மஞ்சள் மகிமை என்னவென்று தெரியணுமா? படிச்சுப் பாருங்க..
Turmeric Uses in Tamil
Turmeric Uses in Tamil
பழங்காலத்தில் இருந்தே மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. தவிர மஞ்சள் அதிசய மசாலா என்றும் குறிப்பிடப்படுகிறது. சுளுக்கு பிடித்த கணுக்கால்களில் மஞ்சள் பற்று போடுவதில் இருந்து, சளியில் இருந்து விடுபட விரலி மஞ்சளை சுட்டு புகை சுவாசித்தல் வரை, மஞ்சளை வீட்டு நிவாரணியாக பல இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். பாரம்பரியமான ஆயுர்வேத மருத்துவ முறையில் பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தாவரவியல் ரீதியில் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், இந்தியாவில் பல மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவில் 75 சதவீதம் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது
மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
தமிழர் வாழ்வியலில் மஞ்சளை மிக முக்கிய பொருளாகக் கருதுகின்றனர்.
- புதிதாக ஒரு வீட்டில் குடியேறுபவர்கள்பவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.
- புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர்.
- மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.
- பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவர்.
- மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவர்..
- மேலும் பெண்கள் வீடுகளில் தயாரிக்கும் முகப் பொலிவு கலவைகளில் சிறிது மஞ்சளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். தோலை மருவற்றதாகவும், மினுமினுப்பாகவும் மஞ்சள் வைத்துக் கொள்ளும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இந்தியர்கள் அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். பாரம்பரிய இந்திய சமையலில் உணவு நல்ல நிறம் தர மஞ்சள் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மசாலா மற்றும் சாம்பார் ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் கிழங்கை வைத்து ஊறுகாய் கூட செய்கிறார்கள். இது சமைப்பதற்கு மட்டுமின்றி சளி மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்ட்டிமுட்டஜெனிக், ஆன்ட்டிகார்சினோஜெனிக், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள். பழங்காலத்தில் இருந்தே இது ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. தவிர மஞ்சள் அதிசய மசாலா என்றும் குறிப்பிடப்படுகிறது.
உலர் மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (பி 2), வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது. எனவே இது எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது
உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை மஞ்சள் அதிகரிக்கிறது.ஏனெனில் இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. மேலும் உடலின் ஆக்ஸிஜனேற்ற நொதிகளை தூண்டும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மஞ்சள் ஒரு அற்புதமான இயற்கை பொருள் ஆகும், ஏனெனில் இது மூட்டு தொடர்பான பிரச்னைகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
வயிற்றில் வாயு உருவாவதை தவிர்க்கவும், அஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபடவும் இது உதவியாக இருக்கிறது.
உலகின் மிக கொடிய நோயான புற்றுநோயிலிருந்து கூட மஞ்சள் பாதுகாப்பு அளிக்கும். மஞ்சளும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ கேன்சரை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராக வலுவான சைட்டோடாக்ஸிக் விளைவுகளைக் கொண்ட ஆக்ட்டிவ் கலவைகளான கர்குமோல் மற்றும் கர்டியோனை மஞ்சள் கொண்டுள்ளது.
கிருமிநாசினி:
மஞ்சள் இயற்கையாவே சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், குடற் பூச்சிகள் போன்றவை நீங்கும்.
கொழுப்பைக் குறைக்கும்:
கொழுப்பின் அளவை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருள் இருப்பதால், இது எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து அதன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது.
புண்கள்:
புண்கள் வேகமாக ஆறவேண்டும் என்றால் புண்களில் கிருமித் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். புண்கள் மீது மஞ்சளை தடவி வந்தால் இயற்கையான கிருமிநாசினியாக செயல்பட்டு, புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல் காத்து புண்களை வேகமாக ஆற்றுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu