நீ துயரப்படும்போது கண்ணீர்வடிப்பதும், கூட வருவது

மனைவி மட்டுந்தான். மனைவியை மட்டும் நேசியுங்கள்.

*ஆயிரம் தடவை உன்னிடம் சண்டையிட்டுக்கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும்போதும் ஏனோ தெரியவில்லை புதியதாக காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகிறது.

*எல்லா பெண்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன் விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்குமளவுக்கு ஓர் ஆண்...

*ஒரு பெண்ணுக்கு எது பிடிக்கும்னு தெரிந்து ஆணாலும் ஒரு ஆணுக்கு எது பிடிக்காதுனு தெரிந்த பெண்ணாலும் மட்டும்தான் எப்போதாவது இல்லாமல் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடிகிறது.

*மனைவியை எங்குமே விட்டுக்கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி நண்பர்கள் போன்ற பிள்ளைகள் , இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே.

*ஒரு நல்ல கணவரின் அன்பு என்பது ஆயிரம் தாய்களின் அன்பிற்கு நிகர்...!

*தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..

*மனைவியை எங்கும் விட்டுக்கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள், இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே.....

*மனைவி வாழும் இரண்டாவது கருவறை கணவன் இதயம் தான்..

*எப்போது ஒரு பெண் அன்பான கணவனை பெறுகிறாளோ அப்போது அவள் தன்னை அதிர்ஷ்டசாலியாக உணருகிறாள்.

*எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன், விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்குமளவிற்கு ஓர் ஆண்...

*பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல, தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும் நடந்ததெல்லாம் சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்..

*எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவிதான் ஓர் பெண்ணுக்கு கணவன் தான் அதற்கு இணை வேறேதும் இல்லை விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழவைக்க முடியும் கணவன் மனைவி எனும் உறவும் இதைப்போல தான்..

*ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது ஆண்மை இல்லை.. இறுதி வரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே உண்மையான ஆண்மை.

*கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போது, அவர்கள் சிறந்த தம்பதியாகிறார்கள்..

*நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரியும் உன்னை தவிர...

*ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது.....

*நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ.

*என் வாழ்க்கையிலே உன்ன விட யார் மேலேயும் இவ்ளோ பாசம் வச்சதே இல்லடா புருஷா..

*அன்பு நிறைந்த உள்ளம் தான் அதிகம் சண்டை போடும். பிரிவதற்கு அல்ல.. பிரிய கூடாது என்பதற்காக...

*உன்னிடம் சண்டை போடும் இந்த இதயத்தை விட்டு விடாதே..! என்னைவிட உன்னை யாரும் நேசித்து விட முடியாது..!

*எந்த உறவாக இருந்தாலும் சின்ன சுயநலம் கலந்து இருக்கும்..! சுயநலம் இல்லாமல் நம்மை காக்கும் ஓர் உறவு..! கணவன் மட்டுமே..!!!

*என் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை .... நீ என்னை திருமணம் செய்தால்தான் என் வாழ்வு சொர்க்கமாக்கப்படுகிறது !!

*தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும், ஒரு பெண் முதலில் பார்க்க விரும்புவது தன் முதல் குழந்தையாகிய அவள் கணவனையே....

*நீ என்னை உறவாகத் தான் நினைக்கிறாய்.. நான் உன்னை என் உயிராகவே நினைக்கிறேன்.. உயிர் இன்றி உடல் வாழுமா சொல்?

*ஆண் எதிர்பார்ப்பது தன்மீது அன்பாயிருக்கும் மனைவியை.. பெண் எதிர்பார்ப்பது தன்மீது மட்டும் அன்பாயிருக்கும் கணவனை...

*நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே

*இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் எனக்கு நீ தான் உனக்கு நான் தான்...

*ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்க சொன்னேன் வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு முறை நினைக்கிறேன் என்று..

*ஒரு கணவன் தன் மனைவிக்கு விலை உயர்ந்ததாக எதையாச்சும் கொடுக்க நினைத்தால் தினமும் மனைவிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அன்பா ஆதரவா அரவணைப்பா பேசுங்கள் அத விட உங்க மனைவி எதையும் எதிர் பாக்கமாட்டாங்க... உங்கள தாண்டி எதையும் யோசிக்ககூட மாட்டாங்க...

*உரிமையை தந்து விட்டு அன்பை வெளிப்படுத்த மாட்டான் ஆண். ஆனால் சின்ன சின்ன விஷயங்களிலும் அன்பை எதிர்பார்பவள் பெண்..

*சண்டை வந்தா சமாதானம் பண்ணலாம் ஆனால். சமாதானம் பண்ணவே சண்டையிடும் என்னவன் அழகு...

*உன் மீதான என் அன்பு ஒரு குழந்தை தன் தாய் மீது வைத்திருக்கும் அன்பைப் போன்றது.. அதற்கு உன்னைத் தவிர வேறொன்றும் தெரியாதுடா...

*நேசிக்கும் பெண்ணை அழ விடாமல் பார்த்துக்கொள்ளும் ஆண்கிடைப்பது மீண்டும் ஒரு தாய் கிடைப்பது போன்றது...

*உயிரே... நீ எனக்கு உறவாக கிடைத்த உறவு அல்ல எனக்கு வரமாக கிடைத்த உயிர்...

*சண்டை பாசம் கோபம் அழுகை புன்னகை இதில் எது என்றாலும் சம்மதம் அது உனக்காக என்றால்..

*எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக் கொண்ட மிகப்பெரிய உறவு நீ...

*தொலைத்தால் கிடைக்கும் பொருள் அல்ல எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் உன் அன்பு.!

*கனவுகளோடு காத்திருக்கும் என் விழிகளுக்கு எப்போது விருந்தளிக்கும் உன் விழிகள்...

*நினைத்து கூட பார்க்கவில்லை நீ கிடைப்பாய் என்று.. கிடைத்தவுடன் நினைத்து கொண்டேன் நானும் அதிர்ஷ்டசாலி என்று..

*என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்...

*சண்டை இட்ட அடுத்த நொடி வந்து மன்னிப்பு கேட்பதை விட மார்பில் சாய்ந்து கோபமா ? என்று கேட்கும் துணை தானே வாழ்வின் பேராணந்தம்.

*நான் உனக்கு எப்படினு தெரியல, ஆனா நீ எனக்கு உயிர்...

*கணவன் மனைவி நீயா..? நானா..? என வாழ்க்கை நடத்துவதைவிட நீயும்..! நானும்..! என்று வாழ்க்கை நடத்தினால் இல்லறம் அர்த்தமுள்ளதாகும்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!