அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! 'நட்பூ' கவிதைகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நட்பூ கவிதைகள்
X
Heart Touching Friendship Quotes in Tamil-நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். இதயத்தைத் தொடும் நட்பு கவிதைகள் உங்களுக்காக

Heart Touching Friendship Quotes in Tamil

நட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

தேர்ந்தெடுக்கும் நிறம் உன் குணம் காட்டும். ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும். உன்னை யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு நட்பு புனிதமானது.

''நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,'' என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.

நட்பினை பற்றிய சிறந்த கவிதைகள் உங்களுக்காக

பறவைக்கு கூடு

சிலந்திக்கு வலை

மாட்டுக்குத் தொழுவம்

மனிதனுக்கு நட்பு

வயதுக்கு ஏற்ப மதிப்புமிக்கதாக வளரும் மூன்று விஷயங்கள் உள்ளன;

பழைய மரம் எரிக்க,

பழைய புத்தகங்கள் படிக்க,

பழைய நண்பர்கள் அனுபவிக்க.

ஒரு விசுவாசமான நண்பன் பத்தாயிரம் உறவினர்களுக்கு சமம்.

நட்பு என்பது நீங்கள் யாரை நீண்ட காலமாக அறிந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. அது உங்கள் வாழ்க்கையில் நுழைந்து, "நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்" என்று கூறி, அதை நிரூபிப்பது பற்றியது.

உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன் ..

உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள்.

இருண்ட இடங்களில் உங்களைத் தேடி வந்து உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்களே உண்மையான நண்பர்கள்.

ஒரு உண்மையான நண்பன் என்பவன், ஒரு மனம் எனும் தோட்டத்தில் உள்ள உடைந்த வேலியை மட்டும் பார்க்காமல், அதனுள் உள்ள அழகான பூக்களை ரசிப்பவன்.

கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு ஆண்டவனே எதிர்த்தாலும் உனக்காக உயிரையே தருவான்.

பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம் இது தான் நட்பு!

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடு ஆனால் எதற்காகவும் உன் நண்பனை விட்டு கொடுக்காதே.

மனைவி கடவுள் தந்த வரம் தாய் கடவுளுக்கு நிகரான வரம் ஆனால் நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம்!

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!

காரணமே இல்லாமல் கடுங்கோபம் கொண்ட போதும் அருகில் வந்து அமைதியாகக் கரம் பற்றி, அன்போடு அரவணைத்து ஆதரவாக ஆறுதல் கூறும் அழகான நட்பு கிடைப்பது கடினம்.

நல்ல நட்புக்கு, ஆணா பெண்ணா தேவையில்லை துரோகம் இல்லாத நம்பிக்கையே போதும்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!