Kapitu Thittam Card download: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
Kapitu Thittam Card download: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்வோம்.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.
இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
• தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.40 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
• இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
• இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்கள் :
• இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
• சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல் இந்த வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உதவி மையம் :
• இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைபேசி எண்.1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
CMCHIS சேர்க்கை செயல்முறை எளிதானது. உங்களிடம் (விண்ணப்பதாரர்) தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தால், கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
படி 1: உங்கள் கிராமத்தில் உள்ள நிர்வாக அதிகாரி அல்லது வருவாய் அதிகாரிகளிடமிருந்து வருமானச் சான்றிதழைக் கோரவும்.
படி 2: குறிப்பிட்ட ஆவணங்களை அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பதிவு மையத்தில் சமர்ப்பிக்கவும்.
படி 3: கியோஸ்க் ஆபரேட்டரால் அவற்றைச் சரிபார்த்து, கைரேகை, புகைப்படம் மற்றும் கண் ஸ்கேன் போன்ற உங்கள் பயோமெட்ரிக்ஸைப் படமெடுக்க தொடரவும்.
படி 4: சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் ஸ்கேன் செய்தவுடன், மின் அட்டை விரைவில் வழங்கப்படும்.
காப்பிடு திட்ட அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
பதிவு செய்யும் போது பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. கார்டு தொலைந்து போனால், முதலமைச்சரின் உடல்நலக் காப்பீட்டு அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 1: மருத்துவ காப்பீடு திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் (http://www.cmchistn.com/memInstr.php).
படி 2: கோரப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
படி 3: 'Generate E-Card' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த வழியில், நீங்கள் காப்பீட்டு திட்டம் அட்டை ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை முடித்து பதிவிறக்கம் செய்ய உருவாக்கலாம். CMCHIS ஆன்லைன் கார்டு நடைமுறையை முடித்து, உருவாக்கப்பட்ட மின் அட்டையைச் சேமிக்கவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu