Health Benefits of Eating Salted Peanuts- உப்புக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதா?

Health Benefits of Eating Salted Peanuts- உப்புக்கடலை சாப்பிடுங்க! உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க! (கோப்பு படம்)
Health Benefits of Eating Salted Peanuts- உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
தினமும் ஒரு கைப்பிடி அளவிற்கு உப்புக்கடலை சாப்பிடுவது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தரும். தின்பண்டக் கடைகளில் கிடைக்கும் உப்புக்கடலையை வழக்கமாக நாம் மாலை நேரத்தில் சாப்பிடுகிறோம். இந்த மொறுமொறுப்பான சிற்றுண்டி நம் ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத நன்மைகளை வழங்குகிறது.
பூங்கா அல்லது கடற்கரைகளில் வெறுமனே நடந்து செல்வதற்கு பதிலாக உப்புக்கடலையை சாப்பிட்டு கொண்டே நடந்தால் அது இனிமையான நினைவுகளைத் தரும். இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் வாழும் மக்கள் குளிர்காலத்தில் இந்த சிற்றுண்டியை விரும்பிச் சாப்பிடுவர்.
இந்த மொறுமொறுப்பான உப்புக்கடலை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். தற்போதெல்லாம் சந்தையில் ஆரோக்கியமான உணவுகளைத் தேடித் தேடி நாம் வாங்குகிறோம். ஆனால் ஆரோக்கியமான உணவு என்ற பெயரில் விற்கப்படும் உணவுகளில் ஊட்டச்சத்து இருக்கிறதா என சோதித்தால் அது உண்மைக்குப் புறம்பாக இருக்கும்.
எனவே அதற்கு பதிலாக நீங்கள் உப்புக்கடலையை தேர்ந்தெடுத்து சாப்பிட தொடங்கினால் உங்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை நேரடியாக உணரலாம்.
உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
நார்ச்சத்து மற்றும் புரதம்
உப்புக்கடலை சாப்பிட்டால் உங்களின் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் புரத பூர்த்தியாகும். 100 கிராம் அளவிற்கு மொறுமொறுப்பான இந்த சிற்றுண்டியில் இரண்டு ஊட்டச்சத்துக்களும் சுமார் 18 முதல் 20 கிராம் வரை இருக்கும்.
உப்புக்கடலை சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பது போலவே தோன்றும். இதனால் நீங்கள் அதிகமாகக் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இது தவிர உப்புக்கடலை உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நீங்கள் அதிக சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
எடை இழப்புக்கு உதவி
உப்புக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எடை இழப்புக்கு சிறந்த சிற்றுண்டியாகவும் அமைகிறது. அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் உங்களை நீண்ட நேரம் திருப்தியாக வைத்திருக்கும். உப்புக்கடலை பொதுவாகவே குறைந்த கலோரி எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
எனவே கூடுதல் கலோரிகளை உட்கொள்வதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நெய்க்கடலை மற்றும் கலர் கலர் அப்பளங்களை தின்பண்டமாகச் சாப்பிடுவதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக ஒரு கைப்பிடி உப்புக்கடலையை தேர்வு செய்யவும்.
இதய ஆரோக்கியம் மேம்பாடு
உப்புக்கடலை சாப்பிட்டால் இதய ஆரோக்கியமும் மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? இதில் தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாக உப்புக்கடலை விளங்குகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் ஆய்வின் படி பாஸ்பரஸ் அளவுகளுக்கும் இதய நோய் அபாயத்திற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.
எனவே மொறுமொறுப்பான இந்த சிற்றுண்டியை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய இதய அரோக்கியம் மேம்பட்டு கொண்டே இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
சர்க்கரை நோயாளிகள் எந்தவித கவலையும் இல்லாமல் உப்புக்கடலை சாப்பிடலாம். உப்புக்கடலை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தாது. இதில் உள்ள அதிக நார்ச்சத்தும் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
உப்புக்கடலையை நீங்கள் கடைகளில் தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டு சமையலறையில் கருப்பு கொண்டைக்கடலை இருந்தால் போதும். கருப்பு கொண்டைக்கடலையை நீங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். கடையில் இருந்து கருப்பு கொண்டைக்கடலையை வாங்கிய பிறகு அதில் இருக்கும் அழுக்கு மற்றும் கற்களை நீக்கி விடுங்கள்.
அடுத்ததாக ஒரு கடாயில் அரை கிலோ உப்பு போட்டு அதை நன்கு சூடுபடுத்தவும். உப்பு சூடாகும் போது அதன் நிறம் மாறும். அப்போது கருப்புக் கொண்டைக்கடலையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க தொடங்குங்கள். நீங்கள் சாலையோரங்களில் வியாபாரிகள் வேர்க்கடலை வறுப்பதை பார்த்திருப்பீர்கள்.
அது போல தான் கருப்பு கொண்டைக்கடலை வறுக்கும் முறையும் கூட. கரண்டி பயன்படுத்தி சூடாக இருக்கும் உப்பை எடுத்து கொண்டைக்கடலை மீது தூவுங்கள். பாப் கான் போல் பொரிந்து வரும். அதன் பிறகு அதை வெளியே எடுத்து ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடுங்கள் மிகச் சுவையாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu