மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கான அரசு நலத்திட்டங்கள்

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கான அரசு நலத்திட்டங்கள்
X

பைல் படம்

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கு அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச உபகரணங்கள்:

மூன்று சக்கர வண்டி வழங்குதல்: இரண்டு கால்களும் செயல் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடியவர்கள். தகுதி: 12 முதல் 65 வயது வரை. 12 முதல் 15 வயது வரை சிறிய மூன்று சக்கர வண்டி. 16 முதல் 65 வயது வரை பெரிய மூன்று சக்கர வண்டி.

சக்கர நாற்காலி வழங்குதல்: இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயல் இழந்தவர்கள். தகுதி: 5 முதல் 70 வயது வரை.

கால்தாங்கிகள் (காலிப்பர்-கிரட்சஸ்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல்: மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும்.

காதொலி கருவி வழங்குதல்: 3 முதல் 70 வயது வரை காதொலி கருவி.

சூரிய ஒளியால் சக்தி பெறும் சோலார் பேட்டரி வழங்குதல்: காதொலி கருவி உபயோகப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை.

பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் வழங்குதல்: இரண்டு கண்களிலும் பார்வை இல்லாமை. தகுதி: 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.

பார்வையற்றோர்களுக்கு பிரெய்லி கைக்கடிகாரம் வழங்குதல்: சுயதொழில் செய்பவராகவோ, அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்பவராகவோ 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கர்களாகவோ இருக்கலாம்.

கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் வழங்குதல்: விபத்தினாலோ பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள்.

பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி இலவசமாக மாணவர்களுக்கு வழங்குதல்: கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

திருமண உதவித்தொகை

பார்வையற்றவரை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல்:

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும்.

21 வயது பூர்தியாகி இருக்க வேண்டும்.

ரூ. 12500 ரொக்கமாகவும் ரூ.12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

பேசும் திறனற்ற காது கேளாதவரை திருமணம் செய்யும் நல்ல நிலையிலுள்ள நபருக்கு ரூ. 25000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல்:

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும்.

அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது.

21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

ரூ. 12500 ரொக்கமாகவும் ரூ. 12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

ஒரு கை (அல்லது) ஒரு கால் (அல்லது) இரண்டு அவயங்களும் முழுவதுமாக மாற்றுத் திறனாளியை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்க்கு ரூ. 25000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல்:

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும்.

அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது.

21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

ரூ. 12500 ரொக்கமாகவும் ரூ. 12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளியை மாற்றுத் திறனாளி திருமணம் செய்யும் நபருக்கு உதவித்தொகை ரூ. 25000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல்:

இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும்.

அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது.

21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

ரூ. 12500 ரொக்கமாகவும் ரூ. 12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.

மேற்கண்ட திருமண நிதியுதவி திட்டங்களில் பட்டயம், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயின்ற பெண்களுக்கு மட்டும் ரூ. 50000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். ரூ. 25000 ரொக்கமாகவும் ரூ. 25000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் 4 கிராம் தங்கம் ஆகியவை வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை வழங்குதல் 8 ஆம் வகுப்புக்கு மேல் அரசு பள்ளியிலோ அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலோ கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஆண்டுக்கு ரூ. 500 கல்வி உதவித்தொகை (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு), ஆண்டுக்கு ரூ. 1500 கல்வி உதவித்தொகை (6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு) வழங்கப்படும்.

வங்கிக் கடன்

சுயவேலை வாய்ப்பு வங்கிக் கடன் அரசு மானியம் வழங்குதல்:

மாற்றுத் திறனாளி என்பதற்கு அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

வங்கிகளில் ஏற்கெனவே கடன் பெற்று நிலுவைத் தொகை இல்லாதவராக இருக்க வேண்டும்.

வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ. 3000 இதில் எது குறைவோ அது அரசு மானியமாக வழங்கப்படும்.

பயணச் சலுகை

பேருந்து பயணச் சலுகை (பார்வையற்றோர்):

பார்வையற்றோர் அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

நகர மற்றும் புறநகரப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் மட்டும் சென்றுவர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் மையம்

ஆரம்ப நிலையில் ஊனத்தைக் கண்டறிதல்.

மனவளர்ச்சி குன்றிய இளம் சிறுவர்களுக்கான ஆரம்பப் பயிற்சி மையம் (0-6 வருடங்கள்).

மூளை முடக்கு வாதம், மனவளர்ச்சி குறைவு, ஆட்டிஸம் போன்ற பாதிப்புள்ள குழந்தைகள் இலவச பயிற்சிக்கு தகுதி உடையவர்கள்.

இலவச தசைப் பயிற்சி, பேச்சுப் பயற்சி, சிறப்புக் கல்வி மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.

பராமரிப்பு உதவித்தொகை

கடும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை:

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள், கடும் உடல் மாற்றுத் திறனாளிகள் (ஊனத்தின் அளவு 60க்கு மேல்) போன்றவர்களில், மாவட்ட தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். மாதம் ரூ. 1000 வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும். அதன் பின்பு வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

தேசிய அடையாள அட்டை

ஊனத்தின் சதவிகிதம் 40% மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாற்றுத் திறனாளிக்ளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். குடும்ப அட்டை நகல் மற்றும் நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற பயன்படும்.

பாதுகாவலர் நியமனம்

மனவளர்ச்சி குன்றியவர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர், புற உலக சிந்தனையற்றவர் மற்றும் பலவைக மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன (கார்டியன்சிப்) சான்று வழங்குதல்:

தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்களுக்கு பாதுகாவலரை நியமிக்க பெற்றோர் அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு அறக்கட்டளை சட்டம் 199ன் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழு மூலம் பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கப்படும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தொழிற்பயிற்சிகள்

கை கால் ஊனமுற்ற காது கேளாத நபர்களுக்கு கணிணி பயிற்சி:

மாற்றுத் திறனாளிகள் 10+2 தேர்ச்சி.

கணிதம், பௌதீகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி.

ஆய்வுக்கூடத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் மற்றும் பொருட்களை உபகரணங்கள் தானே சுயமாக எடுத்துப் பயன்படுத்தும் உடல் தகுதி.

வருமான சான்று மற்றும் தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரியில் இலவச இரண்டு வருட பயிற்சி அளிக்கப்படும்.

மாதம் ரூ. 300 உதவித்தொகை.

எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர். காது மூக்கு தொண்டை மருத்துவர், செவித்திறன் அளவீடு, கண் பார்வை திறன் அளவீடு, தேசிய அடையாள அட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த் துறை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ அலுவலர், மகளிர் திட்ட சுயஉதவிக் குழு அமைத்தல்,. வேலைவாய்ப்புத்துறை, பேருந்து பயண சலுகை ஆகிய துறைகள் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு முகாமில் செயலாற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!