எண்ணெய் வழியும் முகத்தை பளிச் என பொலிவாக மாற்றுவதற்கு இதோ சில டிப்ஸ்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. இதற்கு அகத்தில் அதாவது நமது உடலுக்குள் ஏதாவது ஒரு பகுதியில் நோய் இருந்தால் கூட அதனை முகம் காட்டி கொடுத்து விடும் என்று மட்டும் பொருள் அல்ல. தற்போதைய நவநாகரீக உலகம் நமது முகம் பளிச் என பொலிவுடன் இருக்கவேண்டும் என்பது தான் நமது எண்ணமாக இருக்கும்.
முகம் பளிச்சென்று பிரகாசமாக இருப்பதையே நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் எண்ணெய் வழியும் முகம் கொண்டவர்களுக்கு அப்படி இருப்பதில்லை. அவர்கள் சோர்வான தோற்றம் ஏற்படுவதால் வருத்தம் அடைகிறார்கள். எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு ஒப்பனையும் அதிக பலன் கொடுப்பதில்லை. சருமத்தில் சீபம் எனும் திரவம் சுரப்பதால் தான் எண்ணெய் வடிவது போன்ற தோற்றம் உருவாகிறது.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும் அதிகமாக சுரக்கும் போது முகத்தை மந்தமாக மாற்றி விடுகிறது. சீபம் அதிகம் சுரந்து முகத்தில் எண்ணெய் வடிவதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம். அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது எண்ணெய் வடியும் முகம் இருந்தால் உங்களுக்கும் அவ்வாறு இருப்பதில் ஆச்சரியம் இல்லை .ஏனெனில் இது மரபு வழியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.
பருவ வயதினர் மற்றும் இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு எண்ணெய் வழிவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். வயது கூடும்போது இயற்கையாகவே சருமத்தில் எண்ணெய் தன்மை குறைந்துவிடும். பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சருமத்தை பெரும் அளவு பாதிக்கிறது. வெப்பமான ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால்தான் குளிர்காலத்தை காட்டிலும் கோடையில் எண்ணெய் அதிகமாக சுரக்கிறது. முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும் ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன்கள் தான் சருமத்தில் எண்ணெய் சுரக்க செய்கிறது.
பெண்களுக்கு பருவ வயதிலும் பிரசவ காலத்திலும் இந்த ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். மன இறுக்கம் உடல் நல குறைவு காரணமாக கூட முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும் .சருமத்துளைகள் பெரிதானால் எண்ணெய் அதிகமாக சுரக்கும். வயது கூடும் போது இப்படியான வாய்ப்பு உண்டு. சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் சருமம் வரண்டு விடும். இதனால் எண்ணெய் அதிகமாக சுரக்கும் உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதா என்பதை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.
சரும துளைகள் முகத்தில் பிசுபிசுக்கும் தன்மை, ப்ளாக் ஹெட் எனப்படும் முகத்தில் தோன்றும் கரிய நிற முட்கள் முகப்பருக்கள், முரடான சருமம் ஆகியவை உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதை குறிக்கலாம். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சரி விகித உணவை உட்கொள்வது அவசியம் எண்ணெயில் பொறித்த உணவுகள், இனிப்பு அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், பழங்களை நிறைய உட்கொள்ளலாம் அதிகம் ஒப்பனை இடக்கூடாது. மன இறுக்கத்தை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி எண்ணெய் வழியும் பிரச்சினை முகத்தில் தொடர்ந்து நீடித்து வந்தால் குடும்ப மருத்துவரையோ அல்லது தோல் சிகிச்சை மருத்துவ நிபுணர்களையோ அணுகி முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu