தினமும் சாம்பார், ரசம் சாப்பிட்டு அலுத்துப் போச்சா? - இனி சூடான சாதத்துக்கு இதை ட்ரை பண்ணுங்க!

தினமும் சாம்பார், ரசம் சாப்பிட்டு அலுத்துப் போச்சா? - இனி சூடான சாதத்துக்கு இதை ட்ரை பண்ணுங்க!

Green lentil gravy recipe- சுவை மிகுந்த பச்சைப்பயிறு குழம்பு ( கோப்பு படம்)

Green lentil gravy recipe- சில புதிய வகை உணவுகளை சாப்பிடும் வரை அதன் அதீத சுவை நமக்கு தெரியாது. ஒருமுறை சாப்பிட்டு விட்டால், பிறகு அது நமது உணவு பட்டியலில் நிரந்தர இடத்தை பிடித்து விடுகிறது.

Green lentil gravy recipe- கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்

கொத்தவரங்காய் -1/4 கிலோ

கடலைப்பருப்பு - 100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

வற்றல் - 2

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கடுகு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிக்கவும்.

கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஊறவைத்து களைந்து கெட்டியாக அரைத்து மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த பருப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறி வேகவைத்த கொத்தவரங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


கருணைக்கிழங்கு துவையல்

தேவையான பொருட்கள்

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ

இஞ்சி - 1 சிறிய துண்டு

மிளகாய் -1

எலுமிச்சை - 1

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

வெல்லத்தூள், எண்ணெய், கடுகு, பொட்டுக்கடலை தலா - 1 ஸ்பூன்.

செய்முறை:

கருணைக் கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கி தோல் உரித்து மசித்துக்கொள்ளவும் கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய மிளகாய், மஞ்சள்தூள் தாளிக்கவும்.

மசித்த கருணைக்கிழங்கில் உப்பு, வெல்லத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கெட்டியானதும் எலுமிச்சம் பழம் பிழிந்து ஊற்றி இறக்கவும்.


இஞ்சிப்புளி

தேவையான பொருட்கள்;

புளி - 100 கிராம்

குருத்து இஞ்சி - 200 கிராம்

பச்சை மிளகாய் - 50 கிராம்

வெல்லம் - 100 கிராம்

கறுப்பு எள் - 50 கிராம்

கடுகு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 4 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

இஞ்சி, மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். எள்ளை களைந்து கல் நீக்கி வெறும் கடாயில் வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து இஞ்சி , மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, புளி கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பின்பு வெல்லத்தை தூளாக்கி போட்டு கொதிக்க வைத்து எள்ளுப் பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.


பச்சை பயறு குழம்பு

தேவையான பொருட்கள்

பச்சை பயறு பருப்பு - 1கப்

தக்காளி - 3

நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிது

மல்லித்தழை - சிறிது

கறிமசால் தூள் - 1 ஸ்பூன் கடுகு, மல்லித்தூள் தலா 1/2 ஸ்பூன், சீரகம், சீரகத்தூள், மஞ்சள்தூள் தலா - 1/4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 3 ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்


செய்முறை;

வாணலியில் மணம் வர பருப்பை வறுத்து எடுக்கவும். பின் ஒரு குக்கரில் வறுத்த பருப்பு, நறுக்கிய தக்காளி, 1ஸ்பூன் நெய், மஞ்சள்தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின் பருப்புடன், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி மல்லி தழை சேர்த்து கொதிக்கவிடவும். அதன்மேல் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பருப்பு குழம்பு ரெடி!

Tags

Next Story