Cm special cell: முதல்வரின் முகவரியில் ஆன்லைனில் மனு செய்வது எப்படி?

Cm special cell: முதல்வரின் முகவரியில் ஆன்லைனில் மனு செய்வது எப்படி?
X

முதலமைச்சரின் தனிப்பிரிவு - காட்சி படம் 

Cm special cell: முதல்வரின் முகவரியில் ஆன்லைனில் மனு செய்வது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

special cell: தமிழக அரசு எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகிய ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றி வருகிறது.

இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கு தற்போது ‘முதல்வரின் முகவரி’ என்ற தனி இணையதளத்தையும் தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப ப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீர்ப்பு மேலாண்மை திட்டம் (IIPGCMS CM Helpline) - இத்திட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளைச் சமர்ப்பிக்கவும், அவற்றை எளிதாக தீர்த்துக்கொள்ளவும் இரு வழித்தகவல் தொடர்புத்தளமாக விளங்கும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட இந்த குறை தீர்க்கும் திட்டத்தை, தமிழ் நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.

அதி நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை கொண்ட முதலமைச்சரின் உதவி மையத்தில், பின்வரும் சேவைகள் வழியே வரும் புகார்கள் மற்றும் மனுக்களை ஒருங்கிணைத்து, அவைகளை பூர்த்தி செய்யும்:

உதவி மையம் எண் 1100

இணையதளம் cmhelpline.tnega.org

கைபேசி செயலி (CMHelpline Citizen - கூகுள் பிளேஸ்டோர் & ஆன்டராய்டு – Android & iOS)

cmhelpline@tn.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்

சமூக ஊடகம்: https://twitter.com/CMHelplineTN; https://www.facebook.com/CMHelplineTN

கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். மேலும், அவர்களே குறையின் நிலையை தெரிந்து கொள்வதற்கும் இத்திட்டத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம், மாநிலத்தில் மக்கள் எங்கு இருந்தாலும், எந்த ஒரு தடையுமின்றி அவர்களுக்கு உரிய அரசு சேவைகள், திட்டங்கள் மற்றும் உதவிகள் பெற்று பயனடைய செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகள் கூறுவது மட்டுமன்றி, அரசிடம் கேள்வி எழுப்பவும், அரசு திட்டங்களை மேம்படுத்த அவர்களின் மேலான கருத்துக்களை தெரிவிப்பதற்கும், முதலமைச்சரின் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், பதில் அளிப்பதற்கும், இதற்குள் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறைகளை துரிதமாகவும், நியாயமாகவும், பரிவுடனும், மக்களுக்கு எந்த ஒரு அதிருப்தி இல்லாமல் நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டத்தில் விதிமுறைகள் உள்ளன. மக்களின் குறைகள் மீது விரைந்தும், திறம்படவும் செயலாற்ற அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீர்ப்பு மேலாண்மை திட்டம் (IIPGCMS CM Helpline) வாயிலாக தமிழக அரசு ஒரு பொறுப்பான அரசின் 7 கொள்கைகளை அடைய பாடுபடும். அவை: அணுக்கம், பங்கு, தொடர்பு, பதிலளிப்பு, செயல்திறன் மற்றும் பொறுப்புடைமை.

IIPGCMS (CM Helpline) - இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம். இதில் நீங்கள் அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.

உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனிலில் புகார் அளிப்பது எப்படி?

முதலில் பிரத்யேக இணையதளமான https://cmhelpline.tnega.org/portal/ta/home என்ற முகவரியில் உள் நுழையவும்.


பின்னர் மனு எண் தேடல், மனுசெய்ய, முகவராக உள்நுழைய என்ற மூன்றில் மனு செய்யபவராக இருந்தால் ‘மனு செய்ய’ அல்லது ஆங்கிலத்தில் ‘File a Grievance’ என்பதை கிளிக் செய்யவும்.


இதனையடுத்து புதியதாக பதிவு செய்பவரா அல்லது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவரா என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் தற்போது தான் இந்த இணையதளத்தில் உள்நுழைகிறீர்கள் என்றால் ‘New User’ ஐ கிளிக் செய்துகொள்ளவும்.


பின்னர் அதில் மொபைல் எண் உள்ளிட்ட உங்கள் விபரங்களை உள்ளிடவும்.








நீங்கள் மனு செய்வதற்கான அனைத்து விபரங்களையும் உள்ளிட்டு 'Submit' என்பதை கிளிக் செய்து முடித்து விடவும். உங்களுக்கான மனு 30 நாட்களுக்குள் பதில் வரும்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!