உணர்வுகள் ,வலிகள் இல்லாத வாழ்க்கை உண்டுங்களா... படிங்க..

Feeling Quotes in Tamil
X

Feeling Quotes in Tamil

Feeling Quotes in Tamil-வாழ்க்கைன்னாவே இன்பமும் துன்பமும் கலந்ததுதானங்க... இதில் உணர்வுகள்,வலிகளும்அடக்கமுங்க... வாங்க ... பார்ப்போம் வாசகங்களை

Feeling Quotes in Tamil

வாழ்க்கை என்பது ஆத்மார்த்தமானது. ரசித்து ருசித்து வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். எப்போதுமே சலிப்புத்தன்மை உங்கள் மனதில் குடி கொண்டால் எந்த வாழ்க்கையுமே இனிக்காதுங்க.. கொஞ்சமாவது நமக்கு ரசிப்பு தன்மை இருக்கணும். இல்லாவிட்டால் நாம வாழறது வேஸ்ட்தானுங்க.ஆமாங்க .. வீட்டில் பெண்கள் சமையல் செய்யும்போது கூட ஒரு வித ஆவலோடு செய்தால்தான் அந்த சமையலும் ருசிக்கும்.அது எப்படிங்கனு...கேட்கறீங்களா... ஆமாங்க ஏதோ வேண்டா வெறுப்பா செஞ்சா அது டேஸ்ட் இல்லாம போயிடும். எந்த ஒரு வேலையிலும் நம்முடைய ஆத்மார்த்தமான பங்களிப்பு இருக்கணும்.இல்லாவிட்டால் அந்த செயல் ஜெயிக்காது.. இதுதாங்க அடிப்படை.. அது எந்த வேலையாகட்டும்..

அந்த வகையில்தான் நான் சமையலை சொல்கிறேன். உங்களுடைய ஈடுபாடு இருந்தால்தான் அந்த பதார்த்துக்குண்டான பொருட்களை சரியான விகிதத்தில் கலப்பீர்கள். அதைவிடுத்து சமையல் செய்யும்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்தால் அவ்வளவுதான்...அருமையான டேஸ்டாகிவிடும்...அதாவது அந்த பதார்த்தம் வேஸ்டாகிவிடும்.

அதாவது வாழ்க்கையை ரசிச்சு வாழணுங்க... பிறந்தோம் வளர்ந்தோம்னு வாழாம ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழக்கற்றுக்கொண்டால் வாழ்க்கை முழுவதும் இனிமைதாங்க. கஷ்டத்தையும் மனப்பக்குவத்தோடு ஏற்றுக்கொண்டு அதனை போக்க வேண்டும். மூளையில் போய் உட்கார்ந்துவிடக்கூடாது. எனவே உங்கள் வாழ்க்கையினை எப்படி வழிநடத்துவது? என்பது நீங்கள் போடும் திட்டத்தில்தானுங்க உள்ளது. பார்த்துக்கங்க.. கஷ்டம், இல்லாம வாழ்க்கை இல்லை... அது அவ்வப்போது வந்து போகும் தற்காலிக நிகழ்வு,... அதுக்காக காலம் முழுக்க வேஸ்ட் பண்ணிடாதீங்க... சந்தோஷத்தோட வாழ்க்கையை அணுகுங்க...



வாழ்க்கையின் உணர்வுகளுக்கான வாசகங்கள் இதோ...

காதலில் இருவரில் ஒருவர் மனம் மாறினால் கூட இன்னொருவரின் வாழ்க்கையே போய்விடும்

தயவு செய்து உண்மையாய் இருந்தால் மட்டுமே காதலியுங்கள் காலப்போக்கிற்காக காதல் செய்யாதீர்கள்...

நீ அடைவதெல்லாம் இறைவனும் இயற்கையும் உனக்குத் தந்த பரிசு இழப்பது எல்லாம் நீ இன்னொருவருக்கு கொடுக்கும் வாய்ப்பு!

ஈரம் பட்ட மண்ணில் விழும் கால் தடங்களை விட காயம்பட்ட மனதில் எழும் வடுக்கள் வார்த்தையில் அடங்காது காயப்பட்ட யாவும் காலத்தின் கையில் நியாயப்படும்! கலங்காதிரு!

காதல் என்னும் மழையில் நனையாதவர்களும் இல்லை பிரிவு என்னும் துயரை அறியாதவர்களும் இல்லை கனவு என்னும் மாயையில் களிக்காதவர்களும் இல்லை நினைவுகள் என்னும் தீயில் கருதாதவர்களும் இல்லை.

விருப்பத்தினால் செய்யும் உதவிகளை விட விளம்பரத்திற்காக செய்யும் உதவிகள் அதிகம்!

அறிஞர்கள் அறிவை தேடுகிறார்கள் அறிவிலிகளோ அதை பெற்றுவிட்டதாக நினைத்துகொண்டு இருக்கிறார்கள்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது அன்று. ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது இன்று.

ஏழை பணத்தை நேசிப்பதில்லை! பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை!

எதிர்பார்க்கும் ஒன்று எதிரில் கிடைக்கும் போது அருமை தெரிவதில்லை! எதிர்பார்ப்பின் ஆர்வம், அது நிறைவேறும் போது இருப்பதில்லை!

கவலைகளை அனுபவிக்கும் போதே தெரிகிறது சிலருக்கு, தாம் இத்தனை நாள் இருந்தது சொர்க்கத்தில் என்று!

கஷ்டப்படும் போது உதவி செய்பவர்களை விட, மேன் மேலும் கஷ்டப்படுத்துபவர்களே இங்கு ஏராளம்!



இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்!

காயங்களை சுமந்தவன், கனவுகளை இழப்பதில்லை! கண்ணீருடன் இருப்பவன், கனவுகளை வெறுப்பதில்லை!

நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்!

வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

முகம் பார்த்து பேசினாலே போதும். இங்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் அதை யாரும் செய்வதே இல்லை!

எதிர்பார்த்தது நடக்காமல் போவதும், எதிர்பார்க்காதது நடப்பதும் தான் வாழ்க்கை.

நாம் எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்றும், நாம் எதிர்பார்த்த போது நடக்காத ஒன்றும் தான் நம் மனக்குமுறலுக்கு காரணம்!

விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது! சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது!

மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்! மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை!

இதுதான் சரி என்று உங்கள் மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்கும். சற்றும் தயங்காமல் அதை நடைமுறை படுத்துங்கள்!

எண்ணம் போல் வாழ்க்கை Quotes

எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை!

பிடித்ததை எடுத்து, பிடிக்காததை விடுத்து மகிழ்ச்சியாக இரு... என்பதே வாழ்க்கை!

கோபத்தில் கண்டதை தூக்கிப் போடுவதைவிட, அந்த கோபத்தையே தூக்கிப் போடுங்கள்.. வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்!

வாழ்நாளெல்லாம் அடிமையாக தொட்டிக்குள் வாழ்வதைவிட பிடிபட்ட அன்றே சட்டியில் குழம்பாக கொதிப்பது மேல்

உனது வலிகள் நீ யார் என்பதை தீர்மானிப்பதில்லை அந்த வலிகளிலிருந்து நீ எப்படி மீண்டு வருகிறாய் என்பது தான்.

எட்ட வரும் வாய்ப்புகள் ஏற்றிச் செல்லும் வரை காத்திருங்கள், பயணங்கள் பாதைகளாக மாறும்...

வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே!

அவமானம் படும்போது அவதாரம் எடு, வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு, புண்படுகின்ற போது புன்னகை செய், வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துக் காட்டு...

இன்று யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பின்பு யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

"நான்" என்கின்ற ஆணவம், 'அவனா' என்ற பொறாமை, "எனக்கு" என்கின்ற பேராசை இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது!

பெரும்பாலும் முதல் சிந்தனை, தெளிவற்றதாக இருக்கும் எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்!

பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் - மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!

கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது!

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்க கவலையென்பது இல்லை!

உன்னைவெறுப்பவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்!

உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே..! அவர்கள் முன் வாழ்ந்து காட்டு! மகிழ்ச்சியாக, நிம்மதியாக..!

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்! இல்லையேல், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்...

"உன் வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை!

வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்!

நேசிக்க யாருமில்லாத போது, நம்மை யோசிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை!

வாழ்கையின் இரு பகுதிகள் - 1. எதிர்காலத்தின் கனவு, 2. கடந்த காலத்தின் நினைவு

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!

கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்கு தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று!

பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள். இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்!

உயிர் வாழக் கற்றுக்கொள் போதும். எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்.

அடுத்தவர் உணர்வுகளை புரிந்துவிட்டால், உதிரங்கள் கண்ணீர் ஆகாதோ?

கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை!

தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை! இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை! ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கை!

யாரையும் கஷ்டப்படுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம்! நாம சந்தோஷமா இருக்க யாரையும், கஷ்டப்படுத்தவும் வேண்டாம், நீ நீயாக இரு!



அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு!

பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ளமாட்டாள்! அவள் சிக்கிக்கொள்வதெல்லாம் அவளிடம் மட்டுமே!

வாழ்கையில் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், அந்த கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை!

மரத்தின் இலைகள் உதிர்வது போல, காலம் மாறும் போது சில கவலைகளும் தானாகவே உதிர்ந்து விடும்!

எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ளாதீர்கள்.. ஏனெனில் இங்குப் பணிவுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம்தெரியாத மேதாவிகள் உண்டு!

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாற வேண்டி வரும்.

பணத்தை வைத்து எந்தவொறு உறவையும் / மனிதரையும்தாழ்வாக கருதாதீர்கள்..! ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது..நொடியில் அனைத்தும் மாறிவிடும்..

தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை ஆனால்ஆசைப்பட்ட பிறகு, அதை அடைய, உன் தகுதியை வளர்த்து கொள்ளாமல் இருப்பதே தவறு.

வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடும்!

ஒருவர் உன்னை பிடிக்கும்என்று சொல்லிவிட்டால்வாழ்க்கை முழுவதும் பிடிக்கும்என்று நினைத்து விடாதே இன்று பிடிப்பவர்களுக்கு நாளை பிடிக்காமல் கூட போகலாம்...

உலகில் நாம் விரும்பும் அத்தனையும் இரு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு....


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா