பருக்கள் ஏன் வருகிறது? எப்படி வராமல் தடுக்கலாம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Anti Acne Meaning in Tamil
Anti Acne Meaning in Tamil
பொதுவாக சருமத்தில் உள்ள பிலோசெபேசியஸ் சுரப்பிகள் பாதிக்கப்படும் போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. செபேசியஸ் சுரப்பிகள் மூலம் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவம் அதிகமாகச் சுரக்கும் போது சருமத்தில் உள்ள மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்கின்றன. மேலும் சருமத்தின் மேற்புரத்தில் சேரும் தூசு போன்றவையும், இறந்துபோன செல்களும் சேர்ந்து அங்கு வீக்கம் உண்டாகி சருமத்தில் சிவந்த நிறமும் ஏற்படுகிறது.
பருக்கள், வெள்ளைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், சீழ்க் கொப்பளங்கள், வட்ட வடிவக் கொப்பளங்கள், சிறு கட்டிகள், கணுக்கள் போன்ற கட்டிகள் ena பல்வேறு விதமாக வெளிப்படுகின்றன. பலவிதமாக இவை வெளிப்பட்டாலும் பொதுவாக பருக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன. இவை முகம், கழுத்து தோள் பகுதி, மார்பு, கைகள் மற்றும் முதுகு போன்ற உடலின் பல பகுதிகளில் தோன்றலாம். இவை தோன்றும் போது சருமத்தின் வழவழப்புத் தன்மை பாதிக்கப்பட்டு சொரசொரப்பாவது மட்டுமல்லாது பெரும்பாலும் வீக்கம், வடு போன்றவை ஏற்படுகின்றன.
பருக்களின் வகைகள் மற்றும் பிரிவுகள்
பருக்களின் வகை, தீவிரம் மற்றும் பரவியிருக்கும் விதத்தின் அடிப்படையில் பருக்களை கீழ்க்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்தலாம்.
பிரிவு 1 – இவற்றில் கரும்புள்ளிகள் வெண்புள்ளிகள் மற்றும் சில கட்டிகள் அடங்கும்.
பிரிவு 2 – பலவிதமான கட்டிகள், சீழ்க்கட்டிகள், மிகத் தீவிரமாக உள்ள கரும் புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள்.
பிரிவு 3 – அதிக எண்ணிக்கையில் கட்டிகள், சீழ்க்கட்டிகள் மற்றும் வீக்கத்துடன் கூடிய கட்டிகள்.
பிரிவு 4 – அளவில் பெரிய, வலியைக் கொடுக்கக்கூடிய சீழ்க்கட்டிகள், கட்டிகள், பெரிய கட்டிகள்
பருக் கட்டிகள் வர பொதுவான சில காரணங்கள்
நமக்கு பருக் கட்டிகள் வர, நமது உடல் சார்ந்த உள்ளார்ந்த காரணங்கள் இருக்கின்றன
பரம்பரை / மரபுவழிக் காரணங்கள்: மரபுவழிக் காரணங்களால் மிகப் பலருக்கு பருக் கட்டிகள் வரும் வாய்ப்பு உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு மிக அதிகமாக பருக்கள் இருந்தாலோ, அல்லது அவர்களது இளைமைப் பருவத்தில் இருந்திருந்தாலோ உங்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம்.
ஹார்மோன்கள் காரணங்களால் நமது உடலில் அதிகமாக எண்ணெய் சுரக்கலாம். நமது உடலின் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் தோன்றும்போது, பருக்கள் தோன்றலாம். சிலருக்கு மாதவிடாய்க் காலம், கருவுற்றிருக்கும் காலம், மாதவிடாய் நிற்கும் காலம் போன்றவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வல்களால் பருக்கள் தோன்றும்.
வெளிப்புறக் காரணங்கள்: நமது சுற்றுச் சூழல் சார்ந்த பல காரணங்களாலும் நமது வாழ்க்கை முறை காரணங்களாலும் பல சமயம் நமது சருமம் மிகவும் பாதிக்கப்படும் போது, பருக்கள் தோன்றினால் பாதிப்பு மேலும் அதிகமாகிறது.
மன அழுத்தம் –மிகுந்த மன அழுத்தம் இருந்தால் நமது சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பிகளின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மருந்துகள் – ஆண்ட்ரேஜென், கார்டிகோஸ்டீராய்ட்கள், லித்தியம் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளாகப் பருக்கள் தோன்றலாம்.
உணவு – அதிக அளவில் கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ணும்போது பருக்கள் ஏற்படலாம்.
அழகு சாதனப் பொருட்கள்: சருமப் பராமரிப்பு பொருட்கள் மற்றும் சில அழகு சாதனப் பொருட்கள் நமது முகத்தில் உள்ள துவாரங்களை அடைத்து விடக்கூடியவை. அவற்றைப் பயன்படுத்தினால் பருக்கள் வரலாம். இவை மட்டுமின்றி கடுமையான ஸ்க்ரப் மற்றும் எக்ஸ்போலியன்ட்கள் பயன்படுத்தும் போதும் சருமத்தின் மேல் அடுக்கு பாதிக்கப்பட்டு, அதனாலும் பருக்கள் தோன்றலாம்.
பருக்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்
- பருக் கட்டிகள் தோன்றுவதற்கான சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் –
- துவாரங்கள் அடைத்துக் கொள்ளுதல் மற்றும் வெண்மையான (அ) ஒளி ஊடுருவக்கூடிய கட்டிகள்.
- கட்டிகள் மற்றும் தடிப்புகள் போன்றவை தோன்றும்போது வீக்கம் மற்றும் அந்த இடம் சிவந்து போகுதல்.
- சீழுடன் கூடிய பருக்கள். தொடுவதற்கு மிருதுவாக இருப்பவை.
- வடுக்கள் மற்றும் கருந்திட்டுக்கள் ஏற்படுதல்.
- ஆழமான சீழ்க்கட்டிகளுடன் கூடிய நீர்க் கட்டிகள்.
இந்தியாவில் மட்டுமே ஒரு வருடத்திற்கு 1 கோடி பேருக்கு பருக்கட்டிகள் வருகின்றன. குடும்பத்தில் முன்னோருக்கு பருக்கள் வந்திருந்தாலும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், வயதுக்கு வரும் பருவமாக இருந்தாலும், கர்ப்பம் தரித்திருந்தாலும், மாதவிடாய் நிற்கும் காலமாக இருந்தாலும் பருக்கள் வர வாய்ப்பு அதிகம்.
மன அழுத்தம், பரபரப்பு போன்றவை இருந்தாலும், உங்கள் வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள் காரணமாகவும், பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம். பருக்கள் அதிகமாக வரத்தோன்றிய உடனேயே விரைவாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். அப்போதுதான் எதிர்காலத்தில் வடுக்கள் ஏற்படாமலும், கருந்திட்டுக்கள் ஏற்படாமலும் இருக்கும்.
பருக்கள் வராமல் தடுக்க
ஒவ்வொரு நாளும் இருமுறையாவது மிதமான ஒரு கிளென்சர் பயன்படுத்தி, முகத்தை நன்கு கழுவவும். முக்கியமாக உடற்பயிற்சி செய்து நன்கு வியர்த்த பிறகு கட்டாயம் முகம் கழுவ வேண்டும்.
கடுமையான இரசாயனப் பொருட்கள் நிறைந்த அழகு சாதனங்கள், சருமப் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்..
எந்தப் பருவையும் அமுக்கவோ, கிள்ளவோ, சுரண்டவோ கூடாது. அதனால் வீக்கம் அதிகமாகலாம் மற்றும் வலி ஏற்படலாம்.
எப்போதும் முகத்தை சன் பிளாக் கிரீம் போட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். சூரிய ஒளி படுமாறு வெளியில் போகும்போதும் மேகமூட்டம் உள்ள நாட்களிலும் கூட கட்டாயம் இதைப் பயன்படுத்தவும்.
எப்போதும் சுத்தமாக இருக்கவும். உங்கள் தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும்.
எப்போதும் நிறைய தண்ணீர் குடிக்கவும். அப்போது உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறும். பருக்கள் தோன்றுவதும் குறையும்.
தானாகவே சிகிச்சை எடுத்துக்கொள்வது தற்காலிகமான பலன்களைத் தரலாம். நீண்டகாலப் பலனைத் தராது. குறிப்பாக மிதமான அல்லது அதிக தீவிரமான பருக்களுக்குத் தாமாகவே சிகிச்சை அளித்தால், வடுக்கள் ஏற்படலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu