மனித ஆரோக்கியத்துக்கு தக்காளி இவ்வளவு நன்மைகள் செய்கிறதா?

Health benefits of tomatoes- தக்காளிகளை சாதாரணமாக நினைக்காதீங்க, அதுல நிறைய மகத்துவங்கள் இருக்கு (கோப்பு படம்)
Health benefits of tomatoes- இந்திய உணவுகளில் தக்காளி காலாகாலமாக தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் உணவுப் பொருளாகும். இதை உணவில் சேர்த்தால் உணவின் சுவை கூடும் என்பதைத் தவிர தக்காளி நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாகும். இதன் புளிப்பு சுவை உணவுக்கு சரியான ருசியைக் கொடுக்கிறது.
தக்காளியில் பொட்டாசியம், விட்டமின் கே, விட்டமின் சி, ஆக்சிஜனேற்றங்கள் மற்றும் தேவையான தாதுக்கள் அனைத்துமே நிறைந்த ஒரு அதிசய பழமாகும். இது நம் உடலில் ஏற்படும் தீவிர நோய்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டுள்ளது. குறிப்பாக ஹைபர் டென்ஷன் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தக்காளி உதவும் என சொல்லப்படுகிறது.
தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
தக்காளியில் விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளின் ஆதாரமாக தக்காளி உள்ளது. தக்காளியில் உள்ள லைகோபின் என்ற எல்டிஎல் ரத்த அழுத்த அளவைக் குறைத்து கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்.
தக்காளி நமது சருமத்திற்கு இயற்கையாகவே பளபளப்பை கொடுக்கும் தன்மை கொண்டதாகும். இது முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெயை குறைத்து முகப்பருவை நீக்கி சருமத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கும்.
உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே உடலில் சோடியம் சத்து குறைய பொட்டாசியம் சத்தின் தேவை அதிகம். அது உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து சமமாக்க உதவுகிறது. எனவே இதனால் உங்களுடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
தக்காளி விட்டமின் கே, விட்டமின் சி, பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களின் புகலிடமாக உள்ளது. இவ்வளவு ஆற்றல் மிக்க தக்காளி நமது உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகும். இது நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய தசைகளுக்கு தேவையான முக்கிய உணவாகக் கருதப்படுகிறது.
தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற பொருள் புற்று நோய்க்கு எதிராக போராடும் பண்புகளை உள்ளடக்கியதாக சொல்கின்றனர். மேலும் நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்றுநோயிலிருந்தும் தக்காளி பாதுகாப்பை அளிக்கும்.
சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது.
உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.
இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும்.
மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும். சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதையும் மீறி இன்னும் இதில் நன்மைகள் அடங்கியுள்ளது.
ஆரோக்கியமான சருமம்
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது. அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
வலுவான எலும்புகள்
வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும். மேலும் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu