Haircare tips for summerகோடை காலத்தில் முடியை பராமரிக்க சில டிப்ஸ்....
பைல் படம்.
Haircare tips for summer-ஹேர் வாஷ் என்றாலே ஷாம்பூ தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு வகையான கூந்தலுக்கு ஏற்றவாறு ஷாம்புகள் கடைகளில் கிடைக்கின்றன. தற்போது கோடைகாலத்தில் அதிக உஷ்ணத்தால், கூந்தலும் சருமமும் பாதிக்கப்படுகின்றன. எனவே, கோடைகாலத்தில் எப்படி வெயிலுக்கு ஏற்றார் போல உங்கள் உடை, உணவு என்று மாற்றுகிறீர்களோ, அதே போல கூந்தல் பராமரிப்புக்கு கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட வேண்டும்.
வறட்சியான காற்று, வியர்வை மற்றும் வெப்பம் உச்சந்தலை மற்றும் கூந்தலின் வேர்க்கால்களை பாதித்து, முடியை எண்ணை பசையாக்கும். எனவே, கோடை காலத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்பூ பயன்படுத்துவது அழுக்கு, பிசுபிசுப்பை நீக்குவதோடு, கூந்தலை மென்மையாக்கி, அழகாக்குகிறது. ஆனால், வழக்கத்தை விட அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தும் போது, கூந்தலில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை பாதிக்கும்.
ஷாம்புவை பயன்படுத்தும் முக்கியமான 2 முயைகளை காணலாம்:
1. தலையில் சர்குலர் மோஷனில் ஷாம்பூ அப்ளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்
ஷாம்பூவை தலை முழுவதும் அப்ளை செய்யும் போது பலரும் அதை வட்ட வட்டமாக விரல்களை வைத்து ஸ்கால்ப் முழுவதும் அப்ளை செய்வார்கள். அதாவது, முகத்தில் கிரீம் அப்ளை செய்வது போலவே சிறிய சிறிய சர்குலர் மோஷனில் தலையிலும் அப்ளை செய்தால் ஷாம்பூ நன்றாக லேதர் ஆகும் என்று பலரும் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு செய்யும்போது, முடி க்கற்றைகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, பாதிப்படையும். அதற்கு மாற்றாக, கூந்தலை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து, பக்கவாட்டில் (சைட் டு சைட்) ஷாம்பூ அப்ளை செய்வது, ஷாம்பூவை நன்றாக பரவ செய்வதோடு, முடி கற்றைகளையும் பாதிக்காது.
2. ஷாம்பூ முடியின் வேர்களுக்குத் தான், முடி கற்றைகளுக்கு அல்ல:
முடி எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அதற்கு ஷாம்பூ அப்ளை செய்ய கூடாது. முடியில் எண்ணெய் பசை, அழுக்கு, வறண்டு போவது என்று எல்லாமே உச்சந்தலை பகுதி அதாவது முடி வேர்கள் இருக்கும் ஸ்கால்பில் தான் இருக்கிறது. ஷாம்பூ பயன்படுத்தும் போது, வேர்க்கால்கள் இருக்கும் பகுதிக்கு மட்டும் அப்ளை செய்ய வேண்டும். முடியின் நீளத்துக்கு அல்ல. ஷாம்பூவை மென்மையாக தேய்த்து அலசும் போது, அதுவே முடி கற்றைகளையும் கவர் செய்து விடும். நேரடியாக முடிக்கற்றைகளுக்கு ஷாம்பூ அப்ளை செய்து, அதை தேய்க்கும் போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, பாதிப்படையும் மற்றும் கூந்தல் உதிரும்.
Haircare tips for summer-மேலும், உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பூவை பயன்படுத்துங்கள். இயற்கையாகவே வறண்ட கூந்தல் இருப்பவர்கள் அதிக மாயிஸ்ச்சர் இருக்கும் ஷாம்பூவை தேர்வு செய்ய வேண்டும். அடிக்கடி ஷாம்பூவை பயன்படுத்தும் சூழலில், மைல்டான அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu