வீட்டு வைத்திய முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

வீட்டு வைத்திய முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?
X

Home remedies to remove dark spots on face- முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குதல் ( கோப்பு படங்கள்)

Home remedies to remove dark spots on face- வீட்டு வைத்திய முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Home remedies to remove dark spots on face- முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான வீட்டு வைத்தியம்!

பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான அழகு பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது முகப்பருக்கள் மற்றும் முகத்தில் கருந்திட்டுக்கள் வருவது. இவை பெண்களின் முகத்தில் அழகைக் கெடுத்துவிடும். எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்பதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி தங்களை மெருக்கேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். ஆனாலும் அனைத்துச் சருமத்திற்கும் ஏற்றதாக அமையுமா என்றால் நிச்சயம் கேள்விக்குறி தான்.


மேலும் சில நேரங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய அழகுசாதன பொருட்களும் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இனி விலையயர்ந்த அழகு சாதனப் பொருட்களை வாங்க வேண்டாம். உங்களது வீடுகளில் தினமும் சமைப்பதற்கு மற்றும் சாப்பிடக்கூடிய சில பொருட்களை வைத்தே உங்களை அழகாக்கிக் கொள்ள முடியம்.

அதன் லிஸ்ட் உங்களுக்காக.

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்:

தக்காளி:

சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள், கருந்திட்டுக்கள் போன்றவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக உள்ளது தக்காளி. அனைத்து சருமம் கொண்ட பெண்களுக்கும் சிறந்த டோனராகப் பயன்படுகிறது. எவ்வித செலவும் இன்றி இயற்கையாக சருமப் பொலிவைப் பெறுவதற்குப் பேருதவியாக உள்ள தக்காளியை முதலில் நன்கு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை முகத்தில் அப்ளை செயது சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உங்களால் இதுபோன்று செய்வதற்கு நேரம் இல்லையென்றாலும் தக்காளியைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.


பப்பாளி:

சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க வேண்டும் என்றால் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த பப்பாளி பழங்களை நீங்கள் பயன்படுத்தலாம். பப்பாளி பேஸ் பேக் போடும் போது பழங்களை நன்கு அரைத்து மற்றும் மசித்து கூழாக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டார் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு காய்ந்ததும் 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதுப்போன்று தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் முகத்தில் படிந்துள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.


கேரட்:

பெண்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் முகத்தை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஏதாவது விசேசம், திருமணம், பார்ட்டிகளுக்குச் செல்லும் போது தான் தங்களை மிகவும் அழகாக காட்ட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இதுப்போன்றவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கேரட் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையம்.

முதலில் கேரட்டை தோல் சீவி ஜூஸாக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கேப்பை மாவை கலந்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிக் கொள்ளவும். உங்களுக்கு இன்ஸ்டன்ட் க்ளோவைத் தருவதோடு கோல்டன் பேசியல் செய்தது போன்று இருக்கும்.

Tags

Next Story
ai powered agriculture