ஆதர்ச தம்பதிகளாக வாழணுமா? கணவன் மனைவி குறித்த பொன்மொழிகள படிங்க Husband and Wife quotes in Tamil

ஆதர்ச தம்பதிகளாக வாழணுமா? கணவன் மனைவி குறித்த பொன்மொழிகள படிங்க Husband and Wife quotes in Tamil
X
Husband And Wife Quotes in Tamil - குடும்பத்தில் பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி?

Husband And Wife Quotes in Tamil -பெற்றோர்கள் முடித்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் மணம் புரிந்த தம்பதியராய் இருந்தாலும் மணமொத்த தம்பதியராய் வாழ்க்கை முழுக்க வாழவே கணவன் மனைவி இருவரும் விரும்புவார்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி?

விட்டுக்கொடுத்தவர்கள் கேட்டுப்போனதில்லை என முதுமொழி உள்ளது. விட்டுக்கொடுத்து செல்வதே குடும்ப அமைதிக்கு மிக சிறந்த வழி

கணவன் மனைவி குறித்த சில பொன்மொழிகள் உங்களுக்காக.

கோபப்படுவது நீயாக இருக்கும் போது,

உன்னிடம் தோற்பது எனக்கு சுகமே!

ஓங்கிய கை இறங்கும்போது ,

உறவின் மீதான அன்பு கோடியாகும்

சண்டையை தொடங்குவது நீ,

சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்


சின்னச்சின்ன ஊடல்கள்,

நம்மை பிரிப்பதற்கல்ல!

நம் காதலை வளர்ப்பதற்கு

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்,

முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்

சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம்,

யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம்,

ஆனால் உண்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது

உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன் மனைவி


விழுதுகள் மரத்தை தாங்கலாம்

வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்

எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்

ஓர் ஆணுக்கு மனைவி தான்

ஓர் பெண்ணுக்கு கணவன் தான்

அதற்கு இணை வேறு எதுவும் இல்லை

அப்பாவி பெண் கூட

புத்திசாலி கணவனை ஆள முடியும்

ஆனால் புத்திசாலிதானம் உள்ளவளே

முட்டாள் கணவனை ஆள முடியும்


எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை

எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்,

விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்

திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை நரகம் என்றால் அது பொய்! மனைவியை நேசிக்க தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு