Fatty Liver Disease - கொழுப்பு கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருங்க!
Fatty Liver Disease - கொழுப்பு கல்லீரல் பிரச்னை (மாதிரி படங்கள்)
Fatty Liver Disease -கொழுப்பு கல்லீரல் பிரச்சினை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என அழைக்கப்படுகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும்போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. உங்கள் கல்லீரலில் சிறியளவு கொழுப்பு இருந்தால் பிரச்சினை கிடையாது, ஆனால் கொழுப்பு அதிகமாக இருந்தால் அது உடல்நலப் பிரச்சினையாக மாறும். ஏனென்றால் உங்கள் உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல் தான்.
கல்லீரல் நீங்கள் சாப்பிடும் உணவும் மற்றும் குடிக்கும் பானங்களில் இருந்து ஊட்டச்சத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டுகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு இருந்தால் வீக்கம் ஏற்படும். கொழுப்பு கல்லீரல் பிரச்சினை சரி செய்யப்படவில்லை என்றால் அது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
சாப்பிடக் கூடாதது
கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் பிற கல்லீரல் நோய்களுக்கு மது அருந்துவது முக்கிய காரணமாக இருக்கலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருக்கும் போது சர்க்கரை அதிகம் கொண்ட மிட்டாய், குக்கீ, சோடா மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கல்லீரலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்.
அதிகமாக உப்பு உட்கொள்வதும் கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை அதிகமாக்கிவிடும். இதனால் தினமும் 2,300 மில்லிகிராம்களுக்கும் குறைவாக உப்பு உட்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் தினமும் 1,500 மில்லிகிராம்களுக்கு மேல் உப்பு உட்கொள்ள கூடாது.
ரொட்டி, பாஸ்தா போன்ற உணவுகளில் நார்ச்சத்தே இல்லாத அதிக பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திரிகரிக்கப்பட்ட தானியங்கள் இருக்கின்றன.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் உருவாகவும் வாய்ப்பு அதிகம்.
மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம் உள்ளது. கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருந்தால் எக்காரணம் கொண்டும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது. அது உயிருக்கே ஆபத்தாகி விடும்.
சாப்பிட வேண்டியவை
வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு உதவும். வால்நட் சாப்பிடுவது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிக காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு கல்லீரல் பிரச்சினைக்கு ப்ரோக்கோலி ஒரு காய்கறி ஆகும். இது உடல் எடையை குறைக்க உதவும். கேரட், பூசணி, இலை கீரைகள், பீட்ரூட், காலிஃபிளவர், பச்சை வெங்காயம் மற்றும் செலரி போன்ற மற்ற காய்கறிகள் கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
அதிகமாக சாப்பிட வேண்டிய உணவுகள்
இலைவடிவ காய்கறிகளும் பச்சை காய்கறிகளும்,
மிதமான அளவில் காபி,
சோயா பொருள்கள்,
ஓட்மீல்,
ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள்,
நட்ஸ்,
சூரியகாந்தி விதைகள்,
மஞ்சள்,
பூண்டு,
நெல்லிக்காய்,
வெங்காய விதைகள்,
ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் கீழ்வரும்உணவு வகைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால்,
வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்,
சர்க்கரை சேர்த்த உணவுகள்,
உப்பு அதிகமுள்ள உணவுகள்,
அரிசி, மைதா உணவுகள்,
சிவப்பு இறைச்சி
வாழ்க்கை முறை மாற்றங்கள்
உடலை எபபோதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேணடும்.
தினசரி உடற்பயிற்சி மிக அவசியம்.
எடுத்துக் கொள்ளும் கலோரிகளை கணக்கிட்டு கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின்களும் மினரல்களும் கட்டாயம் உணவில் இருக்கும்படி சரிவிகித உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மது அருந்துதல், புகை பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கல்லீரலை பாதிக்கும், கல்லீரலில் நச்சுக்களை தேக்கும் உணவுகள், மருந்துகள், சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பக வலி நிவாரணிகளை மருத்துவப் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வதுது கல்லீரல் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.
குறிப்பிட்ட இடைவெளிகளில் கல்லீரல் பரிசொதனைகள் செய்யப்பட வேண்டும். அது கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றைத் தவிர்க்கவும் முன்னமே கண்டறியவும் உதவி செய்யும்.
குறிப்பு; செய்தியில் இடம்பெற்ற அனைத்தும் கோப்பு படங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu