பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா?.... புதுடிரஸ்சு, பட்டாசு, இனிப்பு.......படிங்க....

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா?....  புதுடிரஸ்சு, பட்டாசு, இனிப்பு.......படிங்க....
X
Happy Diwali In Tamil முற்காலத்தில் வீடுகளிலேயே அதிரசம், லட்டு, முறுக்கு, கேசரி போன்ற சுவையான இனிப்புகளைத் தயாரிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்று நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையினால், கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்புகளை வாங்குவதே எளிதான தேர்வாகிவிட்டது.

Happy Diwali In Tamil

தீபாவளிப் பண்டிகையானது வருடத்திற்கு ஒரு நாள் அதாவது அக்டோபர்அல்லது நவம்பர் மாதத்தில் வரக்கூடிய பண்டிகையாக இது கருதப்படுகிறது. இந்துக்கள் அனைவரும் வெகு சந்தோஷத்துடன் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் முதலிடம் பெறுவது தீபாவளிப்பண்டிகைதான். உலகில் உள்ள அத்தனை தமிழர்களும் அந்த தினத்தில் புத்தாடை உடுத்தி, இனிப்புடன் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடும் பண்டிகையாக இது அக்காலம் முதல் இக்காலம் வரை திகழ்ந்து வருகிறது. காலப்போக்கில் பட்டாசுகளினால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தடுப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க அரசால் நேரம் நிர்ணயிக்கப்பட்டு அந்த நேரத்தில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அந்த நேரத்தில் உத்தரவிடப்படுகிறது. இருந்த போதிலும் ஒரு சிலர் அதனைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் இஷ்டம்போல் பட்டாசுகளை வெடிப்பதை அந்த நாட்களில் காணமுடிகிறது.

Happy Diwali In Tamil


காலங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி என மாறி வரும் வேலையில் இதற்கான வாழ்த்து அட்டைகள் தற்போது தடம் மாறிப்போயுள்ளன. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் வாயிலாக வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்படுவதால் வாழ்த்து அட்டைகளின் விற்பனை களையிழந்து போயின. அதேபோல் முன்பெல்லாம் தீபாவளி என்றாலே கோலிவுட்டில் 10 க்கும் மேலான படங்கள் ரிலீஸ் ஆகும். தீபாவளி தினத்தில் வெளியானால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் எனக் கருதியவர்கள் தற்போது வசூலுக்காக முன்பே வெளியிட்டுவிடுகின்றனர். புது சினிமாக்களின் வரவும் அந்த நாட்களில் குறைந்தே போயின கால மாற்றத்தால்....என்னதான் காலங்கள் மாறினாலும் ஒரு சில குடும்பங்களில் எப்போதும் போல் மகிழ்ச்சியோடு இந்த பண்டிகையை வரவேற்பதுதான் தற்போதைய ஹைலைட்டே....

தீபாவளி என்பது வெறும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்திருக்கும் பண்டிகை அல்ல. இது நம் வாழ்வில் இருக்கும் இருளைப் போக்கி, ஒளியைக் கொண்டு வரும் ஒரு விசேஷமான நாள். இந்தப் பண்டிகையின் பின்னணியில் இருக்கும் கதைகள், கொண்டாட்ட முறைகள், கால மாற்றங்களில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் என பல சுவாரஸ்யமான அம்சங்களைப் பற்றி இன்று காண்போம்.

Happy Diwali In Tamil

தீபாவளி என்றால் என்ன?

‘தீபம்’ என்றால் ‘ஒளி’ என்றும் ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’ என்றும் பொருள். வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள் இருளை விரட்டி ஒளியைக் கொண்டு வருவதைக் குறிக்கும் இந்தப் பெயரே, இந்தப் பண்டிகையின் சாரத்தைச் சொல்லிவிடுகிறது.

தீபாவளி கொண்டாடுவதன் காரணங்கள்

இந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, பல காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.

ராமர் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியது தசரத மன்னனின் மகனான இராமர், பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்று, இராவணனை வென்ற பின்னர் அயோத்தி திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நரகாசுரன் மிகுந்த கொடுமைகள் புரிந்த அசுரனாக நம்பப்படுகிறான். பூமாதேவிக்குப் பிறந்த நரகாசுரனை யாராலும் வதம் செய்ய முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். எனினும், தன் தாய் பூமாதேவியின் கையால்தான் மரணம் சம்பவிக்கும் என்று வரம் பெற்றிருந்த அவனை, கிருஷ்ணர் சாதுர்யமாக அழித்தார். இந்த சம்பவம் தீமையின் மீதான நன்மையின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.

பட்டாசுகளும் தீபாவளியும்

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகளுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. ஒளி, வர்ணங்கள், வெடிச்சத்தம் இவற்றின் மூலம் நன்மையின் உற்சாக வெற்றியைக் கோலாகலமாக வெளிப்படுத்தும் ஒரு வழியாகவே கருதப்படுகிறது. எனினும், கால மாற்றத்தில் பட்டாசுகளின் அதீத ஒலி, மாசு போன்றவற்றால் விழாவில் சில புதிய சவால்களும் எழுந்துள்ளன.

Happy Diwali In Tamil

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

வருடந்தோறும் பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதீத காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஆகியவை பெரும் கவலையை அளிக்கின்றன. இதனால் நுரையீரல், இருதய பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல், பறவைகள் மற்றும் விலங்குகளும் பட்டாசு சத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்

இன்று விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் பலவும் அதிக சக்தி கொண்டவையாகவும், சில சமயங்களில் தரம் குறைந்தவையாகவும் இருக்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

மாற்றுவழிகள் - பசுமை தீபாவளி

சமீப காலங்களில் 'பசுமை தீபாவளி' என்ற கருத்து மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளைக் கடைபிடிப்பது முக்கிய அம்சமாக உள்ளது.

இயற்கைக்கு உகந்த பட்டாசுகள் :

குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் சந்தையில் கிடைக்கின்றன. பாரம்பரிய பட்டாசுகளைத் தவிர்த்து, இவற்றைப் பயன்படுத்தலாம்.

சத்தமில்லா கொண்டாட்டங்கள் : சிறிய ஒளி வண்ண விளையாட்டுகள் கொண்ட அழகான பட்டாசுகள் மூலம், ஒலி மாசுபாடைக் குறைக்கும் வகையில் கொண்டாட்டங்கள் அமையலாம்.

கலாச்சார நிகழ்ச்சிகள் : பட்டாசு சத்தத்திற்குப் பதில், குடும்பத்தினர், நண்பர்களோடு இணைந்து நடனம், பாடல், நாடகம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

Happy Diwali In Tamil


தீபாவளி இனிப்புகளும் வீட்டுத் தயாரிப்பும்

தீபாவளிக்கு இனிப்புகள் ஒரு தனிச்சிறப்பைக் கொடுக்கும்! முற்காலத்தில் வீடுகளிலேயே அதிர்சம், லட்டு, முறுக்கு, கேசரி போன்ற சுவையான இனிப்புகளைத் தயாரிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்று நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையினால், கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்புகளை வாங்குவதே எளிதான தேர்வாகிவிட்டது.

இதனால் கடைகளின் போட்டி, விற்பனைக்காகச் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை போன்றவை சில நேரங்களில் ஆரோக்கியத்திற்குத் தீங்காக அமைகின்றன. இனிப்புப் பிரியர்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இனிப்புகளைத் தயாரிக்க முயற்சிப்பது, இந்தத் தீபாவளியை இனிமையுடன் கூடிய ஆரோக்கியமானதாகவும் மாற்றும்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..! | How To Stop Anxiety Instantly In Tamil