கொண்டைக்கடலையிலுள்ள இவ்வளவு மருத்துவ குணங்களா?....முதலில் படிங்க...

கொண்டைக்கடலையில் ஏராளமான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை நம்முடைய குடல் ஆரோக்கியம் முதல் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது

HIGHLIGHTS

கொண்டைக்கடலையிலுள்ள இவ்வளவு மருத்துவ குணங்களா?....முதலில் படிங்க...
X

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை என இரண்டு வகைகள் உள்ளன. இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது.

இரண்டுமே அதிக சத்துக்களையும், புரதத்தையும் கொண்டுள்ளது. அவை நம்பமுடியாத அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களை அதிகம் கொண்டுள்ளன. கொண்டைக்கடலை நமது உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைப்பதற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

கொண்டைக் கடலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கொண்டைக்கடலையை வறுத்து சாப்பிட்டாலும் சரி இல்லை வேக வைத்து சாப்பிட்டாலும் சரி மிகுந்த சுவையுடன் இருக்கும். இதை சிலர் சாலட்டுகளில் கூட பயன்படுத்துவது உண்டு.


கொண்டைக் கடலையில் உடலுக்கு தேவையான மேக்ரோ நியூட்ரியன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என அனைத்து சத்துக்களும் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, போலேட், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து என அனைத்து சத்துக்களும் காணப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் காணப்படுகிறது.

இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது, அந்த வகையில் கொண்டைக்கடலை சாப்பிடும் போது எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என பார்ப்போம்

கொண்டைக்கடலையில் உள்ள சத்துக்கள்

 • போலிக் அமிலம்
 • இரும்பு சத்து
 • மெக்னீசியம்
 • புரதச்சத்து
 • வைட்டமின்கள்
 • சுண்ணாம்பு சத்து
 • வைட்டமின் பி
 • செலினியம்
 • மெக்னீசியம்
 • நார்ச்சத்து போன்ற சத்துக்கள் கொண்டைக்கடலையில் உள்ளது.

ஊற வைத்த கொண்டைக்கடலை பயன்கள்:

மாரடைப்பு நோய்களை குணப்படுத்தவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கொண்டைக்கடலை பயன்பட்டு வருகிறது

இரும்பு சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து கொண்டைக்கடலையில் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது, இதில் இருக்கும் நார்ச்சத்து உணவுகளை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.

இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளவும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

கொண்டைக் கடலையில் இருக்கும் செலினியம் மற்றும் நார்ச்சத்து கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும், புற்றுநோய் வரமால் தடுக்கவும் உதவுகிறது.

இதய நோய் வராமல் தடுப்பதற்கு உதவும் பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம், மெக்னீசியம் இருப்பதால் இதயத்தை பாதுகாக்கவும், இதய நோய்களை சரி செய்யவும் உதவுகிறது.

கொண்டைக்கடலையில் இருக்கும் கோலைன் (Choline) சத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது

இரத்த சோகை உள்ளவர்களுக்கு உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு கொண்டைக்கடலை ஒரு சிறந்த உணவு. 4.7கி இரும்புசத்து 100 கிராம் கொண்டைக்கடலையில் உள்ளது.

சளி, இருமல், மூச்சு திணறல், நுரையீரல் நோய் போன்றவற்றை சரி செய்ய கொண்டைக்கடலையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்.

இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதற்கு கொண்டைக்கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரில் கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும் மற்றும் முகம் பொலிவு பெறும்.

ஆண்மையை அதிகரிக்கவும் கொண்டைக்கடலை உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் போலிக் அமிலம் கொண்டைக்கடலையில் இருப்பதால் உடலில் வைட்டமின் பி சத்து அதிகரிப்பதற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

குழந்தைகளுக்கு நினைவுத் திறன் அதிகரிப்பதற்கு உணவில் கொண்டைக்கடலையை சேர்த்து கொள்வது நல்லது.

வெள்ளை கொண்டைக்கடலை நன்மைகள்: சிறுநீர் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கொண்டைக்கடலையை பொடியாக செய்து சாப்பிட்டு வரலாம். சிறுநீர் அடைப்பு, எரிச்சல் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.


கொண்டைக்கடலை சாப்பிடக்கூடாதவர்கள்

• மூல நோய், வாத நோய், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அப்படி சாப்பிடுவதாக இருந்தாலும் குறைந்த அளவு சாப்பிடுவது சிறந்தது.

பக்க விளைவுகள்

பச்சை கொண்டைக்கடலை நச்சுத்தன்மையுள்ளதாக இருக்கக்கூடும். எனவே, அவற்றை ஊறவைத்து பின்னர் புதிய தண்ணீரில் சமைப்பது நல்லது.

மேலும், கொண்டைக்கடலையில் அழற்சி பண்புகள் அதிகமாக உள்ளதால், அவற்றை அதிகமாக உட்கொள்வதால் சில பேருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்

Updated On: 24 Dec 2022 12:05 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Happy Birthday Anni Quotes In Tamil பிறந்த நாள் நம் வாழ்வினை ...
 2. லைஃப்ஸ்டைல்
  Plant Based Diet in Tamil- இதய நோயாளிகளை பாதுகாக்க உதவும் தாவர...
 3. ஈரோடு
  ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை 57வது ஆண்டு விளையாட்டு விழா
 4. அரசியல்
  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பிரதமர்
 5. கோயம்புத்தூர்
  கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
 6. உசிலம்பட்டி
  பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
 7. வீடியோ
  Modi செய்த செயல் அதிர்ச்சியடைந்த Annamalai !#annamalai #annamalaiips...
 8. ஈரோடு
  கோபி அருகே இளம் வயது திருமண எதிர்ப்பு, கோடை வெப்பம் விழிப்புணர்வு...
 9. திருவள்ளூர்
  சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் சேலையில் தீ
 10. Trending Today News
  Leap Year- லீப் வருடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது ஏன் தெரியுமா?