Fathers day quotes in Tamil: அப்பாவின் அன்பிற்கு முன் ஆண்டவனும் தோற்றுபோவான்

Fathers day quotes in Tamil: அப்பாவின் அன்பிற்கு முன் ஆண்டவனும் தோற்றுபோவான்

கோப்புப்படம் 

தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தையை கௌரவிக்கும் விதமாக தந்தையர் தின வாழ்த்துகள்

ஒருவரின் வாழ்க்கையிலும் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கிற்கும் முக்கியத்துவம் உண்டு.

முதலில் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டது, பின்னர் அது ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தந்தையர் மீது தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவார்கள். தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில அழகிய வாழ்த்துகள் உங்களுக்காக.

வாட்ட வந்த வறுமையை சிறிது பேசி

வலி அனுப்பி வைத்த என் தந்தைக்கு

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்

எத்தனை ஜென்மங்கள் கிடைத்தாலும் உங்கள்

பிள்ளையாக பிறகும் வரம் வேண்டுகிறேன்

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்

இனிய தந்தையர் தினம்

இது போன்ற ஒரு அற்புதமான வாழ்வை

வழங்கிய என் அப்பாவிற்கு நன்றி கூறி

இனிய தந்தையர் தினம் வாழ்த்துகிறேன்

ஆணாக பிறந்த யாருவேண்டுமானாலும்

அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த

தந்தையாக சிலரால் மட்டுமே இருக்க முடியும்

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்

என் அப்பாவின் இதயம் தான்

இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்


வாழ் நாள் முழுவதும் பிள்ளையை சுமத்த கதையை

ஒரு முறை கூட சொல்லி காட்டிடாத அப்பாவிற்கு

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

என்னை கஷ்டங்களை சந்திக்க விட்டு

எதிர் கொள்ள துணை நிற்கும் என் அப்பாவிற்கு

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்

தன் பிள்ளைகளின் கனவுகளையும்

ஆசைகளையும் நிறைவேற்ற தன்னை

மறந்து உழைக்கும் அனைத்து அப்பாவிற்கும்

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


எத்தனை செல்வங்கள் வந்தாலும் உன் விரல் போல் ஆதரவு இல்லை தந்தையே

விடு விடு.. வாழ்க்கை முழுவதும் விட்டு கொடுக்கும் பெரிய உள்ளம் உனக்கு தந்தையே

மழலையில் கைபிடித்து வாழ்க்கையின் பாதைக்கு அழைத்து சென்ற அப்பாவை நினைவில் கொள்வோம்.

மழலையின் சிரிப்பில் வாழ்க்கையை தொலைத்து, தியாகத்தின் செம்மலாய் நிமிர்ந்து நிற்கும் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அன்பை, ஆசைகளை, ஆதரவுகளை தன்னலமின்றி வெளிப்படுத்தும் தன்னிகறற்ற உறவு தந்தை

நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.

தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்.

நான் தெய்வத்திடம் வேண்டினேன், “என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் தேவை…!”

தெய்வம் சொன்னது, “மிகவும் பேராசை கொள்கிறாயே என்று…!”.


நான் அறிந்த கட்டபொம்மனும், கர்ண மகாராசனும்

எல்லாமே எனக்கு என்னுடைய அப்பாதான்.

எனது எதிர்காலத்துக்கு

இன்றும் சொல்லத் தெரிந்தது

“அப்பா போல வரணும்.”

சாதாரண மனிதர்களாக இருக்கும் அப்பாக்கள் அன்பால் ஹீரோக்களாக, சாகசக்கரர்களாக, கதை சொல்பவர்களாக, பாடகர்களாக பல அவதாரம் எடுக்கிறார்கள்.

இந்த உலகத்திற்கு நீங்கள் சாதாரண மனிதர் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள்தான் விடியல் என்பது எனக்குதான் தெரியும்.

அன்புள்ள அப்பாவுக்கு எனக்கு இது போன்ற ஒரு அற்புதமான வாழ்க்கையை வழங்கியதற்கு நன்றி. எனக்கு எப்போதும் சிறந்தவற்றைப் மட்டுமேநீங்கள் வழங்கியுள்ளீர்கள்.

Tags

Next Story