/* */

தாமரை விதை சாப்பிட்டுள்ளீர்களா? அவ்வளவு சத்துங்க!

Makhana in Tamil-தாமரை விதைகளில் ஒளிந்துள்ள எண்ணற்ற மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

Makhana in Tamil
X

Makhana in Tamil

Makhana in Tamil-மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்பார்கள். எப்போதும் ஒரு சிறிய பொருளில்தான் அதிக சக்தி இருக்கும் என்பதை நாம் கேள்வி;ப்பட்டிருப்போம். அதே போன்றுதான், இந்த சிறிய தாமரை விதையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. தாமரை விதை பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் பிரபலமாக உண்ணக்கூடிய ஒரு பொருள்

நம் முன்னோர்கள் இந்த விதைகளை மருத்துவத்திற்கு அதிகம் பயன்படுத்தினர். சீனர்கள் தாமரையின் இலைகள் மற்றும் இதழ்களை பாரம்பரிய மருத்துவத்தில் பெரிதும் உபயோகிக்கின்றனர். இதே போன்று ஜப்பானியர்கள் இதன் வேர், விதை, தண்டு என பலவற்றையும் ஒரு காய்கறி போல பயன்படுத்தி வருகின்றனர்.

ஊட்டசத்துக்கள் ஏராளம்

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

  • கால்சியம் 44 mg
  • இரும்புச் சத்து 95 mg
  • பொட்டாசியம் 104 mg
  • மெக்னீசியம் 56 mg
  • புரதம் 1.2 g
  • காப்பர் 094 mg
  • கார்ப்ஸ் 18.6
  • பாஸ்பரஸ் 168 mg
  • ஜின்க் 28 mg

தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு. இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் அதிக அளவில் உதவுகிறது. நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருப்பதன் மூலம் நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது

இதை காலை சிற்றுண்டியாகவும் பிற நட்ஸ்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்

தாமரை விதையின் பயன்கள்

எடை இழப்பு

இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால், இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது.

இந்த உணவை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இந்த உணவை காலையில் அல்லது மதியம் என ஏதேனும் ஒரு வேளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

தாமரை விதையில் பிளேவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யும்

  • இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் உள்ளது. ஆரோக்கியமான ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

  • எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து தேவை. தாமரை விதையில் இவை அதிக அளவில் நிறைந்துள்ளது. எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டு பிரச்னை போன்ற நிலைமைகளை சரிசெய்ய உங்கள் உணவில் நீங்கள் தாமரை விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
  • வறுத்த தாமரை விதையை சாப்பிட்டால், அதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமான சூழலை உடலுக்கு தருகிறது.
  • இதில் உள்ள அதிகப்படியான மக்னிசியமும், குறைந்த அளவிலான சோடியமும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. வாரத்திற்கு 2 முறை இதை சாப்பிட்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படும்.
  • தாமரை விதைகள் சிறுநீர் பாதையில் உள்ள நோய் கிருமிகளை அழித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • அல்சர், வாய் புண்கள் மற்றும் குடல் புண்களை குணப்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை காக்கும். மேலும் பல்லின் உறுதியை பலப்படுத்தவும் இந்த விதைகள் உதவுகிறது.

உலர வைத்த தாமரை விதைகளை, இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் அதனை சூப், சாலட்ஸ் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்து சமைத்து உண்ணலாம். அல்லது இதனை வறுத்து சமையலில் தேவைக்கேற்ப பயன்படுத்தியும் கொள்ளலாம். மேலும் மாலை வேளையில் இதனை நொறுக்குத்தீனி போன்றும் தயார் செய்து பரிமாறலாம்.

தாமரை விதைகளின் பக்க விளைவுகள்

தாமரை விதைகள், இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன, அதனால் அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 10:08 AM GMT

Related News