Tamil First Night: இல்லற வாழ்வு இனிதாய் தொடங்கும் நல்லிரவு
காட்சி படம்
இந்தியப் பண்பாட்டில் திருமண வாழ்வைத் தொடங்கும் புதுமணத் தம்பதியர், திருமணத்தன்று வரும் இரவை தனியறையில் கழிப்பர். அந்த இரவு அவர்களின் முதலிரவு என அழைக்கப்படும். புதுமணத் தம்பதியரைத் தனியறைக்கு அனுப்பும்முன் சில சம்பிரதாயச் சடங்குகள் நடத்தப்படும். இச்சடங்குகள் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்தச் சடங்கைத் தொடரும் இரவு 'சாந்தி முகூர்த்தம்' என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
இழை அணி சிறப்பின் – பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர், நமக்கு ஈத்த, தலைநாள் இரவின்
என்கிறது அகநானூறு பாடல் ஒன்று. இதில் தலைநாள் இரவு என்பது முதலிரவை குறிக்கிறது
இந்திய சமூகத்தில் திருமணங்கள் மிகப்பெரும்பாலும் இரு குடும்பத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டே நடைபெறுகின்றன. பொதுவாக மணமக்கள் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாகப் பழகுவதும், உடலுறவு கொள்வதும் நடப்பதில்லை. எனவே திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தமது இல்லற வாழ்கையை சிறப்புடன் அமைத்துக்கொள்ள குடும்பத்தினரால் தரப்படும் ஒரு பயிற்சியாக 'முதலிரவு' கருதப்படுகிறது. தம்பதியர் தமது கூச்சத்தை விலக்கி, தமக்குள் நெருங்கிப் பழக இச்சடங்கும் சம்பிரதாயமும் அடிகோலும் என நம்பப்படுகிறது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். அதில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னாலும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கும். இவற்றை சிலர் தெரியாமலேயே செய்தாலும் அதில் இருக்கும் தத்துவத்தை புரிந்து கொண்டு செய்வதில் கூடுதல் பலன்கள் உண்டு எனவே ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் என்பதை அறிந்து அவற்றைத் தெரிந்து கொண்டு முறையாக செய்து, கடைபிடித்தும் வாழ்ந்தால் வாழ்க்கை இனிமை தான்.
மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பது ஏன்?
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். அந்த நேரங்களில், மணப்பெண்ணே! பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பால் தருகிறார்கள்
வாழைப்பழத்தை கொடுப்பது எதற்காக தெரியுமா? மணமகளிடம் வாழைப்பழம் கொடுக்கும் பொழுது, வாழைப்பழம் விதைகள் இல்லாவிட்டாலும் அதன் மூல மரத்தை கொண்டே குலை தள்ளும். அது போல கணவனை மட்டும் சார்ந்தே வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழைப்பழத்தை ஆதாரமாகக் கொடுக்கின்றனர்.
மணமகனுக்கு வாழைப் பழம் கொடுப்பதும் இதே போல ஒரு தத்துவத்திற்காக மட்டுமே ஆகும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வாழை மரத்தை நட வேண்டும் என்றால் அதன் தாய் மரத்திலிருந்து கன்றை தனியாக பிரித்து எடுத்து பக்குவமாக நட வேண்டும். அதே போல ஒரு வீட்டில் வளரும் பெண் குழந்தையை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எனவே மணமகன், மணமகளை வாடி போக விட்டுவிடாமல் பக்குவமாக அரவணைத்து வாழையடி வாழையாய் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொடுக்கின்றனர்.
அதே போல மணமகனுக்கும் பாலை கொடுக்கும் பொழுது கட்டிய மனைவியிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்க கொடுக்கப்படுகிறது. பாலில் தயிரும், நெய்யும் கண்ணுக்கு தெரியாமல் சேர்ந்தே தான் இருக்கிறது. பாலில் இருக்கும் தயிரையும், நெய்யையும் உரை போட்டு பக்குவமாக கடைந்து எப்படி எடுக்கிறார்களோ? அதே போல நீயும் உன்னுடைய மனைவியிடம் இருக்கும் அறிவையும், ஆற்றலையும் பக்குவம் இல்லாமல் அவசரப்பட்டுக் கெடுத்து வைக்காமல் மிகுந்த பொறுமையோடு, பக்குவமாக கடைந்து அவற்றை அவளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு கொடுக்கப்படுகிறது.
திருமணம் முடிந்து முதல் இரவை மனைவியுடன் கழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பல நாட்கள் காத்திருப்பது இயல்பான ஒன்று. பல ஆண்கள் திருமணத்தை மிகவும் விரும்புவதற்கு காரணமே இந்த முதலிரவு தான். ஆனால் முதலிரவு குறித்து ஆண்களிடம் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கிறது. நண்பர்கள் கூறுவது, போலி செக்ஸ் டாக்டர்களின் அறிவுரை, திரைப்பட காட்சிகள் போன்றவற்றை வைத்து முதலிரவு குறித்து உண்மைக்கு மாறான சில கண்ணோட்டத்தை ஆண்கள் வைத்திருப்பர்.
ஆனால் முதலிரவு என்பது முழுக்க முழுக்க செக்ஸ் சார்ந்தது மட்டும் அல்ல. கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பாக முதல் இரவு நடவடிக்கைகளைச் சொல்லலாம். கணவன் மனைவி திருமணத்திற்கு முன்பு பழகி இருப்பார்களேயானால் அவர்களிடையே தொடுதல் போன்றவை நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு கிளர்ச்சி, பதற்றம் மிக மிக குறைவாக இருக்கும். முதன் முதலில் இருவரும் தனி அறையில் சுகம் காண்பவர்களுக்கு பதற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
பதற்றத்தை திசை திருப்பும் வகையில் இருவரும் நன்கு மனம் விட்டு பேசலாம். பேசும் போது உடல் உறவில் அவரவர் விருப்பத்தை அறியலாம். இருவரும் மனமொத்து, மனம் விட்டு பேசினாலே போதும், இனிமையான இல்லற வாழ்க்கை அமையும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu