பிரியமான தோழி உங்களுக்கு இருக்கிறாரா? உங்களுக்காக சில கவிதைகள்

Boy Girl Bestie Quotes in Tamil
X

Boy Girl Bestie Quotes in Tamil

Boy Girl Bestie Quotes in Tamil-நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. வயது வித்தியாசமும் கிடையாது.

Boy Girl Bestie Quotes in Tamil

ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். ஆண்-பெண் உறவு என்பது காலத்தின் கட்டாயம். கல்வி நிலையங்கள், வேலை பார்க்கும் இடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் அது தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களில் நட்பு பாராட்ட வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான். நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. வயது வித்தியாசமும் கிடையாது.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களின் சந்தோஷத்திலும், துக்கத்திலும் பங்கு எடுக்கவும் தனக்கு ஆறுதல் சொல்லவும் ஒரு பெண், ஆண் துணை தேவைப்படுகிறது. அவர்கள் காதலர்களாக தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நண்பர்களாவும் இருக்கலாம்.

தோழியின் நட்பு குறித்த சில கவிதைகள்

ஆயிரம் புன்னகைகளை அவள் சூட்டிக்கொண்டு

உலகின் முன் அவள் நின்றாலும்

ஆழ்மனதில் பெருக்கெடுக்கும் கண்ணீர்த் துளிகளோ,

அவன் தோளை மட்டும் சேர காத்திருக்கும்

கொதிக்கும் மணலில் நடக்கும் போது,

நம் கால்கள் ஒரு நிழல் தேடும்!

அவ்வாறு நான் தேடிய நிழல்தான் உந்தன் நட்பு...

தேவைக்காக மட்டுமே

பெண்களை தேடும் ஆண்களின் மத்தியில்,

என்னை தேவதையாக கருதி நடத்துபவன் "என் நண்பன்"

நட்பு காதலாக மாறும்போது

நட்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில்

காதலை சொல்லாமல் மறைப்பவர்கள் அதிகம்!

தோழி உன்னிடம் பகிராத ரகசியமில்லை

பகிா்ந்த பின் அது ரகசியமே இல்லை

என்னிடம் நீயும் உன்னிடம் நானும்

பகிா்ந்த முதல் ரகசியம் நம் நட்பு...

தோள் கொடுக்க தோழனும்

தோள் சாய தோழியும் கிடைத்தால்

அவர்கள் கூட தாய் தந்தை தான்

நல்ல தோழியின் நட்பு தாய் மடியின்

சுகம் தரும்.. ஏனென்றால்

முதல் காதல் என்றாலும்..

முதல் ஏமாற்றம் என்றாலும்

நாம் பகிர தேடுவது தோழியை தான்.

இறைவன் எல்லா இடங்களிலும்

இருக்க முடியாது என்பதற்காக

அன்னையை படைத்தான் என்பார்கள்..

அன்னை இல்லாத இடங்களிலும்

தோழி இருப்பாள் என்பதை

மறந்து விட்டார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story