அற்புத மருத்துவ குணம் கொண்ட அவரைக்காய்.

Avarakkai Benefits in Tamil
X

Avarakkai Benefits in Tamil

Avarakkai Benefits in Tamil-நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்திருக்காது.

Avarakkai Benefits in Tamil

மனிதனுக்கு உணவாக பயன்படும் தாவரங்கள் பல இருக்கின்றன. அதில் கொடியாக படர்ந்து காய்களை தரும் பல தாவர வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “அவரைக்காய்”.

உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும்.

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும் அது ஒரு பீன்ஸ் அல்லது பட்டாணி வகையைச் சார்ந்த தாவரமாகும். அவரை மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது.

அவரைக்காய் சுவையான உணவு என்பதை தவிர தனக்குள் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

பொதுவாக நாம் உண்ணக்கூடிய 1/4 கப் அவரையில் 9 கிராம் அளவிற்கு கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. அதனால் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நமது இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகிறது.

அவரைக்காயைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. அதனால் உடல் எடையும் குறைகிறது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

புரதம்: அவரைக்காய் புரதத்தின் வளமான மூலமாகும், ஒரு கப் சமைத்த அவரையில் சுமார் 13 கிராம் புரதம் உள்ளது.

அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் புற்றுநோய் போன்ற பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதில் உள்ள அதிகப்படியான இரும்புச் சத்து நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

அவரையில் உள்ள நார்ச்சத்து நாம் உட்கொள்ளும் உணவினை நன்கு செரிமானம் செய்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.

பொதுவாக நமது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அதிகமாகத் தேவைப்படும் கால்சியம் அவரைக்காயில் உள்ளது.

நமது நுரையீரலிலிருந்து மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது. அவரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதய ஆரோக்கியம்: அகன்ற பீன்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு: அகன்ற பீன்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்புச் சத்து நிறைந்துள்ள அவரைக்காய்களை தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிக பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business