சுருள்பாசியில சூப்பரான சத்து இருக்குங்க!

Spirulina Tablets Benefits in Tamil
ஸ்பைரூலினா என்பது ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. ஈரப்பதத்தில் வளரக் கூடியது. மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இது கடற்பாசி வகையை சேர்ந்தது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கொண்டது. ஆய்வாளர்கள் விண்வெளிப் பயணத்தின்போது இதையே உணவாகப் பயன்படுத்துகின்றனர். இதன் முழுமையான பயன்களையும், சக்தியையும் முன்னரே அறிந்திருந்தால், இன்று நம்மைத் தாக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
ஸ்பைரூலினாவில் விட்டமின் பி, சி, டி, ஈ போன்ற விட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இதில் முக்கியமக குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது. அதிக புரதமும் இருக்கின்றது. இது பல்வேறு உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அளவிற்கு பெரும் ஆற்றல் கொண்டது.
55-65% உள்ள புரதம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கடின உழைப்பாளிகள், மூத்தோர்கள் என அனைவருக்கும் ஏற்ற இணை உணவாகும்.
- இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதிலுள்ள துத்த நாகச்சத்து முடி உதிர்தலை தடுக்கிறது.
ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகம் உள்ளது இது இந்தியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி. இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான், மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்
- இந்த ஸ்பைரூலினா பொடி, மாத்திரை மற்றும் கேப்ஸ்யூல் வடிவில் கடைகளில் விற்கப்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் சிறிது எடுத்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடலை நோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

- பால், முட்டை மற்றும் பருப்பு வகைகளை விட அதிகமான அளவிலான புரோட்டீன்கள் ஸ்பைரூலினாவில் உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் புரோட்டீன் குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
மேலும் ஸ்பைரூலினாவில் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை அதிகம் உள்ளதால், இது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
- ஸ்பைரூலினாவில் உள்ள அனைத்து வகையான அமினோ அமிலங்கள் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ஸ்பைரூலினாவில் உடலுக்கு தேவையான மைக்ரோ கனிமங்கள் மற்றும் மேக்ரோ கனிமங்கள் வளமாக உள்ளன. அதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஜிங்க் மற்றும் குரோமியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக இதில் பாலை விட அதிகமான அளவில் கால்சியம் உள்ளது.
ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகமான அளவில் உள்ளது. இது உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் சிறிது ஸ்பைரூலினாவை உட்கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் ஸ்பைரூலினாவை எடுத்தால், 6 வாரத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பம் சரும பிரச்சனைகள், பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu