வீட்டிலேயே சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

Chicken Biryani Seivathu Eppadi Tamil-சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பாக்கலாம் வாங்க.
பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. அந்தவகையில், வீட்டிலேயே சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
முதலில் அதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்
நாட்டுக்கோழி – அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
புதினா, கொத்தமல்லி இலைகள் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – இரண்டரை டீ ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 4
பிரியாணி இலை – 4
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – 3 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தைத் தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பெருஞ்சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்., கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் வெட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும். வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும்.
குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் திறந்து, ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து, சரியான அளவு தண்ணீர் ஊற்றி மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் மூடியைத் திறந்து மெதுவாகக் கிளறிவிடவும். நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.
குறிப்பு:
- 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- பிரியாணி பாத்திரத்தில் செய்யும் போது, தம் போடுவதற்கு பிரியாணி பாத்திரத்திற்கு அடியில் தோசைக்கல்லை வைத்து தம் போடலாம். அல்லது 10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து இறக்கவும்.
- பிரியாணி உடையாமல் இருக்க, அரிசியை கழுவியப் பிறகு, நெய் விட்டு வறுத்து சேர்த்தால் பிரியாணி உடையாமல் வரும்.
- சிக்கனை தயிர் மற்றும் சிறிது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்து சேர்த்தால் சிக்கன் மிருதுவாக இருக்கும்.
ஓகே. இப்ப சுவையான சிக்கன் பிரியாணி வீட்லேயே தயார். ஒரு கட்டு கட்டுங்க
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu