nanban quotes in tamil: நட்பின் அழகையும் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் மேற்கோள்கள்
nanban quotes in தமிழ்: நட்பின் அழகையும் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் சில நட்பு மேற்கோள்கள்..
தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும் கிடைத்தால்
அவர்கள் கூட தாய் தந்தை தான்…
உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்,
நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்…
சோகமான நேரம் கூட மாறிப்போகும்..
வலிகள் கூட தொலைந்து போகும்…
நண்பர்கள் உடன் இருந்தால்..
நல்ல நண்பனிடம் எவ்வளவு கோபமும் காட்டலாம்..
ஆனால், ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக் கூடாது…
யாரிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ
அவன்தான் உன் நண்பன்…
ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் துணை இருக்கிறார்..
நண்பன் எனும் பெயரில்…
நட்பு எவ்வளவு முக்கியமெனில் வாழ்நாள் முழுவதும் அருகில் இல்லை என்றாலும்..
எங்கோ இருந்து இறுதிவரை ஆறுதலுடன் அன்பாய் இருந்தாலே போதும்…
நல்ல நண்பன் உள்ள எவனும் வாழ்க்கையில் தோற்றுப்போக மாட்டான…
ஒரு துளி கண்ணீரைத் துடைப்பது நட்பு இல்லை
மறு துளி வராமல் தடுப்பது தான் உண்மையான நட்பு…
மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்…
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்…
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு..!
நீண்டதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டு என்றும் மறைவதில்லை…
பள்ளி நாட்களில் அரட்டை அடித்த நினைவுகளை.!!!
சேரும் போது அழுவதும் பாடசாலையில் தான்…
பிரியும் போது அழுவதும் பாடசாலையில் தான்..!
பள்ளி முடிந்து நண்பர்களுடன் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி
இப்போது கார்களில் சென்றாலும் கிடைப்பதில்லை…
ஒரு காலத்தில் சந்தோச பறவைகளும்,
நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவு கூடு பள்ளிக்கூடம்….!!!
ஒன்பது மணி ஆனாலும் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷப்பட்டோம்…
இப்போது அந்த நாட்களுக்காக ஏங்கி நிற்கின்றோம்…!!!
கல்வி சுமையால் தேய்பிறையாய் இருந்த எங்களை…
இதய சுமையால் வளர்பிறை ஆக்கியது இந்த நட்பு..!
நாம் அமர்ந்து பேசிய புல்வெளி என்றும் நம் நட்பை பேசும்…
நட்பு என்பது குழந்தையை போல
துன்பத்திலும் இன்பத்திலும் நம்மைவிட்டு
பிரியாமல் புன்னகை மாறாமல் இருக்கும்…!
காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை.
காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு…!
நட்புக்கு வயது அவசியமில்லை…
பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு..!
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை
நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறந்த கருவிதான் நட்பு…
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்துவிடாதே மறந்துவிடு.
ஏனெனில், அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்.
நட்பு என்பது இரவில் தோன்றும் நிலவல்ல..
பகலில் தோன்றும் ஆதவனும் அல்ல…
என்றும் நிலைத்திருக்கும் வானம்…
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு…
எந்த இடத்தில் உண்மையான நட்பை கண்டு பிடிக்கிறாயோ,
அங்கே உண்மையான அன்பையும் கண்டு கொள்வாய்.
எந்த இடத்தில் உண்மையான நட்பை கண்டு பிடிக்கிறாயோ,
அங்கே உண்மையான அன்பையும் கண்டு கொள்வாய்.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடு….
ஆனால் எதற்காகவும் நண்பனை விட்டு கொடுக்காதே..
நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு !
மனதில் வைத்து மரணம் வரை தொடர்வதே நட்பு !
நண்பனை பற்றி அடுத்தவர்களிடம் சொல்லும் போது நல்லதை சொல்,
அவனிடம் மட்டுமே அவன் குறைகளை சொல் அதுவே சிறந்த “நட்பு”…
இணைந்து இருக்கும் போது நிறை காண்பது நட்பல்ல…
பிரிந்து இருக்கும் நிலையிலும் குறை காணாமல் இருப்பதே சிறந்த நட்பு…
கண் இல்லாமல் காதல் வரலாம்
கற்பனை இல்லாமல் கவிதை வரலாம்
ஆனால், உண்மையான அன்பு இல்லாமல் நட்பு வராது…
நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல நம் தலை எழுத்து முடியும் வரை…
ஆயிரம் சொந்தங்கள் நம்மை தேடி வரும்.
ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்…
எல்லாம் இருந்தபோது என் இன்பத்தில் இணையாக..
ஏதும் இல்லாதபோது என் துன்பத்தில் துணையாக…
எக்காலமும் எனக்கு ஒப்பற்ற உறவாய் இருப்பது நண்பர்கள் மட்டுமே…
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பர்களை பெற்றிருப்பது சிறந்தது…
ஆனால், உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பர்களை பெற்றிருப்பது கடவுளின் பரிசு…
கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன் அலை
வந்து அடித்து செல்லவில்லை படித்துச் சென்றது உண்மையான நட்பு என்று…
முள்ளில் வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை…
அன்பில் வளரும் நட்பை யாரும் மறப்பதில்லை…
எதிர்பார்க்கின்ற உறவுகளுக்கிடையில் சிக்கி தவிக்கின்ற மனமும்
குதூகலமாய் இருப்பது எதிர்பார்பில்லா நட்பினால் மட்டுமே…
எங்கே பிறந்தாலும் எப்படியோ இருந்தாலும் உணர்வை உணர்வுக்கு
ஒன்று சேர தருவது தான் உயிர் நட்பு…
அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அன்பு,
அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது நட்பு…!
வேரூன்றி நிற்கும் பெரிய மரம் போல நம் நட்பின் ஆழம்
இன்னும் சென்று கொண்டே இருக்கும்.
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை..
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…
எண்ணங்கள் எங்கே சென்றாலும் நினைவுகள் வேறு இடம் நினைத்தாலும்
நெஞ்ச நினைவலைகளால் நெஞ்சை நிறைத்தது உன் நட்பு தானே..
நாம் அழுதால் தான் கண்ணீர் துளிகள் வரும்
ஆனால் நல்ல நண்பன் அருகில் இருந்தால் கண்ணீர் துளிகளும்
நம்மை விட்டு பிரிந்து செல்ல ஏங்கும் உன் நட்பினால்…
தவறு என்பது வாழ்க்கையில் ஒரு பக்கம் ஆனால்,
நட்பு என்பது ஒரு புத்தகம்.
அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழக்காதீர்கள்…
நட்பு பிரிவு எனும் தேர்தலில் நினைவுகளாய்
வாக்களித்து காத்திருக்கிறேன் நட்புகள் மீண்டும் வாழ்வதற்கு…
தேடி வந்த நட்பு தேம்ப அழ வைத்தது தேற்ற
யாருமின்றி தேங்கி நிற்கிறது …
கண்ணீர் துளிகள்
மலரை இழந்தால் மீண்டும் பெறலாம்
ஆனால், நட்பை இழந்தால் மீண்டும் பெறமுடியாது.
பிரிவு துயரம் ஆனந்த கண்ணீர் வலி நட்பிலும் உண்டு.!!!
இந்த மேற்கோள்கள் நட்பின் சாராம்சம், அதன் மதிப்பு மற்றும் நண்பர்களிடையே உருவாகும் சிறப்பு பிணைப்புகளைப் படம்பிடிக்கின்றன. அவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையில் உள்ள நண்பர்களுக்கு உங்கள் பாராட்டுகளை தெரிவிக்க அவற்றைப் பயன்படுத்தவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu