/* */

ஆரோக்கியமா இருக்க அன்னாசிப்பழம் சாப்பிடுங்க அண்ணாச்சி

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது

HIGHLIGHTS

ஆரோக்கியமா இருக்க அன்னாசிப்பழம் சாப்பிடுங்க அண்ணாச்சி
X

தென் அமெரிக்காவில் தோன்றிய அன்னாசிப்பழம் கரீபியன், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹவாய் போன்ற பிற வெப்பமண்டல பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று, கோஸ்டாரிகா, பிரேசில், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவை அன்னாசிப்பழங்களின் முன்னணி உற்பத்தியாளர்களாகும்.

அன்னாசிப்பழம் உலகம் முழுவதும் பரவி, பல உணவு வகைகளில் பிரதானமாகவும், பழ பிரியர்களிடையே மிகவும் பிடித்தமானதாகவும் மாறியுள்ளது. இது சுவையானது மட்டுமல்ல, இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது


அன்னாசிப் பழங்கள் உருவாவதில் உள்ள சிறப்பம்சத்தைப் பற்றியும் அதில் நிறைந்துள்ள அதிசயிக்க வைக்கும் சத்துக்களைப் பற்றியும் கேட்கும்போது, அவை நம்மை யோசிக்காமல் சாப்பிட வைக்கின்றன. பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

கண் பார்வை என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு எல்லோருக்குமே குறையத் தொடங்கும். இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி பழங்களுக்கு மட்டுமே உள்ளது.

ஒரு சில பழங்களையே எந்த வேளையிலும் சாப்பிட முடியும். அதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் நிரம்பியும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அருமையான ஒரு பழம் அன்னாசிப்பழம். பார்க்க கரடுமுரடாக இருக்கலாம். தோல் சீவி இதனை நறுக்குவதும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதன்பின் கிடைக்கும் பழம் சுவையானது மட்டுமல்ல, அளவில்லாத நற்குணங்களைக் கொண்டது.

ஊட்டச்சத்து நன்மைகள்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

அன்னாசிப்பழம் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமான மாங்கனீசும் அவற்றில் உள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, தாமிரம், பொட்டாசியம் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவை அன்னாசிப்பழத்தில் காணப்படும் மற்ற ஊட்டச்சத்துக்கள்.


ப்ரோமிலைன் என்சைம்

அன்னாசிப்பழத்தின் சிறப்பு 'ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. 'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.

அன்னாசிப் பழத்தைத் தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் 'ப்ரோமிலைன்' உள்ளது.

நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் 'ஆன்டிஆக்சிடன்ட்' வைட்டமின் 'சி' சத்தில் உள்ளது. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும். வைட்டமின் 'சி' யுடன் 'மாங்கனீஸ்' தாதுப்பொருள், வைட்டமின் 'பி', தையாமின் போன்றவையும் இப்பழத்தில் உள்ளது. அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும்.


அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.


அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.


எச்சரிக்கை

இதை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, இதன் அளவை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். பர்டூ பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறையின் கூற்றுப்படி, வைட்டமின் சி நிறைந்த பழங்களை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

அன்னாசிப் பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இது நமது உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்த கூடும். இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், இது ரத்தப்போக்கை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளன. எனவே, சிலருக்கு இதை அதிகமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும். அந்த வகையில், அரை கப் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் 15 கிராம் ஆகும். எனவே, இதன் அளவில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அன்னாசிப் பழத்தின் அமிலத் தன்மையின் விளைவாக பற்கள் மற்றும் ஈறுகள் மிகவும் மோசமடையக் கூடும். மேலும், இது பல் சொத்தை மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம். நமது நோயெதிர்ப்பு அமைப்பு அன்னாசிப் பழத்தில் உள்ள புரதத்தை மகரந்தம் அல்லது வேறு ஒவ்வாமை என்று தவறாகக் கருதி கொள்ள கூடும் என்பதால் இந்த நிகழ்வு நிகழ்கிறது.

அன்னாசி ஜூஸ் குடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது சில சமயங்களில் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். அதனால் வெறும் வயிற்றில் இதை குடிக்க கூடாது. அதே போன்று, அன்னாசி ஜூஸை அதிக அளவிலும் எடுத்து கொள்ள கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Updated On: 19 March 2023 6:17 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 2. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 3. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 4. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 5. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 6. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 7. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...
 8. திருவள்ளூர்
  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள்...
 9. திருவள்ளூர்
  100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன
 10. விளையாட்டு
  சார்பட்டா பரம்பரை: வடசென்னையின் குத்துச்சண்டை மரபு