பான் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைப்படாதீங்க.. விண்ணப்பிப்பது எப்படி?

பான் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைப்படாதீங்க.. விண்ணப்பிப்பது எப்படி?
X
Duplicate PAN card :பான் கார்டு தொலைந்துவிட்டால் நகல் (டூப்ளிகேட்) விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

உங்கள் பான் கார்டு (PAN Card ) திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, இப்போது நகல் Duplicate PAN CARD எளிதாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் நகல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ TIN-NSDL இணையதளத்திற்குச் செல்லவும்.

லிங்க்: https://onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

அடுத்து நீங்கள் விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

தற்போதுள்ள பான் தரவில் மாற்றம் அல்லது திருத்தம்/பான் கார்டின் Reprint (ஏற்கனவே இருக்கும் பான் தரவில் மாற்றம் இல்லை) என விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு Form-ல் தேவையான தகவல்களை நிரப்பவும்.


உங்கள் தகவலைச் சமர்ப்பித்த பிறகு, ஒரு டோக்கன் எண் உருவாக்கப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட Email முகவரிக்கு அனுப்பப்படும் எதிர்கால தேவைக்காக (Reference ) இந்த டோக்கன் எண்ணை வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் PAN விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறையைத் தேர்வு செய்யவும். Duplicate PAN-க்கான உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மூன்று விருப்பங்களைப் பெறுவீர்கள். விண்ணப்ப ஆவணங்களை நீங்களே அனுப்புங்கள்.

ஒப்புகைப் படிவத்தை அச்சிட்டு, தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று, பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் NSDL இன் PAN சேவை பிரிவுக்கு அனுப்பவும்.

e-KYC மற்றும் e-Sign (காகிதமற்ற) மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கவும்.

இதற்கு ஆதாரைப் பயன்படுத்தவும். OTP மூலம் உங்கள் விவரங்களை அங்கீகரிக்கவும். படிவத்தில் Digital Signature, உங்களுக்கு டிஜிட்டல் கையொப்பம் (DSC) தேவைப்படும். பிறகு உங்கள் புகைப்படம், அடையாளம் மற்றும் பிற ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.

உங்களுக்கு Physical பான் கார்டு வேண்டுமா அல்லது ePAN கார்டு வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் e-PANத் தேர்வுசெய்தால், சரியான email id யை வழங்க வேண்டும். ஆவணங்களைச் சமர்ப்பித்து பணம் செலுத்துங்கள்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, “தொடர்பு மற்றும் பிற விவரங்கள்” மற்றும் “ஆவண விவரங்கள்” பிரிவின் கீழ் அனைத்துத் தகவல்களையும் வழங்கவும். இதற்குப் பிறகு, நீங்கள் பணம் செலுத்தப்பட்டதும், ஒரு ஒப்பகை உருவாக்கப்படும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்