இனிய பிறந்தநாள் பாடல்கள் 2022!

Happy Birthday Song in Tamil
X
Happy Birthday Song in Tamil - ஆண்டுக்கு ஒருமுறை நாம் ஹீரோவாக இருப்பது, பிறந்தநாளன்று தான். சிறப்பு மிக்க அந்த நாளில், உங்களுக்கு விருப்பமானவரை வாழ்த்த விரும்புகிறீர்களா? இதோ, உங்களுக்காக... The song is sung in Tamil language. It is a famous kid's song which is often sung on special occasions like parties, birthdays or special occasions.

Happy Birthday Song in Tamil - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். ஒருசிலர், தமிழ் மாதத்தையும் நட்சத்திரத்தையும் (ஜன்ம நட்சத்திரம்) கணக்கில் கொண்டு கொண்டாடுவார்கள். மேற்கத்திய வழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிட்ட இன்று, பெரும்பாலானவர்கள் ஆங்கில தேதியின் அடிப்படையில்தான் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

பிறந்தநாள் தொடங்கும் அந்த நள்ளிரவு, 12:00 மணிக்கு கேக் வெட்டி, முகத்தில் கிரீம் பூசி, நிசப்தமான இரவிற்கும் இனிப்பூட்டி கலகலப்பூட்டுவார்கள். பிறந்தநாளில் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி, பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்ந்து, அந்த நாளை சிறப்பாக்குகிறோம்.

பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெறுவது, ஆலயம் சென்று அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் வீடு திரும்புவது என்று, பிறந்த நாள் களைகட்டுகிறது. இன்னும் சிலர், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதல், காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குதல் என்று பிறருக்கு உதவி, செய்து அவர்களின் மகிழ்வித்து இறைவனின் ஆசியை பெறுகிறார்கள்.

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில், டிஜிட்டல் வாழ்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இன்னும் சொல்லப்போனால், பிறந்தநாளே வாட்ஸ் அப் மெசேஜ், ஸ்டேட்டஸ் வீடியோ என்று வாழ்த்து மழையுடன் தான் தொடங்குகிறது.

பிறந்த நாளன்று வீட்டில் கேக் வெட்டுகிறோம். மெழுவர்த்தி அணைத்து கேக் வெட்டும் போது சுற்றி இருப்பவர்கள் Happy birthday பாடல் பாடுகின்றனர். அந்த பாடலின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் உள்ளது.

Happy Birthday to You

Happy Birthday to You

Happy Birthday Dear (name)

Happy Birthday to You.

From good friends and true,

From old friends and new,

May good luck go with you,

And happiness too

How old are you now?

How old are you now?

How old, How old

How old are you now?

- இவ்வாறு, கோரஸாக பாடுகிறோம்.

தொன்மையான நமது தமிழ் மொழி, அமிழ்தினினும் இனியது. தமிழ் தமிழ் என்று முழங்கும் நாம்,பிறந்த நாளன்று ஏன் தமிழிலும் வாழ்த்துப் பாடல் பாடி, ஒரு புதிய முன்னுதாரணமாகக் கூடாது? தமிழில் வாழ்த்துப்பாடி, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாருங்கள்... Likes அள்ளும். உங்களுக்காகத்தான், பாவலர் அறிவுமதி எழுதிய பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது. ஒரு மாற்றத்தை, நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது?

பாடல்:

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் . . . .

வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்

பண்பு வேண்டும் பழகவேண்டும்

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்

எடுத்துக் காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை

நிலவுத் தாளில் எழுத வேண்டும்!

சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு

நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!

பிறந்தநாள் வாழ்த்துகள்!

பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு