துயரம் என்பது விடை காண முடியாத புதிர், Feeling quotes Tamil
காட்சி படம்
துயரம் என்பது மனிதர்களின் அடிப்படையான உணர்வுகளில் ஒன்று. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி துயரம் பற்றி கூறுகையில், துயரம் என்பது புரிந்துகொள்ள முடியாதது எனவும், அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் ஒருபோதும் ஈடுசெய்ய இயலாதவை என்றும் அவர் அழுத்தமாய் வெளிப்படுத்தினார்.
தஸ்தாயேவ்ஸ்கியின் நாவலில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒரே நேரத்தில் பேசினாலும், துயரம் என்னும் கருவினை அவர் தொடர்ச்சியாக ஆராய முற்பட்டிருக்கிறார். துயரத்தை வாழ்வின் ஒரு பகுதியென ஒப்புக்கொள்ளும் அவரது மனப்பாங்கு, வாழ்க்கை என்பது முடிவற்ற ஒரு பயணம் எனவும் அதை தொடர வேண்டியதன் அவசியத்தை கூறுகிறார்.
துயரம் குறித்த கேள்விகளுக்கு, பதிலைவிட பதிலைக் கண்டறியும் தேடல் முக்கியம் எனவும் கூறுகிறார்
துயரம் வருவது வரட்டும், அதனை நாம் எதிர்கொள்வோம் என்ற சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவோம்.
சோகம் பற்றிய தத்துவங்களை பார்ப்போம்
கவலை இல்லாத மனிதர் இருவர். ஒருவர் கருவறையில்.. மற்றொருவர் கல்லறையில்..
எளிதில் கிடைப்பதில்லை.. எல்லா சூழ்நிலைகளிளும் நம்மை புரிந்துகொண்டு நம்முடன் நமக்காக இருக்கும் உறவுகள்...
கவலைப்படத் தொடங்கும் தருணத்தில் நாம் எப்போதும் காயப்படுகிறோம்..
வாழ்வதற்கு ஆயிரம் காரணம் கேட்கும் மனம் தான்.. சாவதற்க்கு ஒரு காரணம் போதும் என்கிறது..
எத்தனை உறவுகள் இருந்தாலும், நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உறவு நம்மோடு இல்லையெனில் வாழ்க்கை சற்று கடினம் தான்..
தவறை சரியாக செய்தவன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.. நல்லதை தவறாக செய்தவன் தலை குனிந்து நிற்க்கிறான்..
அதிகம் நம்பிக்கை வைக்கும் இடத்தில் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்..
வாழ்க்கை என்று வெறுத்துப் போகிறதோ.. அன்று தான், ஒவ்வொருவரும் மரணத்தை விரும்ப ஆரம்பிக்கின்றனர்..
நேரம் காயங்களை ஆற்றவில்லை என்றாலும், அது வலியை பழக்கப்படுத்தும் அளவுக்கு பழையதாக ஆக்குகிறது..
எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால் அது யாருக்காக என்பதில் மட்டும் கவனமாக இரு..!!
அதிகமாக எதிர்பார்ப்பது நம்மை நாமே காயப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்..
நான் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை வாழ்க்கை எனக்குக் கற்றுத் தருகிறது..
நாம் பெரிய மனிதர்களாக வேண்டும் என்ற பெரிய முயற்சியில், சிறிய மனிதர்களாகி விடுகிறோம்..
அன்பின் ஏணியில் நாம் எவ்வளவு அதிகமாக ஏறுகிறோமோ, அவ்வளவு கடினமாக நாம் விழுகிறோம்...
புன்னகையை விட கண்ணீரை நம்பலாம். ஏனென்றால் ஒவ்வொரு கண்ணீருக்கும் பின்னால் ஒரு உண்மையான காரணம் இருக்கும்.
என்னைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எவரும் என்னுடன் பழகவில்லை..
என்னை மறந்துவிடும் அளவிற்கு நானும் எவரிடமும் பழகவில்லை..
வாழ்க்கையில் கடினமான பகுதி, புன்னகையை போலியாகக் காட்டவும், கண்ணீரை நிறுத்தாமல் மறைக்கவும் முயற்சிப்பது.
சோகம் துன்பம் ஆகிய
இரண்டுமே நம் வாழ்வின்
நிலையற்ற இருகண்ணாடிகள்.
அவற்றை கடந்து
வாழ பழகிக் கொண்டால்
அதை விட சிறந்த பாடம்
வேறு ஏதும் இல்லை
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது.
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான்
நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்
உன்னாலே என்னுள்ளே சுமையான இந்த தீர்க்க முடியாத சோகங்கள் நாள் செல்ல செல்ல இந்த நினைவினில் சுமக்க இயலாத பெரும் பாரங்களாகி விட்டது.
நிஜம் என்ற உலகம் சற்று வித்தியாசமானது தான். இங்கு பொய்யர்களுக்கே வாழ்க்கை உண்மைகள் யாவுமே வேடிக்கை வினோதங்கள் தான்.
இருக்கும் இடத்துக்கு தகுந்த மாறி தோற்றத்தை வேண்டுமானால் எளிதாக மாற்றி கொள்ளலாம்.. ஆனால் காயப்பட்ட மனதில் உள்ள எண்ணங்களையும் வலிகளையும் எந்த சூழ்நிலையிலும் மாற்ற இயலாது
சோகம் என்ற ஒன்றை உனக்குள் உணராதவரை இங்கு நடக்கும் அனைத்தும் உனக்கு வேடிக்கை வினோதங்கள் தான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது உன் முன்னால் இருப்பவர்களுக்கு மத்தியில் சிரித்து வாழ்வது அல்ல. நீ தனியாக இருந்தாலும் எதை கண்டும் கவலை கொள்ளாமல் சோகம் இல்லாமல் வாழும் வாழ்க்கையே
வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவித்தால், வாழ்க்கை இங்கு சுகமாகிவிடுகிறது.
கண்ணதாசன் வரிகளில் வருவது போல,
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க என்ற நல்ல சிந்தனையுடன் நடைபோடுவோம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu