உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் போலி உறவுகளின் வாசகங்கள் ...இதோ..

Fake Relation Quotes in Tamil
X

Fake Relations Quotes in Tamil

Fake Relation Quotes in Tamil-உறவுகள் ஒரு தொடர்கதை. இக்கால உறவுகளில் உண்மைத்தன்மை குறைந்து போலித்தன்மை அதிகரித்துவிட்டது. போலி உறவுகளுக்கு பஞ்சமில்லை....

Fake Relationship Quotes in Tamil

Fake Relation Quotes in Tamil-மனிதர்களாக பிறந்த யாவருக்கும் உறவுகள் என்பது பிறவியில் இருந்தே உண்டு. இதில் ஒரு சில உறவுகள் மட்டுமே நிஜம் மற்றவையனைத்துமே போலியானது என்பதை ஒரு சில செயல்களில் உணர்கிறோம்.


மனிதனாக பிறக்கும்போதே பல உறவுகள் உருவாகி விடுகிறது.இந்த உறவுகள் அனைத்தும் நம் வாழ்நாளில் பெருகி பரந்து விரிந்து விடுவதோடு நம் இறுதிக்காலத்தில் உறவுகளின் முடிச்சு வலிமையாகி விடுகிறது என்பதை நம் வாழ்நாளில் நாம் கண் கூடாக காண்கிறோம். ஒரு சில உறவுகள் அவர்களுக்கு தேவை என்றால் மட்டுமே நம்மிடம் பேசுவதும்வேலை முடிந்த பின் விலகிப்போவதுமாக இருக்கிறார்கள்.

வெளியில் பேசும் வார்த்தைகளில் தேன் தடவியது போல் பேசிவிட்டு உள்ளே நஞ்சை வைத்திருக்கும் உறவுகள்தான் போலி உறவுகள் என சொல்லப்படுகின்றன. இதுதான் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் குணம் உடையவர்கள்என்றும் சொல்லப்படுகிறது. இவர்களிடம் நாம் அ னைவருமே உஷாராக இருக்க வேண்டும்.

உறவுகள் அனைத்தும் நிஜமா? உண்மையில் உறவுகள் நிஜ பாசத்தோடு பழகுகிறார்களா? அல்லது போலி பாசத்தினால் உறவுகளை தொடர்கிறார்களா? என்பது நமக்கு நாள் பட நாள் படவே புரியும். தெரியும் ., இந்த காலத்தினைப்பொறுத்தவரை உறவுகள் அனைத்தும் துாரத்தினையே மெயின்டெயின் செய்கின்றனர். கல்யாணம், காட்சி என்றால் மட்டுமே தலை காட்டி விட்டு பின்னர் நல்லது கெட்டதுக்கு மட்டும் தலை காட்டுவர். நடுவில் எந்த பேச்சும்இருக்காது. அக்கால உறவுகள் வலிமையானவை . போலிகள் என்பதை காண முடியாது. மனதில் பட்டதை பேசும் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்கால உறவுகள் அனைத்துமே உதட்டில் ஒன்று மனதில் ஒன்று வைத்து பேசுவதினால்தான் சிக்கலே.

உறவுகளைப் பற்றி அர்த்தமுள்ள வரிகள் தமிழில் காண்போம்.



* ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க.. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.

*நீ கேட்டு வாங்கும் அ ன்பு கடைசி வரை வருவதில்லை

*நிரந்தரம் இல்லாத உலகம், யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் நிஜம்

*சில உறவுகள் நம்முடன்இருப்பதை விட விலகிச்செல்வதே நல்லது

*தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்புஇருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்

*தனிமையானது..... எதை புரிய வைக்குதோ இல்லையோ இவ்வளவு நாள் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கோம்னு புரிய வச்சுடுது.

*உன்னிடம் அன்பாக பேசும் அ னைவருமே, உண்மையாக உன் மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே ... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.

*நேசிக்க தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

*நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவங்களா தெரிஞ்சா போதும் எல்லோருக்கும் நிரூபித்து காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை.

*ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இரு்க்காதீர்கள்.

*அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.

*துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் துாவப்படுகிறது.

*போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும் உங்களுக்கு பின்னால் கெட்டதும் பேசுவார்கள்.

*உங்கள் வாழ்க்கை போலி மனிதர்களால் நிறைந்திருக்கும்போது யாருக்கு எதிரி தேவை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story