தூக்கம் ஒரு பெரிய கள்வன் பாதி வாழ்நாளை கொள்ளையடிக்கும் இனிய இரவு வணக்கம்.....

தூக்கம் ஒரு பெரிய கள்வன்   பாதி வாழ்நாளை கொள்ளையடிக்கும்   இனிய இரவு வணக்கம்.....
X
Good Night Motivational Quotes in Tamil- ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு இதில் முக்கியமான பகுதியாக இரவு திகழ்கிறது. காரணம் ஓய்வுக்கான பகுதி உறங்குவதற்கான நேரம்... அமைதியின் இருப்பிடம்...இரவு...நிசப்தமான நேரம்.

Good Night Motivational Quotes in Tamil

ஒரு நாளில் உள்ள இருபத்திநான்கு மணி நேரத்தில் நமக்கு நிம்மதியை தரும் நிசப்தமான நேரம்... இரவு... இந்த இரவில் பல அதிசய சாதனைகள் நடந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இரவுகளையே விரும்புகிறார்கள். காரணம் என்ன? மனதிற்கு அமைதியைத் தரும் நேரமாக இருப்பதால் புதுப்புது சிந்தனைகள் உதிக்க களமாகிறது நிசப்தமான இரவு.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், உள்ளிட்ட பல தொழில் செய்பவர்களின் விருப்ப நேரமாக இரவு உள்ளது. ஏன்? பகல் நேரங்களில் வெயில் இருப்பதால் இரவில் தேவைக்கேற்ற சூழல் இருப்பதால் பல வேலைகள் இரவில் நடக்கிறது. இதற்காகவே இரவு ஷிப்டும் பல தொழிற்சாலைகளில் உண்டு.

ஆனால் துாக்கம் என்பது மனிதர்களுக்கு முக்கியமான ஒன்று. நாள் முழுக்க கஷ்டப்படும் நாம் ஓய்வு எடுக்க கூடிய நேரமாக இரவு திகழ்கிறது. அந்த நேரத்தில்தான் நம்முடைய உடல்உறுப்புகளில் பல ஓய்வு எடுக்கிறது. அந்த ஓய்வினை நாம் அளிக்காதபோதுதான் நமக்கு உடல் ஆரோக்ய பிரச்னைகளை ஆரம்பிக்கிறது.

ஒண்ணும் வேண்டாங்க... ஒரு இரவு முழுக்க கண்விழித்து பாருங்கள்.. உங்களின் உடல் பாதிப்பு உங்களுக்கே தெரிய வரும். இரவில் துாங்கும் அமைதி பகலில் கிடைப்பதில்லை. இரவில் 5 மணிநேரம் நிம்மதியாக துாங்கினாலும் உறக்கம் வரும். அதுவே பகலில் நீங்கள் நாள்முழுக்க துாங்கினாலும் அந்த ஆத்ம திருப்தி கிடைப்பதில்லை. ஏன் ? பகலில் உங்கள் துாக்கத்தினை கெடுக்கும் விதமாக சுற்றுப்புற சப்தங்கள் , பேச்சு சப்தங்கள் என பல வழிகளில் நம்மை பாதிக்கும். எனவே இரவு உறக்கம்தான் மேலானது. அதுவும் தற்போது ஸ்மார்ட்போன்கள் வந்தபின் பலரின் இரவு துாக்கம் போயே போச்சுங்க....என்னத்தை சொல்ல...

நீங்கள் துாங்கினாலும் ...துாங்காவிட்டாலும் இன்றைய சோஷியல் மீடியாக்களில் இரவு வணக்கம் என நண்பர்கள், உறவுகள் சொல்கின்றனர். அதில் எப்படி வாசகங்கள் உள்ளது பாருங்களேன்...

இனிய இரவு வணக்கம்... முடியும் இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்... மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும். !

இனிய இரவு வணக்கம்.. மகிழ்வு தரும் நிஜங்கள் பல அருகில் இருந்தாலும் உன் அருகாமை தரும் மகிழ்வை அவை தருவதில்லை

உலகுக்கு ஒளி தரும் சூரியனே உறங்க சென்றுவிட்டது.. என் உயிருக்கு ஒளி தரும் நட்பே நீ மட்டும் ஏன்? போய் கண் உறங்கு... இனிய இரவு வணக்கம்

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு...! ஆனால் ஒரு நாளின் முடிவிலும் ஒரு அனுபவம்..! இதுதான் வாழ்க்கை... இனிய இரவு வணக்கம்

தூக்கம் வருது கனவில் வா சந்திப்போம்... இரவு வணக்கம்

நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது... இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது..! இனிய இரவு வணக்கம்

பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான். இனிய இரவு வணக்கம்

தேவையில்லாம நாளைக்கு நடக்கப்போறது நெனச்சு மனச போட்டு குழப்பிக்காம சிக்கிரமா போயி தூங்குங்கள்... இரவு வணக்கம்

உங்க எல்லாருக்கும் இனிய இரவு வணக்கம்... நல்லா தூங்குங்க

நான் தூங்கப்போறேன்.. இனிய இரவு வணக்கம்

இழக்க விரும்பாவிட்டாலும் இழந்து தான் ஆக வேண்டி உள்ளது சிலவற்றை வாழ்வில்.... இனிய இரவு வணக்கம்

தூங்கும் போது அனைத்து கஷ்டங்களும் மறந்து போவதால் உறக்கம் என்பது கடவுள் கொடுத்த வரமே! இனிய இரவு வணக்கம்.

கண்கள் உறங்கும் நேரம் கனவுகள் விழித்து கொள்ளும் தருணம் நித்திரையை தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும்... இனிய இரவு வணக்கம்

கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது... இனிய இரவு வணக்கம்

தொட்டு தொட்டு ரசிக்கும் இமைகளை கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம்... இனிய இரவு வணக்கம்

சந்திரனே உன் வெளிச்சத்தை சற்று குறைத்துக் கொள், காற்றே நீ வீசும் வேகத்தை சற்று குறைத்துக் கொள், பூமியே நீ சுற்றும் வேகத்தை சற்று குறைத்துக் கொள், பூவே நீ திறக்கும் ஓசையினை சற்று குறைத்துக் கொள், இனிமையாய் உறங்கட்டும் என் இனிய நட்பு

பயந்தால் வருவது தோல்வி. துணிந்தால் வருவது வெற்றி.! இனிய இரவு வணக்கம்

இருப்பதை கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை.. இனிய இரவு வணக்கம்

வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்லை, வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்...! அன்புடன் இனிய இரவு வணக்கம்

ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கை மாறும்... அது நாளையாக கூட இருக்கலாம்.... இனிய இரவு வணக்கம்

இன்று கை கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே. நாளை உனக்காக கைதட்ட உலகமே காத்திருக்கிறது.... இனிய இரவு வணக்கம்

திருந்திய ஒருவனை உன்னால் மன்னிக்க முடியவில்லை என்றால்... அவனது பார்வையில் நீயும் ஒரு குற்றவாளிதான்.... இரவு வணக்கம்

உயர்ந்த விஷயத்தை எளிய முறையில் கூறுவதே அறிவின் லட்சணம்... இரவு வணக்கம்

அன்பும் நட்பும் தொடரட்டும்... இரவு வணக்கம்

என்னுடன் அன்பாய் பேச நீ எனக்கு வேண்டும், ஆசையாய் கோபிக்கவும் நீ வேண்டும், தவறுகளை சுட்டிகாட்ட நீ வேண்டும், என் பெருமைகளை நிலை நாட்டவும் நீ வேண்டும்…

இனிய இரவு.. முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை...

என் இதயமாக நீ இருப்பது கூட சுமையாக இருக்கிறது துடிப்பது நீ அல்லவா... இனிய இரவு வணக்கம்

நலமாய் வாழ தனித்திருப்போம்! அன்பான உறவுகளை நினைத்திருப்போம்! நாளைய விடியலுக்கு காத்திருப்போம்! அன்புடன் இரவு வணக்கம்

குளிர் தென்றல் காற்றில் நிலவு இளைப்பாரும்.... நிலவின் அழகில் கவிதைகள் வழிந்தோடும்... அன்பான இதயங்களின் வருகையால் கனவுகளால் நிறையும் விழிகள்... அதிகாலை வரை இரவை அழகாக்கும் நட்சத்திர விரிப்பு! இனிய இரவு வணக்கம்

வீழ்ந்தாலும்.. முட்டி மோதி உனை காண மீண்டு வந்தேன்... இனிய இரவு வணக்கம்

பிரச்னைகள் நம் கை மீறும் போது இறைவனை நம்பி.... நம்பிக்கையோடு இருக்க முயல்வோம்..! நல்லிரவாகட்டும்....

பகல் முழுவதும் இமைத்து இமைத்து களைத்து போன இமைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுப்போம்.. இனிய இரவு வணக்கம்

இரவென்பது ஒரு அழகான பரிசு... அந்த அழகிய பரிசை திறந்து பார்க்க... உங்கள் இமைகளை மூடியே ஆக வேண்டும்.... இனிய இரவாகட்டும்....

நீயும் நானும் நம் காதலைத் தொடர இந்த இரவு தொடராதா, வேண்டிக்கொள்கிறேன் இந்த இரவு விடியாமல் இருக்க... இனிய இரவு வணக்கம்

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்... இனிய இரவு வணக்கம்

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லாது... இனிய இரவு வணக்கம்

எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நாம் விலகி நின்றாலும் அது நம்மை விரும்பி வரும்!!! இனிய இரவு வணக்கம்

அந்தி வானம் சிவக்கையில் இவள் ஒளிர்கிறாள்! அடிவானில் முத்தமிட்டு நிலவை வரவேற்கும் கதிரவன்! இரவெனும் கவிதையின் நாயகி இவள்! நட்சத்திர பிருந்தாவனத்தில் எழில்மிகு அரசி அவள்! வென்னிலவே! நீ தூரத்தில் நின்று தொடுவானில் புன்னகைக்கிறாய் இரவென்னும் இசையுலகத்தில் மௌனமென்னும் இசையமைக்கிறாள்! மௌனம் எப்போதும் அழகு அன்பான நெஞ்சங்களிடையே!

ஏழையாய் இருக்கும்போது இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் இருக்கும் போதும் இன்பம் காண மாட்டான்...

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும் .. இனிய இரவு வணக்கம்

பல மணி நேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம்.. இரவு வணக்கம்

பிரிவு என்பது யாராலும், மறுக்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்... இரவு வணக்கம்

வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால் பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும்... இனிய இரவு வணக்கம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு