கொரோனாவுக்கு முகக்கவசம். போலி மனிதர்களுக்கோ முகமூடி Fake people quotes in Tamil
போலிமனிதர்கள்
Fake People Quotes in Tamil -போலி மனிதர் என்றால், வேற்று கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டில் வந்திறங்கிய ஏலியன்கள் இல்லை. அவர்கள் நம்முடன் இருப்பவர்கள் தான். எல்லா மனிதர்களும் நமக்கு நல்லவர் / தீயவர் என்கிற எளிய கோட்பாட்டில் அடங்கியே ஆக வேண்டும் என்று விதியோ, சட்டமோ உலகில் இல்லை.
ஓவ்வொரு மனிதனிடமும் இரண்டு மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒன்று அக மனிதன் அவருடன் அவர் மட்டும் தான் பேச முடியும் வாழமுடியும். இரண்டாவது புற மனிதன் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு அவதாரம் எடுப்பார். பெரும்பாலும் பொய் தான்.
ஒருவருடைய பேச்சோ, நடத்தையோ நமக்கு வருத்தமோ, தொந்திரவோ அளித்தால், அவரிடமிருந்து ஒதுங்கி விடலாம். ஆனால், அதற்கு முன்பாக, பிரச்சினை உண்மையிலேயே பிரச்சினைக்கு காரணம் மேற்படி ஆசாமியால் மட்டுமே உருவான பிரச்சினையா, அல்லது நம்முடைய எதிர்பார்ப்பு, நம்பிக்கை, முன்முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவற்றால் விளைந்த போலி பிரச்சினையா என்று தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
போலிமனிதர்கள் குறித்த அனுபவ மொழிகள் சில:
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!
அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!
உங்களின் தேவைக்காகவோ
பொழுது போக்கிற்காகவோ பிறரின்
உண்மை அன்பிலும் அவர்களின்
உணர்விலும் விளையாடாதீர்கள்.
போலி உறவுகள் வதந்திகளை நம்புவார்கள்
உண்மையான உறவுகள்
உன்னை மட்டும் நம்புவார்கள்.
சிலவேளைகளில் நம் கூட இருக்கும் உறவுகள்
விஷமாகவும் அல்லது வேஷமாகவும் இருப்பதை
உணர்த்தி விடுகின்றார்கள்.
தேவைக்காக பழகும் உறவுகளை விட
பழி தீர்க்கும் எதிரிகள் மேலானவர்கள்.
எல்லா வகை முகமூடிகளையும்
அணிய தெரிந்தவர்கள்,
வாழ்க்கையில் மிக அழகாக
நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே! உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது
எப்போதும் ஒரு கண் விழித்திருக்கட்டும்.
உங்களுக்கு கை தட்டுபவன் கூட
காலை வாரும் சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்து காத்திருக்கலாம்.
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, நாம் மூன்றாவது மனிதர்கள் தான்
போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள் அவர்கள் உங்களை வெயிலில் பின்தொடர்வார்கள் ஆனால் இருட்டில் விட்டுவிடுவார்கள்
விஷத்தோடு பிறந்த பாம்பின் பிறவி குணத்தை மாற்ற நினைப்பது முட்டாள்தனம். அது போல் தான் சில உறவுகளும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu