ஆதார் தரவுகள் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடுவதை தடுப்பது எப்படி?

ஆதார் தரவுகள் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடுவதை தடுப்பது எப்படி?
X
ஆதார் தரவுகள் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடுவதை தடுப்பது எப்படி? என்பதை தெரிந்துகொள்வோம்.

புதிய ஆதார் செயல்படுத்தப்பட்ட Payment System-ல் (AePS) உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி #மோசடி செய்பவர்கள், வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக திருடப்படுகிறது.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் OTP தேவையில்லை. இதற்கு ஆதார் எண், கைரேகை, OTP மற்றும் கருவிழி ஆகியவை தேவை. இரண்டாம் நிலை சரிபார்ப்பு இல்லாததால், அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும் பாதிப்புகளுக்கு தள்ளப்படுகிறது.

மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி?

  • மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க, mAadhaar ஆப் அல்லது UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவைப் லாக் செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவைப் லாக் செய்து, mAadhaar ஆப்பை பதிவிறக்கி, பதிவு செய்ய உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்த்து, ஆப்பை பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்கைப் லாக் செய்யவும்.
  • உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் ஆப்பை பயன்படுத்தி பயோமெட்ரிக்ஸைத் பயன்படுத்தலாம்.

ஆதார் கார்டில் பயனர்கள் பணத்தை இழப்பதைத் தவிர்ப்பது எப்படி?-

  • கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து mAadhaar செயலியைப் பதிவிறக்கவும்.
  • ஆப்பில் "எனது ஆதார் பதிவு" பட்டனைத் கிளிக் செய்யவும்.
  • இப்போது, ஆப்பிள் 4 Digit Password உள்ளிடவும்.
  • நீங்கள் இப்போது ஆதார் எண் மற்றும் Secure Captcha உள்ளிடனும்.
  • இதற்குப் பிறகு, நீங்கள் OTP ஐக் கொடுக்க வேண்டும். இது உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
  • OTP ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் கணக்கு திறக்கப்படும். கீழே scroll செய்து " Biometrics Lock" என்பதைத் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் மீண்டும் Secure CAPTCHA உள்ளிட வேண்டும், பின்னர் OTP ஐ உறுதிப்படுத்த வேண்டும்.
  • நீங்கள் OTP ஐச் சரிபார்த்தவுடன், உங்கள் Biometrics Lock செய்யப்படும்.
  • இதே செயல்முறையை பயன்படுத்தி தேவைப்படும் போது Unlock செய்து கொள்ளலாம்.

Tags

Next Story