Foods that affect sleep at night- இரவில் நிம்மதியாக தூங்கணுமா? - இந்த உணவுகளை தவிர்த்திடுங்க!

Foods that affect sleep at night- இரவில் நிம்மதியாக தூங்கணுமா? - இந்த உணவுகளை தவிர்த்திடுங்க!
X

Foods that affect sleep at night- தூக்கத்தை பாதிக்கும் உணவுகள் பற்றித் தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)

Foods that affect sleep at night- இரவில் நிம்மதியாக தடையின்றி தூங்கினால்தான், அடுத்த நாள் பொழுது ஆரோக்கியமாக செயல்பட முடியும். அதற்கு இரவில் தூக்கத்தை கெடுக்கும் இந்த வகையான உணவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

Foods that affect sleep at night- இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்திற்கும், தூக்கத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய உணவுகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.


1. தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.

2. இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.

3. கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதனை இரவில் உட்கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.

4. இரவு தூங்குவதற்கு முன்பு பாலாடைக்கட்டி உட்கொள்வது தூக்கத்திற்கு தடையாக அமையும். அதிக நேரம் விழிப்பு நிலையில் இருக்க வைத்துவிடும்.

5. துரித உணவுகளுடன் உட்கொள்ள வழங்கப்படும் கெட்ச்சப்பை இரவில் தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.


6. இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.

7. ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.

8. இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

9. காபியில் இருக்கும் காபினின் வீரியம் எட்டு முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். எனவே இரவில் காபியை தவிர்ப்பதன் மூலம் காலையில் தூங்கி எழுவது வரை காபினின் ஆற்றல்மிக்க செயல்திறனை கட்டுப்படுத்திவிடலாம்.

10. இனிப்பு அதிகம் கலந்து தயாரிக்கப்படும் தானிய வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம். அல்லது சர்க்கரையின் அளவை வீழ்ச்சியடைய வைக்கலாம். அதன் தாக்கம் தூக்கத்திலும் எதிரொலிக்கும். தூக்கமின்மையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.


11. இரவில் பீர் அருந்துவதும் தூக்கத்தை பாதிக்கும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும்.

12. இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.

13. இரவு உணவிற்கு பிறகு இனிப்புகளை சாப்பிட விரும்பினால் டார்க் சாக்லேட்டை அறவே தவிர்க்க வேண்டும். இதில் காபின் இருப்பது தூக்கத்தை தடுக்கும்.

14. புரதம் அதிகம் உள்ள உணவுகளில் டிரிப்டோபான் குறைவாக இருக்கும். அதன் காரணமாக செரோடோனின் அளவும் குறையும். இரவில் அத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் தூக்கம் தடைபடும்.

15. இரவில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுவலி மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.


16. பீட்சாவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டியில் உள்ள கொழுப்பு மற்றும் தக்காளி சாஸில் கலந்திருக்கும் அமிலங்கள் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இரவில் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

17. பகலில் நிறைய தண்ணீர் பருகலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

18. புதினா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இரவில் புதினா வகை உணவுகள், புதினா மிட்டாய் சாப்பிடுவது தூக்கத்திற்கு நல்லதல்ல.

19. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு அதிகமாக உணவு உட்கொள்வதும் தவறானது. அது ஜீரணமாவதற்கு இரவு முழுவதும் உடல் போராட வேண்டி இருக்கும். அதன் காரணமாக தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். காலையில் சோர்வாகவும், மோசமான மனநிலையிலும் எழுந்திருப்பீர்கள்.

20. வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.

Tags

Next Story
ai in future agriculture