Foot exercises for pain relief-கால் வலி சரியாக சில உடற்பயிற்சி செய்யலாம் வாங்க....
பைல் படம்.
Foot exercises for pain relief-இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூட்டுவலி பிரச்சினையால் அவதியுறுகிறார்கள். இதற்கு காரணம் நாம் செய்யும் அன்றாட வேலைகளில் நமது உடல் இயக்கத்திற்கான வேலைகள் மிக குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது முக்கால் மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டுவலி பிரச்னையை சரிசெய்ய உதவும் சில யோகா பயிற்சிகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
இன்று வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினையாக மூட்டுவலி இருக்கிறது. மூட்டு வலி ஏற்படுவதற்கு தவறான உணவு பழக்க வழக்கமும் ஒரு காரணமாகும். இதற்கு மற்றொரு காரணம் கால்களுக்கு இயக்கம் தராமல் இருப்பது ஆகும். நடைப்பயிற்சி என்பதையே மேற்கொள்ளாமல் தற்போது பெரும்பாலும் வெளியில் சென்று வருவதற்கு நாம் வாகனங்களை பயன்படுத்த தொடங்கி விட்டோம். இது மூட்டுகளுக்கு இயக்கத்தை குறைத்து மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
இந்த மூட்டுவலி பிரச்னையை சரிசெய்ய யோகா பயிற்சி நமக்கு உதவி செய்கிறது. மூட்டு வலியை சரிசெய்ய எந்த மாதிரியான யோகா பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் யோக மேட் அல்லது நீங்கள் படுக்கையில் கூட அமர்ந்து இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் கால்கள் இரண்டையும் நீட்டி கைகளை உங்கள் முதுகுக்குப் பின்னால் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம் அல்லது சப்போர்ட்டுக்கு சுவர்களையும் பயன்படுத்தலாம். முதல் பயிற்சி என்னவென்றால், உங்கள் வலது காலின் மூட்டுக்கு அடியில் உங்கள் கைகள் இரண்டையும் இணைத்து கால்களை நெஞ்சுவரை மடக்கி மெதுவாக நீட்டவும்.
இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது மூச்சை உள்ளே இழுத்து பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும். இதேபோல் இடது காலில் மூட்டுக்கு அடியில் கைகளை இணைத்து, நெஞ்சுக்கு நேராக கால்களை மடக்கி மெதுவாக கால்களை நீட்டவும். இப்போது மூச்சை உள்ளே இழுத்து பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும்.
இதே மாதிரி பத்து முறை செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் மூட்டு வலி இருக்கிறதோ அவர்கள் தினமும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒரு முறை இந்த பயிற்சியை மேற்கொண்ட உடன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் அடுத்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
அடுத்த பயிற்சியானது மூட்டுகளை சுழற்றுவது ஆகும். இப்போது உங்களது வலது மூட்டுக்கு இடையில் ஒரு கை மற்றொரு கையின் கை முட்டியை பிடிக்குமாறு நன்கு இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும். உங்களது வலது கால் மடக்கிய நிலையில் நெஞ்சுடன் ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் காலை சற்று உயரமாக தூக்கி, உங்களது காலை சுழற்ற வேண்டும். இதுவே மூட்டுகளை சுழற்றும் பயிற்சியாகும். இதே மாதிரி பத்து முறை வலது புறமும், பின்னர் இடது புறமும் செய்யலாம். ஆரம்பத்தில் நீங்கள் கால்களை சுழற்றும் போது சிறிய வட்டமாக சுழற்ற தொடங்கி பின்னர் நாளடைவில் உங்களது கால்கள் நெகிழ்வு தன்மை பெற்று பெரிய வட்டமாக சுற்றலாம். இந்த பயிற்சியை நேர் புறம் 10 முறையும், எதிர்ப்புறம் 10 முறையும் செய்யலாம். கடிகார சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த பயிற்சியானது முட்டிகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு பின்னர் மெதுவாக இறுக்கத்தைத் தளர்த்துவது ஆகும். இதற்கு கீழே அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களது முட்டியை இறுக்கி பின்னர் மெதுவாக இறுக்கத்தை தளர்த்த வேண்டும். இதுபோல் இருபதிலிருந்து முப்பது முறை வரை செய்யலாம். இந்த பயிற்சி செய்யும் போது உங்களுக்கு தசை இயக்கம் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை பயிற்சி செய்த பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்போது நமது ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இந்த மூன்று பயிற்சிகளும் மூட்டு வலியைப் போக்க நமக்கு உதவுகிறது. மூட்டுவலி உள்ள நபர்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu