அற்புதங்கள் செய்யும் ஆளி விதை: வாங்க பார்க்கலாம்..
Ground Flax Seeds Meaning in Tamil-ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதை உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும். இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம்.
ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும்
ஆளிவிதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம். இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமல்லாமல், உடல் எடையைக் கச்சிதமாக வைத்திருக்கவும் உதவும். இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.
- லிக்னன்ஸ் எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும். அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.
- குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம்.
- ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதைதான் சிறந்த தேர்வு.
- இது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. பசியைக் கட்டுப்படுத்தி, நிறைவைத் தந்துவிடும்
- ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுப்படும்; முடி வளர்வதற்கு உதவும்.
- ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
பக்கவிளைவுகள்
ஆளி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்னர் அதிக அளவில் நீர் பருகவில்லை என்றால் மலச்சிக்கல், வாய்வு போன்ற உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
கர்ப்ப காலங்களின் ஆரம்பகட்டத்தில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதித்துவிடும்..
ஆளி விதைப் பொடியை உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது?
சப்பாத்தி மாவு, தோசை மாவுகளில் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
மில்க் ஷேக், ரைத்தா, ஓட்ஸ், கஞ்சி, சூப், சாலட், மோர், குழம்பு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- What is Flax Seeds in Tamil
- Flaxseed Tamil Name
- Ground Flax Seeds Meaning in Tamil
- Flax Seeds in Tamil Meaning
- Flax Seed Meaning in Tamil
- Flaxseed Tamil Meaning
- Alsi Meaning in Tamil
- Flax Meaning in Tamil
- Flaxseed Meaning in Tamil
- aali vithai in tamil
- flax seeds benefits in tamil
- flax seeds meaning in tamil word
- linseed meaning in tamil
- aazhi meaning in tamil
- flaxseed health benefits in tamil
- aali vithai benefits in tamil
- flaxseed benefits tamil
- flaxseed oil in tamil
- flaxseed oil tamil name
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu