ஏங்க...உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கா.... படிச்சுதான் பாருங்க...

ஏங்க...உங்களுக்கு நகைச்சுவை  உணர்வு இருக்கா.... படிச்சுதான் பாருங்க...
X
Funny Quotes in Tamil- வாழ்க்கையில பலபேரை வாழ வைக்கிறதே இந்த சிரிப்பு தாங்க. நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு இல்லாவிட்டால் அவர்கள் மரம் தானுங்க.... உசிரு இருந்து என்ன பிரயோசனம் போங்க....


Funny Quotes in Tamil-வாழ்க்கையில கஷ்டம்னு வரும்போது சிரிக்கணும் அதைத்தான் சினிமாவில துன்பம் வரும்போது சிரிங்க ன்னு சொன்னார் வள்ளுவர்னு பாடுவாரு... இடுக்கண்வருங்கால் நகுக....அதாவது துன்பம் வரும்போது உங்க மனசு டைட் ஆகிவிடும்... கனமாகிவிடும். அந்த கனமான மனசை லேசாக ஆக்கணும்னா நீங்க சிரிச்சா ஆயிடும்.. அப்புறம் சிரிக்கத்தானே வேணும்.வாழ்க்கையில் கஷ்டம் அவ்வப்போது வந்து போகுமுங்க.. அதற்கு எல்லாம் கவலைப்பட்டா நாம வாழமுடியாதுங்க...டேக் இட் ஈஸி பாலிசியாக எடுத்துக்கொண்டே போகவேண்டியதுான். ஒவ்வொரு கஷ்டத்தையும் மனசுல போட்டு அலசிக்கிட்ட இருந்தா அவ்வளவுதாங்க வாழ்க்கை... கஷ்டமா போயிடும்.. அப்பப்ப செருப்பை கழற்றி விடுற மாதிரி மனசுல இருந்து வெளியே எடுத்து போட்டுடனும்ங்க..




நகைச்சுவை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கைங்களா? சினிமாவில கூட எதற்கு நகைச்சுவை பகுதியினை சேர்க்கிறார் டைரக்டர் தெரியுமா? ஒரேடியாக கதையாகவே போயிட்டிருந்தா படமே போரடிச்சு போயுடும்...அதனாலதான்இடையிடையே வடிவேலு, விவேக், சந்தானம் , கவுண்டமணி, செந்தில் ,ஜனகராஜ், யோகிபாபு, போன்ற நகைச்சுவை நடிகர்களை வைத்து அவர்களுக்கு ஒரு வசனத்தை கொடுத்து நம்மை சிரிக்க வைக்கிறாங்க...

வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போயிடுமுங்க... அதுவே பாதி நோயைக் குணப்படுத்திவிடும். எனவே எந்த பிரச்னையாக இருந்தாலும் மனசுல போட்டு அழுத்திக்காதீங்க.. வெடிச்சு போயிடும்... யாருகிட்டவாது மனசு விட்டு பேசுங்க...மனசு லேசாயிடும்...

நகைச்சுவை உணர்வுள்ளவர்களே படிச்சு பாருங்க...

ஒரு நாள் லீவு கேட்க ஒன்பது முறை இருமி காட்ட வேண்டியதாய்இருக்கு... மனுஷனை நம்புங்க..

தினமும் சூர்ய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்.. அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் பிஎம்டபுள்யூ கார்ல அல்லவா சுற்ற வேண்டும்..

அதிகமாக படிச்சவன்கிட்டயும்.. அதிகமாக குடிச்சவன்கிட்டயும்.

ரொம்ப நேரம் பேசக்கூடாது.. ஏன்ன அவன் நம்மை கிறுக்கனாக்விடுவான்.

காப்பியில சர்க்கரையை கொட்டினாலும் சர்க்கரையில காப்பிய

கொட்டினாலும் கரையப்போறது என்னவோ சக்கரைதான்..




வீடுகட்டும்போது இருந்த வேகம் தற்போது கடனை கட்டும்போது இல்லையே ஏன்?

வீட்டைமேஸ்திரி, எலக்ட்ரீசியன், சித்தாள் என பல பேர் சேர்ந்து கட்டினாங்க..

கடனை நான் ஒருத்தன் மட்டும்தானே கட்டவேண்டியிருக்கு....

சூப்பர்மார்க்கெட்ல ஒரு பொண்ணு கணவன் கிட்ட கேட்டு கேட்டு சாமான் வாங்குது... கணவன் மேல மரியாதையா, இல்ல சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்னு கேக்குதா தெரியல....

நாம் எத்தனை தடவை அடித்தாலும்திரும்ப திரும்ப நம்ம கிட்டயே வரும் ஒரே ஜீவன் கொசு மட்டுமே.

மனைவிகளுக்கு எப்போதும்கணவன் தான் குழந்தை என்கிறார்கள்.

அதுக்குன்னு எப்போ பாத்தாலும்என்னையே கடைக்கு போக சொல்றா.

திருமணத்திற்கு சென்றால்கல்யாண ஜோடியை கவனிப்பதை விட

நமக்கான ஜோடியைம் தேடுபவர்கள் தான் அதிகம்.

நவரசனை உள்ள பெண் தான் எனக்கு வேண்டும்என்பவனுக்கு புளிரசம் கூட வைக்க தெரியாத பெண் தான் மனைவியாக அமைவாள்ஏன் என்றால் விதி வலியது.

நம்ம வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்Short flim மாறி டக்குனு முடிஞ்சுடும்

இந்த பிரச்சனை மட்டும் English படம் part 5, part 6 மாறி வந்துட்டே இருக்கும்.

காதல் வலிதான்இந்த உலகத்துலயே பெரிய வலின்னுசொல்லிக்கிட்டு திரிரவங்க

கதவுக்கு நடுவுல கைய வெச்சு பாருங்கஅப்புறம் தெரியும் எது பெரிய வலின்னு

எந்த புக் பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருதுஆனா இந்த பேஸ் புக் பாத்தா மட்டும்தூக்கமே வர மாட்டிக்குது.

இந்த உலகத்துலயே பெரிய ஏமாற்றம்செல் போன் சார்ஜ் போட்டுட்டுரெண்டு மணி நேரம் கழிச்சு பாக்கும் போதுசுவிட்ச் போடாமல் இருப்பது தான்.

பசங்க லவ் பண்ணும் போது என்னா பொண்ணுடா அவ லவ் தோல்விக்கு பிறகு பொண்ணா டா அவ.

EB ஆபீஸ் க்கு போன் பண்ணிமழை நின்னு 7 மணி நேரம் ஆகுதுஎப்போ கரண்ட் வரும்னு கேட்டாஉன் போன் ல இன்னுமா சார்ஜ் இருக்குஎன்ன மாடல் னு கேக்குறான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture